“அகஸ்தியனின் சகாக்கள்” சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்
1.அகஸ்தியன் தன் இளமைப்
பருவத்தில் பல விஷம் கொண்ட தாவர இனங்களை நுகர்ந்தாலும் உணவாக உட்கொண்டாலும்
2.அவை அனைத்தும் இவனுக்குள்
விஷத்தை ஒடுக்கி… உணர்வின் தன்மை மாற்றும் நிலை வருகின்றது.
உதாரணமாக ஒரு தட்டான் பூச்சி எதன் மேல்
தன் முட்டைகளை இட்டதோ அந்த உணர்வுக்கொப்ப அதிலுள்ள மணத்தைத் தாங்கி
அந்த உணர்வுக்கொப்ப பல வித வர்ணங்கள் கொண்டு பல பல வகையில் பூச்சிகளாக வருகின்றது.
1.ஒரே தட்டான் பூச்சி தான் முட்டைகளை இட்டது
2.ஆனால் முட்டைகளை இட்ட செடிகளுக்கொப்ப அந்த கருக்களில் நுகரப்பட்டு
3.பல வண்ணங்களில் பல விதமான பூச்சிகள் உருவாகின்றது.
இது எல்லாம் இயற்கையில் விளைவது.
இதைப் போல தான் இயற்கையில்
1.அகஸ்தியன் தாய் கருவில்
இருக்கும் பொழுது விளைந்த உணர்வுகள்
2.பல பல இயக்கத்தின் உணர்வுகளையும் நஞ்சினை அடக்கிடும் தன்மையும் உணர்கின்றான் அகஸ்தியன்.
“அவனில் இணைந்த உணர்வுகள்” நஞ்சினை வென்றிடும் உணர்வுகளாக நுகர்ந்ததனால் அதை அவனின் எண்ண ஒலி கொண்டு வெளிப்படுத்துகின்றான். அதனைச் சூரியனுடைய
காந்த சக்தி இதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
1.அவனுடன் பழகியோர் அவன்
சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அவன் உணர்வைப் பதிந்தோர்
2அவர்களுக்கும் அது கிடைக்கப்
பெறுகின்றது
அகஸ்தியன் தாய் கருவில்
பெற்றான். அவனுக்குக் கிடைத்த
உணர்வுகள் தன் சகாக்கள் கேட்டறியப்படும் போது அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் விளையத் தொடங்குகிறது
இவனில் விளைந்த உணர்வுகள் அவர்களுக்குள்
ஜீவனுக்களாகப் பெற்று அந்தச்
சகாத் தோழர்களும் இவனைப் போன்றே அவனை ஒட்டி
வாழும் நிலைகள் வருகின்றது
காரணம்… அவரவர்கள்
சந்தர்ப்பம் இயற்கையில் எதை எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் உயிர் உடலில்
அணுக்களாக உருமாற்றிக் கொண்டே உள்ளது.
இதை எல்லாம்
அறிந்தவன் அகஸ்தியன். பல
கோடி இன்னல்களைக் கடந்து அதனைத் தான் அறிந்து தீமையிலிருந்து
விடுபடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து தீமையை அகற்றிடும்
அருள் சக்தி பெற்றான் அகஸ்தியன்.
1.அவன் நிலையை நாமும் காண
முடியும் காண வேண்டும் என்பதற்கே
2.குரு வழியில் இதை வெளிப்படுத்துகின்றேன்
அகண்ட அண்டத்தின்
நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள்
(உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அகஸ்தியன் உணர்கிறான்.
அணுவின் இயக்கத்தை உணரும்
பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன்
என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.
இந்தப் பேருண்மைகள்
அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன்
அருகில் உள்ள அவன்
சகாக்களுக்கும் சொல்கிறான்.
அவனின்று வெளிப்பட்ட
உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நடந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன்
உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய
சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த
அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.