ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 28, 2025

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்

அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்


சில உடல்களில் சில ஆன்மாக்கள் இருக்கும் எதிர் நிலையாக அது இயங்கும். தியானத்தில் அமர்ந்தால் செய்ய விடாது. இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அந்த ஆன்மாக்களுக்கு இணைக்கப்படும் பொழுது நன்மை செய்யும் சக்தியாக மாறும்.
 
ஆனால்
1.அப்படியே விட்டுவிட்டால் குடும்பப் பற்றை இழக்கச் செய்து விடும்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.
2.குடும்பப் பற்றை இழந்த ஆன்மாக்கள் தான் இன்னொரு உடலுக்குள் வந்தால் அதே உணர்வை இயக்கும்.
 
எந்த உடலிலிருந்து இயக்கியதோ அவர்களைக் குற்றவாளியாக ஆக்கிடாது குற்றத்திலிருந்து மாற்றிட அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தொடர்ந்து எடுக்க எடுக்க அந்த ஆன்மாக்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்க ந்தத் தீமைகளிலிருந்து நாம் விடுபடலாம்.
 
அந்த ஒரு பக்குவத்திற்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
 
அருள் வாழ்க்கை வாழ்வீர்கள். அனைவரையும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும். உங்கள் பார்வையால் அனைவரும் நலம் பெறுவார்கள்.
1.அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.
2.பல நிலையில் ஆனந்தப்படும் பொழுது பேரானந்தம் வருகின்றது.
3.ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் வருகின்றதுஅவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தமாகின்றது
4.உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
5.அதை கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலைக்கு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
 
நோயாக இருக்கிறது என்று என்னிடம் கேட்காதீர்கள். என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் அந்த அருள் வேண்டும் தொழில்கள் வம் பெற வேண்டும் எங்களுக்கு வரவேண்டிய பாக்கி வர வேண்டும் அதற்கு அந்த அருள் வேண்டும் என்று இப்படிக் கேட்டுப் பாருங்கள்.
 
இந்த உயர்ந்த நிலைகள் வர வர தன்னாலே அந்தப்ணங்கள் வந்து சேரும். பார்க்கலாம். உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும்… வருவாயை உயர்த்தும். பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஊட்டும்.
 
சிறிது கால தாமதமாகும்.
 
ஆனால் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டோம் என்றால் வருவதையும் தடுத்து நிறுத்திவிடும். ங்கடப்பட்டால் அவர்களுக்கும் அதே நிலையினை இயக்கி விடும். அவர்களுக்கும் வருமானம் வராது நமக்கும் வராது.
 
ஏனென்றால் கொடுக்க முடியவில்லை என்று எண்ணும் போது அங்கே சங்கடம்
 
தைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும் நமக்கு கொடுப்பார்கள் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
ஒவ்வொரு நொடியிலும் பிறருடைய குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர் நமக்கு வருமானம் வரும் என்று
1.நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வாக வழி அமைக்கின்றது.
2.நம் சொல்லைக் கேட்போர் நிலைகள் நிறைவான மனங்களாக வருகின்றது.
3.வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளே அங்கே இயக்கத் தொடங்குகிறது.
 
ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம். பேரானந்தம் பெற்று ஏகாந்த நிலை என்று ஏகாதசி என்ற பத்தாவது நிலைகளை நாம் அடைவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).