
துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!
விநாயகர் பக்கம் அரச மரத்தையும் வேப்ப
மரத்தையும் வைத்துள்ளார்கள். அரச
மரம் என்பது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரம் ஆனது… “அது அரசு…”
இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் அனைத்தையும் ஒளிச்சுடராக
மாற்றி எத்தகைய இருளையும் வெல்லும் வல்லமை பெற்றது.
1.அதனை எந்த விஷமும்
தாக்காது
2.அப்படித் தாக்கினால் அந்த விஷம் அதற்குள் ஒளியாக மாறும்.
விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனும்
ஒளியாகின்றது விஷத்தின் தாக்குதலால் தான் உயிரும் துடிப்பாகின்றது… வெப்பமாகின்றது… உணர்வின் அறிவாக
இயக்குகின்றது.
விஷம் இல்லை என்றால்
இயக்கம் எதிலும் இல்லை. விஷம் இல்லை என்றால் ஒரு பொருளின்
தன்மை உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டாது.
வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்… விஷம் அதிகரித்தால் மனிதனை நினைவிழக்கச் செய்கின்றது. ஆக… உணர்வின் தன்மை எதைப் பகுந்து எடுக்கின்றோமோ அந்த உணர்வின்
இயக்கமாக நமது உயிர் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கினர் ஞானிகள்.
நீர் நிலை இருக்கும் பக்கம் வட மேற்காக
விநாயகரை வைத்து வட கிழக்காக வணங்கும்படி செய்கின்றார்கள் காலையில் நான்கிலிருந்து
ஆறுக்குள் உடல் அழுக்கைப் போக்கிவிட்டு
1.ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அந்தச் சக்தியைப் பெறும்படி செய்கின்றார்கள்.
2.துருவ நட்சத்திரம்
வெளிப்படுத்தும் உணர்வுகளை அதிகாலை உதயமாகும் சூரியன் கவர்கிறது.
3.காரணம் அதனுடைய கதிரியக்கங்கள்
அதிலே படுகின்றது
4.அப்போது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக்
கவர்ந்து அலைகளாக இந்தப் பிரபஞ்சத்திற்குள் சுழலச் செய்கின்றது.
5.நாம் துருவத்தின் அதாவது
துருவ நட்சத்திரத்தின் முகப்பு எல்லையில் இருப்பதால்
5.நமது பூமி கவரும் பொழுது
துருவத்தின் வழியாக முதலில் நம்மிடம் கவர்ந்து வருகின்றது.
6.மனிதனாகத் தோன்றி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த உணர்வுகள் பூமிக்குள்
படர்ந்துள்ளது… பிரபஞ்சத்திலும் பரவி உள்ளது.
அதனை நுகரும்
பருவம்… மனிதன் தன் எண்ணத்தால் தனக்குள் பதிவு
செய்து அந்த உணர்வைப் பெறும் தகுதி
ஏற்படுத்தும் நிலையாக… தீவினைகளை அகற்றும் அந்த வினையை
நமக்குள் வினைக்கு நாயகனாக “கணங்களுக்கு
அதிபதியாக்கும் முறையை” நமக்குத் தெளிவாக்கினார்கள்.
அதனை நாம் பின்பற்றினால் அருள் ஒளி பெறலாம் இந்த வாழ்க்கையில் வரும் இருளை
அகற்றலாம்
1.அகஸ்தியன் கண்ட பாதையில் பேரருள் பேரொளி என்ற நிலையில்
இங்கே வாழலாம்… பேரொளியாக மாற்றும் தன்மையும் பெறுகின்றோம்.
2.அதனைப் பெறச் செய்வதற்குத் தான் அதிகாலையில் பிரம்ம
முகூர்த்த நேரத்தில் அதை நுகரும்படி
நமக்கு வழிப்படுத்தினார்கள் அன்றைய
ஞானிகள்.