ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 2, 2025

இராமலிங்கம்

இராமலிங்கம்


உயிரான ஈசன் தான் கவரும் உணர்வுகளை… “உருவமாக்கி அருவத்தின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…?” என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நமது அகஸ்தியன் காட்டிய அறநெறி வழி கொண்டு அவனில் பெற்ற உணர்வின் செயல்…” அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
உயிரணு தோன்றி எத்தனையோ வகை உருவங்கள் பெற்று உணர்வுக்கொப்ப அணுக்கள் விளைந்து உடலை விட்டுச் சென்ற பின் அதன் இணைப்பு கொண்டு அடுத்த உடலைப் பெறுகின்றது.
 
இப்படித்தான்
1.பல கோடி உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று இறையாகி
2.அதனின்றி மீள வேண்டும் என்ற உணர்வைப் பெருக்கிப் பெருக்கி எண்ணிலடங்காத உடல்களுக்கு இரையாகி
3.அதன் உணர்வைக் கவர்ந்து உடலின் உருவங்களை மாற்றி மாற்றி மனிதனாக நம்மை உருவாக்கி உள்ளது உயிர்.
 
மனிதன் தான் உயிரை ஈசன் என்று மதிக்கும் தன்மை பெறுகின்றான்.
1.தனக்குள் உருவாக்கியது யார்…? என்றும் உணர்வை இயக்குவது யார்…? என்றும்
2.தன்னில் இயக்கும் உயிரை முதல் மனிதன் அகஸ்தியன் காணுகின்றான்.
3.அதன் உணர்வின் செயலாக்கத்தைக் காணுகின்றான்.
4.கண்டபின் தான் நுகரும் உணர்வுகள் தான் தனக்குள் உருவாகின்றது என்பதை உணர்ந்தான்
5.உயர்ந்த நிலைகள் கொண்ட உணர்வினை அவன் நுகர்கின்றான்
6.தீமைகளை அகற்றும் உணர்வை நுகர்கின்றான்
7.அதன் உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் அணுக்களை உருவாக்குகின்றான்
8.இருளை வென்றிடும் உணர்வினை நுகர்கின்றான். இருளை அகற்றிடும் அணுக்களைப் பெருக்குகின்றான்.
9.இப்படிப் பெருக்கித் தான் விண்ணின் ஆற்றலை நுகர்கின்றான்
10.அதனில் வரும் நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றுகின்றான்.
11.அறிவின் ஞானமாக இயக்குகின்றான் அருள் ஒளி என்ற உணர்வினைப் பெருக்குகின்றான்.
 
பெருக்கிய நிலைகள் கொண்டு அதை எல்லாம் தன் மனைவிக்கே ஓதுகின்றான். இவை இவை…! என்றும் இதனின் உணர்வுகள் இவ்வாறு…! என்றும் செவி வழி கூட்டும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அதன் வழி
1.மனைவியும் கணவனுடன் ஒன்றிணைந்து தான் கண்ட உணர்வுகளை இருவரும் ஒன்றென இணைந்து
2.இரு உணர்வும் ஒன்றென இணைந்து இரு மனமும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து ஒளி என்ற உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனானான்
4.துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக ஆனான்… அவர்கள் வளர்ச்சியில்.
 
எண்ணத்தால் உணர்வால் ஒளியின் சரீரமாக எண்ணம் கொண்டு உயிருடன் ஒளியின் சரீரமானதால் ராமலிங்கம் என்ற காரணப் பெயரை வைத்து அழைத்தனர்.