ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2025

அகக்கண் என்ற முக்கண்

அகக்கண் என்ற முக்கண்


துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நட்சத்திரத்தின் பால் இணைந்து அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.முக்கண் என்ற உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது புருவ மத்தியில் பேரருள் பேரொளியாக மாறும்
3.உயிருடன் ஒன்றி அதை நீங்கள் காணலாம்… அகக்கண் கொண்டு…!
4.துருவ நட்சத்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வை நீங்கள் இப்போது அகக்கண்ணால் பார்க்கலாம்.
5.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை க்கண்ணால் நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்
 
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் பாய்ச்சி… அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
இப்போது
1.துருவ நட்சத்திரத்தினுடைய அருள் மம் வெளி வரும் போது உங்கள் உடல் முழுவதும்
2.“ஒரு பாதுகாப்புக் கவசம் போன்று பேரருளின் ஒளி வட்டம் காணும்.
3.தீமைகள் உங்கள் ஆன்மாவிலே புகாது பாதுகாக்கும் உணர்வின் சக்தியாக இது அமையும்.
4.உங்கள் உடல் முழுவதும் ஒரு ஒளி வட்டம் தெரிவதை க்கண்ணால் நீங்கள் உணரலாம் பார்க்கலாம்.
5.இப்பொழுது உங்கள் உடலே ஒளிமயமாகக் காட்சி தரும்.
 
துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
கணவன் மனைவி இவ்வாறு ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மமும் ஒன்றி இரு உணர்வும் ன்றி இரு உயிரும் ஒன்றாக இணைந்து பேரருள் என்ற உணர்வுகளை உங்களுக்குள் உருவாக்குங்கள்.
 
உங்கள் இருவரது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் பேரொளி பெறும் அணுக்களாக கருக்களாக… உருவாக்குங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் பெற்று எங்களுக்கு அவர்கள் அந்த அருளைப் பாய்ச்சி எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அனைவரும் பொருளறியும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா.
 
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்பொழுது சப்தரிஷி மண்டலங்களின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும்… மனக்கண்ணால்…!”
 
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ங்கிப் பெறுங்கள்.
 
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் ர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
 
ங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை ஊட்டுங்கள்.
 
உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்பு வட்டதில் இணையச் செய்வோம்… உந்திச் செலுத்துவோம்.
 
இப்பொழுது
1.அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை க்கண்ணால் உணர முடியும்.
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் ஒளி வட்டத்தில் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை க்கண்ணால் பார்க்கலாம்.