ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2025

அகஸ்தியன் பெற்ற தீமைகளைக் கருக்கும் ஆற்றல்

அகஸ்தியன் பெற்ற தீமைகளைக் கருக்கும் ஆற்றல்


ஒரு புழுவை எடுத்து வந்து குளவி தன் விஷத்தை அதன் மீது பாய்ச்சினால் விஷம் புழுவின் உடலில் பரவி புழுவின் உயிர் இந்த விஷத்தின் நிலைகள் கொண்டு உடலில் உள்ள அணுக்களை மாற்றி அமைத்து விடுகின்றது. ஆனால் அது குளவியாக அடுத்து மாறுகிறது.
 
புழுவின் உடலுக்குள் சென்று அந்தப் புழு குளவியாக மாறிய பின் அதே உணர்ச்சியின் தன்மை அதற்கு வருகின்றது. முதல் குளவி எதைச் செய்ததோ இதுவும் அதே வேலையைச் செய்கின்றது. இதைப் போன்று தான்
1.தாய் கருவிலே விளைந்த அகஸ்தியன்
2.தன் உடலிலே கடும் விஷத்தின் தன்மையையும் அடக்கிடும் வல்லமை பெறுகின்றான்.
 
இயற்கையில் விளையும் சத்தினை வேக வைத்து உணவாக உட்கொள்ளும் பயிரினங்களையும் உருவாக்குகின்றான் ஐந்தாவது வயதிலேயே…!
 
இன்றும் பார்க்கலாம்…! தத்துவஞானியின் உணர்வைப் பெற்ற பின் தாய் கருவிலே கர்ப்பமாக இருக்கப்படும் போது அந்தத் தத்துவத்தை நுகர்ந்தறிந்தால் அந்த குழந்தையாகப் பிறந்த பின் இளமையிலிருந்து அவன் அறியாதபடி பல வேதங்களையும் பாடுகின்றான் படிக்கின்றான் தத்துவத்தை எடுத்துச் சொல்கின்றான்.
 
கணக்கிடும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் கணக்குகளைச் செய்து முடிப்பதற்கு முன் ஒரு நொடிக்குள் இவன் விடைகளைச் சொல்லி விடுகிறான் என்று பார்க்கலாம்.
 
உலகில் நடக்கக்கூடிய இதைப் போன்ற சம்பவங்களைப் பத்திரிகைகளில் பார்க்கலாம். இப்படிப் பெரிய மேதையானவர்களும் உண்டு. இது எல்லாம் தாய் கருவிலே பெற்ற நிலைகளைக்கொப்பத் தான்” உருப்பெறுகின்றது.
 
இயற்கையின் நிலைகள்
1.இந்த உயிர் எதை நுகர்கின்றதோ அதை அணுவாக மாற்றுகின்றது என்பதை
2.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
அகஸ்தியன் ஐந்தாவது வயது ஆகும்பொழுது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எவ்வாறு உணவு கிடைக்கின்றது…? எதன் வழி கிடைக்கின்றது…? என்பதனைச் சிந்திக்கும் தன்மை பெறுகின்றான்.
 
விண்ணை நோக்கிப் பார்க்கின்றான் பிரபஞ்சத்தில் உருவாகும் பல நிலைகளையும்…!
1.இந்த பிரபஞ்சத்திற்குச் சக்திகளை நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதையும்
2.பால்வெளி மண்டலங்களாக அதை அமைப்பதையும் தூசிகளாகப் பரவுவதையும்
3.ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர்மறை ஆகும் பொழுது ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது
4.மின் கதிர்களாகப் பரவுவதையும் ஒலி அலைகள் பரவுவதையும் மற்றதோடு இணைவதையும்
5.அது எவ்வாறு…? என்பதனை அகஸ்தியன் அறிகின்றான்.
 
இப்படி அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை தான் மின்னல்கள் எவ்வாறு உருப்பெறுகிறது என்று உணரும் போது
1.தன் இளமைப்பருவத்திலேயே அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளை அவன் நுகர்ந்ததினால்
2.அவன் உடலுக்குள் அந்த மின் அணுக்களின் நிலை உருவாக்குவதும்
3.ஒன்றை உற்று நோக்கினால் பகைமை உணர்வுகளை தீ உணர்வுகளைக் கருக்கிடும் சக்தியைப் பெறுகின்றான் அகஸ்தியன்.
4.அவன் பெற்ற அந்த ஆற்றல்களை நாமும் பெறுதல் வேண்டும்.