
உயிரே கடவுள்
காலயிலிருந்து
இரவு வரை
1.நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எதையெல்லாம் கேட்கின்றோமா எதையெல்லாம்
நுகர்கின்றோமோ
2.இவை அனைத்தையும் நமது உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று
3.நாம் எண்ணிய உணர்வுகளை அணுவாக மாற்றி ம்… என்று
உடலாக மாற்றி விடுகின்றது.
ஏனென்றால்
நமது உயிர் நம் உடலில் இயக்கச் சக்தியாக
இருக்கின்றது நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் அணுத்தன்மை
பெறும் இயக்கமாக மாற்றி ம்… என்று
உடலாக மாற்றி விடுகின்றது.
நாம்
எண்ணும் எண்ணங்கள் எதுவோ அது ஈசனாக
இருந்து உருவாக்குவதும் நாம் எண்ணும் குணங்களை இரையாக்குவதும் இறையின் உணர்வுகள்
செயலாக்குவதும் என்ற நிலையில் நமது உயிரின் இயக்கங்கள் உண்டு.
நம்மை
ஆள்வது யார்…?
1.நமது உயிரே ஆண்டவனாக இருந்து ஆளுகின்றது.
2.ஈசனாக இருந்து எண்ணியதை உருவாக்குகின்றது.
3.எண்ணியதை இயக்குவதும் உருவாக்குவதும் அதை ஆள்வதும்
ஆண்டவனாக இருப்பதும் நமது உயிரே.
4.ஈசன் என்பதும் உயிரே
5.ஆண்டவன் என்பதும் உயிரே
6.இறைவன் என்பது நாம் எண்ணும் உணர்வுகளை இறையாக்குவதும் உயிரே.
இறை
என்றால் எதன் குணத்தை எடுக்கின்றோமோ அதை
இறையாக்கி உணர்வின் செயல் ஆகும் பொழுது
அக்குணமே தெய்வமாகின்றது என்பதனை ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உயிரின்
இயக்கம் ஈசன் என்றாலும் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்று காரணப் பெயர் வைத்து
நாமெல்லாம் அறிந்து கொள்வதற்கு இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள் ஞானிகள்.
இருந்தாலும்
இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனாலும் அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம் பக்தி என்ற நல்ல ஒழுக்கத்தில் வாழுகின்றோம் ஆனால் பக்தி
என்றால் எதுவென்று அறியாத நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.
இயற்கை
நியதிகள் எதுவோ அதன் வழி தான்
என்று நாம் வாழுகின்றோம். இயற்கையின் சீற்றத்தில் இருந்து
காக்கும் உணர்வுகள் பெற்ற மனிதன் ஆறாவது அறிவை நாம் சீராகச்
செயல்படுத்தாது மீண்டும் தேய்பிறை என்ற நிலையில்
வாழ்கின்றோம்.
அதை எல்லாம்
மாற்றிடும் நிலையாக
1.நமது குருநாதர்
காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசித்து
2.அருள் ஞானம் பெற்று
அருள் வாழ்க்கை வாழ்ந்து உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அழியாத நிலை
பெற வேண்டும்.