
பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்
அகஸ்தியன்
தன் வாழ்நாளில் தாய் கருவிலே வளரும் பொழுதே நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பெற்று… பிறந்து
வளரும் பொழுது அதே ஆற்றலை வளர்த்து அவன் வாழ்நாளில் அனைத்து அறிவினையும் அறிந்திடும்
உணர்வு பெற்றவன்.
1.அகஸ்தியன் அவனது வாழ்க்கையில் சர்வ ஞானமும் பெற்று
2.அதன் வழி கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் துருவனாகி துருவ மகரிஷியான அந்த உணர்வுகள்
அனைத்தும் எதை உற்று நோக்கியதோ
3.அந்த
உணர்வின் துணை கொண்டு அங்கே நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்த்தும் வளர்ந்து கொண்டுள்ளான்.
அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் உணர்வுகளை நுகர்ந்தவர்கள்
அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
நாம் நமது வாழ்க்கையில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த
உணர்வுகள் நம் உடலில் கலந்து இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலுக்குள் செலுத்தி அந்த நஞ்சான
உணர்வை மாற்றி
2.அனைத்தையும் அறிந்திடும் அறிவென்ற உணர்வினை நமக்குள் வளர்த்து
3.இந்த வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வந்தாலும் அதனைச் சமப்படுத்தி
4.நமது உடலில் ஒளி உணர்வைக் கூட்டும் சக்தி பெறச் செய்யும் நிலையே நாம் எடுக்கும் தியானம்.
27
நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் சக்திகள்… ஒரு
நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறையாக
மோதும் பொழுது தான் மின்னல்கள் வருகின்றது.
இந்த
மின்னல் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த மின் அலைகள்
வெகு தூரம் பரவுகின்றது.
1.அப்படி வரக்கூடிய உணர்வுகளை
அகஸ்தியன் நுகர்ந்தறிந்து தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஒளிமயமாக ஆக்கிக் கொண்டான்.
2.அதன் வழி தான் விண்ணுலகை உற்று நோக்கி உணர்வை ஒளியாக
மாற்றி
3.துருவத்தின்
வழி வரும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன்
துருவ நட்சத்திரம் ஆனது.
அந்த உணர்வை நமக்குள் பெற்றால் இந்த 27 நட்சத்திரங்களும் எதிர்நிலை கொண்டு அது மின்னலாக மாறும்பொழுது ஒளிக்
கற்றைகள் பரவுவதை…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் இருப்பதனால்
2.அதை எளிதில் நம் உடலுக்குள் கலந்து எல்லா அணுக்களுக்கும் அதைக் கொடுக்க முடிகின்றது.
உதாரணமாக...
வேதனைப்பட்ட ஒரு மனிதனின் உணர்வை நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் அவன் நினைவு வரும் பொழுதெல்லாம் அதே வேதனை
உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
இதைப்
போன்று 27 நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பல உணர்வுகளை இயக்கக்கூடிய சக்தி
பெற்றது. 27 நட்சத்திரங்களின் இணை சேர்த்த உணர்வு கொண்டுதான்
ஒவ்வொரு உயிரும் அந்த உணர்வினை அணுக்களுக்குள் சேர்த்தது தான் அணுத் துகள்களும்.
நமது
குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட
சக்தியின் துணை கொண்டு நமது வாழ்நாளில் அதைத் தியானித்துக்
கொண்டே வந்தோம் என்றால் அந்த வலுவை நமக்குள்
பெற்ற பின்
1.உடலை விட்டுச் சென்றால் அங்கே அதனுடைய ஈர்ப்பு
வட்டத்தில் தான் நமது உயிரான்மா நிலைகொள்ளும்.
2.உடல் பெறும் உணர்வுகளைக்
கரைத்து விட்டு என்றும் நிலையான சரீரமாக முழுமை பெறும்.
இந்தச் சூரிய குடும்பமே… சூரியனே
அழிந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் அனைத்தும் என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு வேகா நிலை அடைந்தது.
1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி
அகண்ட பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உணர்வின் சக்தி வருகின்றது
2.சூரியன்
அழிந்து விட்டால் அதனின் பிடிப்பை அறுத்து ஏகாந்த நிலை கொண்டு
3.எதனையும் இருந்த இடத்திலிருந்து கவர்வதும் பேரண்டத்தில்
எங்கும் சுழலும் தன்மையும் பெற முடியும்.
இப்படிப்பட்ட
சூரியக் குடும்பங்கள் பேரண்டத்தில்
எண்ணிலடங்காது உண்டு.