ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2025

“வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?

“வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?


1.மனிதனாகப் பிறந்த நாம் பிறர் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த மன மகிழ்ச்சியால் செல்வம் அதுபாட்டுக்குத் தன்னிச்சையாக நமக்குள் பெருகும். செல்வம் குமியும் செல்வாக்குடன் இருக்கலாம்…!
 
எல்லாச் செல்வத்தையும் வைத்துக் கொண்டு மனதில் நிம்மதி இல்ளாமல் என்னை இப்படி பேசுகின்றார்களே…! என்று வேதனையை எடுத்தால் நோய் தான் அதிகமாகும்.
 
வைத்தியரிடம் சென்று பணத்தைக் கொடுக்க வேண்டியது வரும். சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கும் நிலை ற்றுப் போய் விடுகின்றது. வேதனையினால் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
 
இதை விடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
மனிதனாகப் பிறந்தோம் என்றால்
1.ருள் ஞானிகள் காட்டிய வழியிலே நடக்க வேண்டும். நம்மை அறியாது வரும் இருள்களிலிருந்து நாம் மீள வேண்டும்.
2.மெய்ஞானிகள் உணர்வு நமக்குள் வளர்க்கப்பட வேண்டும். அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்
3.எல்லோரையும் அந்த ஞானத்தின் வழியைப்ற்றிடச் செய்தல் வேண்டும்.
 
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.
 
தயவு செய்து என்னை யாரும் கோபித்து விடாதீர்கள் ஞானிகள் சொன்னதைச் சொல்கின்றேன் குருநாதர் என்னைச் சாக்கடை அருகே அமர வைத்து தான் இந்த உபதேசத்தை எல்லாம் கொடுத்தார்.
 
நாம் என்ன செய்கின்றோம்…?
 
சங்கடம் சலிப்புடன் உட்கார்ந்திருக்கிறோம். என் குடும்பத்தில் இப்படி இருக்கின்றது அப்படி இருக்கின்றது என்று சாமியிடம் சென்று துன்பத்தையும் வேதனையும் எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி அதைத்தான் கேட்கின்றீர்களே தவிர வேதனையை நீக்க வேண்டும் என்று யாராவது கேட்கின்றீர்களா…?
 
அப்படி நினைப்பது இல்லை.
 
ஏனென்றால் இந்த மாதிரி உணர்வுகள் தான் (நமக்குள் இருக்கும் சங்கட உணவுகள்) நல்ல குணங்கள் இருந்தாலும் ந்த நல்லதைப் பேசவிடாது தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
 
நாம் தவறு செய்யவில்லை. இந்த உணர்வுகள் நம்மை எவ்வாறு இயக்கி விடுகின்றது.
1.அதை நீக்குவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
2.அதன் வழியில் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிர் அவ்வாறு இயக்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.
4.அதன் வழிப்படி உயிர் இயக்கப்படும் பொழுது கண் அதே வழியைக் காட்டும்... உடலை மகிழச் செய்யும்.
 
இதைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
கோவிலுக்கு போகும் பொழுது அந்தத் தெய்வ குணங்களைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
அந்த ஆலயத்திலே தனக்கு முன் நிற்பவருக்கெல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த எண்ணத்தோடு செய்தால் யாரையும் நீங்கள் முண்டியடித்துத் தள்ள மாட்டீர்கள்.
1.நீங்கள் அந்த உயர்ந்த குணமாக அதுவாக ஆகின்றீர்கள்
2.உங்கள் சொல் அவர்களை நல்லதாக்குகின்றது.
3.கோவிலில் எந்தத் தெய்வத்தை வைத்திருக்கிறார்களோ அந்தத் தெய்வமாக நீங்கள் ஆகின்றீர்கள்.
 
உங்களிடம் இருக்கும் நல்ல குணத்தைத் தெய்வமாக மாற்றுவதற்குத் தான் இதையெல்லாம் சொன்னார்கள். மற்றவர்களைத் தள்ளிவிட்டு சாமியின்க்தியைப் பெற வேண்டும் என்று சொன்னால் தள்ளும் குணம் தான் வரும். நல்ல குணங்களை நம்மிடமிருந்து தள்ளி விட்டு விடும்.
 
இதை எல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான் ஆலயத்தை கட்டி அதில் தெய்வத்தை வைத்து நம் மனதைத் தூய்மைப்படுத்தும் வழிகளைக் காட்டினார்கள் ஞானிகள்.