ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 14, 2025

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் “செருகேற்றிக் கொள்ள வேண்டும்”

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் “செருகேற்றிக் கொள்ள வேண்டும்”


நம் எண்ணத்தின் வலுவான நிலைகள் கொண்டு மகரிஷிகளைப் பற்ற வேண்டும் என்றால் நம்முடைய எண்ணத்தை அது ழித்து விடும்.
1.மகரிஷிகளை நுகர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.
2.தனித்து இருந்து மகரிஷியின் ஒளியைப் பெறுவேன் என்றால் அது முடியாத நிலைகள்.
 
தனித்துப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
பல கயிறுகளை எடுத்து ஒரு கயிறாகத் திரித்து வலுவாக்குவதைப் போன்று
1.நமது எண்ணங்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின்ருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஒருக்கிணைந்த வலுவின் துணை கொண்டு நாம் ஏங்கி எடுப்போம் என்றால்
3.நமக்கு முன் படர்ந்திருக்கும் அவருடைய உணர்வுகள் நமக்குள் பலவாகி அவருடன் சமமாகி
4.அந்த உணர்வின் நிலைகள் நாம் எண்ணி ஏங்கும் பொழுது நம் ஆன்மாவிலே கலக்கிறது.
5.பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உறையும் தன்மையாக நினைவின் ஆற்றலை
6.மகரிஷியின் அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் என்று எண்ணி உள் செலுத்தும் பொழுது நமக்குள் ஊடுருவுகின்றது.
7.அப்பொழுது அந்த உணர்வின் சத்து மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது கருவுற்று உணர்வின் வித்தாக உருப்பெறுகின்றது…”
 
நமக்காக எத்தனையோ வேதனைகள் பட்டு நம்மைக் காக்க நம்முடைய மூதாதையர்கள் அனுபவித்த நிலைகள் அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.
 
கூட்டுத் தியானம் இருந்து வலுவேற்றிய உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற ந்த உயிரான்மாக்களை ஏகோபித்த நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும்.
 
அவர்கள் மீண்டும் உடல் பெறாத நிலைகளில் உடல் பெற்ற உணர்வினை அங்கே கரைத்துப் பஸ்பமாக்கி
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை
2.அறிந்திடும் ஆற்றலின் இயக்கத்தின் தன்மை கொண்ட அந்த உணர்வின் நினைவலைகள் உயிருடன் ஒன்ற அங்கே செயல்படுத்த வேண்டும்.
3.அங்கே ஒளிக் கடலிலே கலக்கப்பட்டு உடல் பெறும் தன்மை அங்கே கருக்க வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அங்கே நிலைக்கச் செய்தல் வேண்டும்.
 
அப்போது அந்த ஒளி பெற்ற உணர்வின் தன்மை அந்த ஞானியின் உணர்வுகள் இவர்களுக்குள் உணவாகச் சேருகின்றது…” ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலைத்திருப்பார்கள்.
 
அதுதான் பெருவீடு பெரு நிலை என்ற நிலை…!
 
அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வை நாமும் பின்பற்றி அதைப் போல நாமும் ஒருங்கிணைந்து அருள் ஞானிகள் ஆற்றலைப் பெற வேண்டும் என்று ஏங்கினோம் என்றால் அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பட்டு நம்மை அறியாது வந்த இருளை அகற்றும் நிலையும் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் அவர்கள் உணர்வு கொண்டு நாமும் அங்கே விண் செல்லலாம்.
 
ஆகவே தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானியின் உணர்வின் வலுக் கொண்டு அதனை நாம் நுகர்ந்தோம் என்றால் அதைப் பற்றி அதனின் நிலைகள் கொண்டு பிறவா நிலையும் ஒளியின் சரீரமாகவும் ஒளியின் சிகரமாகவும் நாம் வாழ்ந்திட முடியும்.
 
என்றும் பதினாறு என்று நிலை…!
 
ஒளியின் சிகரம் வளர வளர அது என்றும் 16 என்ற பருவத்தையே அடைந்திருக்கும் நிலையான நிலைகள் பெற்றிருக்கும் இன்னொரு உடல் பெறாது இருளை அது ராது.
 
ஒரு வைரம் ஒளியின் சுடராக இருக்கின்றது. அது சுக்கு நூறாகத் தெறித்தாலும் அது ங்குவதில்லை.
1.அந்த வைரத்தை வைத்து ஒரு பொருளை கோடிட்டால் அதைக் கீறி விடும் இதைக் கீற முடியாது.
2.இதனை ஒத்த அதே வைரத்தின் தன்மையை இதனுடன் இணைத்தால்
3.உராயும் தன்மை கொண்டு அதனின் நிலைகளைச் செருகேற்றலாம் ஒளியின் தன்மை மின்னச் செய்யலாம்.
 
இதைப் போலத்தான்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் எடுத்துச் செருகேற்றி
2.நமக்குள் இருக்கும் குணங்களை மின்னச் செய்யலாம்.
3.மின்னும் நிலை கொண்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றலும்…  பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் நமக்குள் வருகின்றது.
 
ஆகவே அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் அனைவரும் பருகுவோம்.