
“அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே” வழி நடத்திச் செல்கின்றனர் மகரிஷிகள்
விஸ்வேஸ்வர
மாமகரிஷி அன்னபூரணியின் தாய்மை அருள் நெறியில் மகிழ்ந்து... தன் நிலையில் தான்
இயங்கி… வானவியல் மண்டல கோள் அமைவு சூட்சமம்
1.“முக்கண்
என்றே காட்டிடும் அக்ஷி நிலை கண்டு...” அனுபவித்து... மகிழ்ச்சியுடன் அளிக்க
2.”பிடரிக்
கண்” சூட்சும நிலைதனை திருமூலர் மரபு தென்னாட்டிலே உரைக்க வந்தது.
ஒன்றிலிருந்து
ஒன்று வளர்ப்பாக்கும் வளர்ச்சி நிலை பெறுவதைப் போல் உபதேசிக மூலகாரண நிலை ஒன்று (ஓவ்வொன்றுக்கும்)
முன்பே உண்டு.
மறைபொருள்
தன்மைகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலில்... உன்னுள் செயலுறுகின்ற ஆக்கம்
ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் படைப்பின் படைப்பு என உத்வேக ஊர்த்துவம்… (மேல்
நோக்கிய) உயர்வெண்ணச் செயலில் “சிருஷ்டியின் எதிர்ச்சொல்லான...
முக்தி...” என்ற பேரருள் சூட்சும நிலையைப் பெற்றிடலாம்.
யானை உண்டது
விளாங்கனி. விளாங்கனியை உண்ணுகின்ற யானை தீனியின் செரிமானம் பிண்டி (எச்சம்) என்னும் கழிவாக வெளிப்படுத்துதலில்...
வெளிப்படும் விளாங்கனியின் ஓட்டை உடைத்துப் பார்... அங்கே ஊண் இருப்பதில்லை.
இச்செயல்
எப்படி நடந்தது…?
1.ஒன்றிலிருந்து
ஒன்று உருவாக்கிடும் சிருஷ்டியின் காரண மூலம்
2.ஈர்த்துக்
கொண்டிடும் நல்லணுக்கள் வலுவின் வலு வீரியம் என்பைத் (எலும்பை)
துளைக்கும் ஒளி என்ற காரியம் பற்றியே
3.தன்னுள்
உட்கொண்ட விளாங்கனியைச் செரிமானப்படுத்தும் தன்மையில்
4.அந்தக்
கனியில் ஓர் சிருஷ்டியே யானை ஈர்த்திடும் வீரியத் தொடர்பாக
5.கனிக்குள்
அணுக்கள் தோன்றி அந்தக் கனியை உண்டு விளத்தின் ஓட்டுடன் ஐக்கியப்படுத்துகின்றன.
சிருஷ்டியின்
ஓர் நிலை அங்கு செயலுற்று வெளிவரும் அக்கனி சூரியனின் வெப்ப சக்தி கொண்டு “உருவான
உயிரணுக்கள்” மண் தன்மையினுள் கலந்து பிருத்வி (பூமிக்குள்) கண்டு அண்டத்தில் நுழைகின்றன.
ஒளிமார்க்கச்
செயலில் நாம் செயல்பட வேண்டியது எப்படி…?
மகரிஷிகள்
என்று அழைக்கப்படுகின்ற ஒளி மண்டல ஒளி அணுக்களாகச் செயல் கொண்டு
1.மனித
வித்துக்களை வளர்ப்பின் பயிர் பலனாக்கும் சிருஷ்டியையே
2.ஊர்த்துவ நிலையால்
முக்தி என்ற பெயர் நாமத்தில் அழைத்திடும்
3.அழியாத
ஒளிச் சரீரம் பெற்றிடவே வழி நடத்திச் செல்கின்றனர்.
அந்த
மகரிஷிகள் நடத்துகின்ற செயலில் தேகம் கண்டு கொண்ட தேகி... “தன்னுள்ளேதான் தலைமை
எது…?” என்று அறிதல் வேண்டும்.
உயிர்
அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!
அந்த நிலையை
உணர்ந்து செயல்படுகின்ற ஒவ்வொருவரும் சூட்சுமத்தில் வழி நடத்திடும் ஒளி
அன்பர்களின்... குரு பரம்பரை வழி வரும் சீடர்களப்பா. அந்தச் சீடர்களே கனகம்
(பொன்னான உரையை) உரைப்பவர்கள்.
கார்காலம்
மிகுந்து விடுகின்றது. வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பு என மனிதன் இட்ட மணல் மேட்டினையே மழை நீர்
கரைத்து விடுகின்றது. மணல் கரைத்த விசுப்பதன் (வேகமாக வரும்)
நீர்… மனைக்குள் உள்ளே வராது இருக்க வழி காணல் வேண்டும்
என்று உரைத்தவரப்பா வேதாள மாமகரிஷி.
“முறைகோலுகின்ற
வழியது காண்” என்று ஆணையிட்டே உரைத்த உரை பொருள் அறிந்து
கொள்வதோடு மட்டுமின்றி… அதைக் கடைபிடித்திடும் நல் பாக்கியத்தையே
நாம் பெற்றிருக்கின்றோம்.
எந்த
நிலையிலும் இந்த நிலையை அறுதியிட்டு
1.உறுதியாகக்
கடைப்பிடிக்கின்ற ஞானச் செல்வங்கள் மனக்கோளம் உருப்பெறும் கோளமாக அமைவுற்று
2.படைப்பின்
படைப்பாக்கும் செயல் திறத்தினை வலுக் கொள்ளுங்கள்.