ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2025

“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்

“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்


பிறர் படும் துயரத்தைத் துடைக்க உற்று நோக்கி அவர் உணர்வை நுகர்ந்தறிந்த நிலைகள் கொண்டு அவர்கள் தீமைகளை அகற்றப் பொருள் உதவியோ உடல் உதவியோ மற்றதைச் செய்கின்றோம்.
 
அப்படிச் செய்தாலும்
1.நாம் கண்டுணர்ந்த கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்த உணர்வின் செயல் நமக்குள் வந்திடாது அது இணைந்திடாது
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றி நமக்குள் செலுத்தி
3.தீமையை தனக்குள் பற்றிடாது பற்றற்றதாக்கி
4,யார் உடலில் அந்த தீமைகள் பற்றிக் கொண்டதோ அதைப் பற்றற்றாக்க வேண்டும்.
 
அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் நமக்குள் அது வராது துடைத்து அந்தத் தீமைகள் பட்டோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அங்கே நஞ்சுகள் நீங்க வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியால் தீமைகளை அகற்றி மெய் ஒளி காணும் நிலை அவர்கள் பெற வேண்டும் என்று
2.இப்படி நாம் எண்ண வேண்டும். இதனைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.
 
வேதனையை நாம் கண் கொண்டு நினைக்கப்படும் பொழுது அந்தக் கண் அவர்கள் படும் வேதனையை உணர்த்துகின்றது. இந்த வேதனை உணர்வுடன் நாமும் அவருடன் ஒன்றி விட்டால் நாம் அதுவாகத்தான் ஆகின்றோம்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வினை விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் டர வேண்டும் என்று
1.மகரிஷிகளுடன் ஒன்றி அந்த உணர்வின் சக்தியை வலுவாக்கி அதைப் பற்றிக் கொண்டு
2.தனக்குள் கேட்டறிந்ததைப் பற்றற்றதாக நீக்கிவிட்டு அது நமக்குள் பற்றிடாது பற்றற்றதாக மாற்ற வேண்டும்.
 
பின்… அவர்களை அறியாது இயக்கிய அந்த உணர்வுகளில் இருந்து தீமைகள் பற்றிடாது பற்றற்றதாக ஆக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலிலே படர்ந்து தீமைகள் அங்கே அகன்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவருடைய நினைவலைகள் பற்றிட வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுவோம் என்றால்
1.நாம் எண்ணியதை நம் உயிர் வலுவாக ஏற்று
2.மகரிஷிகள் வாழும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
 
எப்படி எளிமையான உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுகொண்ட மிருகங்களின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதனிடமிருந்து காத்திடும் ணர்வுகள் விளைந்து விளைந்து அதனின் துணை கொண்டு அதனின் வலு கொண்டு அந்த உடலுக்குள் சென்று அதநின் உருவாகப் பெற்றதோ இதைப் போன்று
1.ஞானிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணுலகில் ஒளிச் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்
2.அவர்களின் உணர்வை நாம் பற்றுதல் வேண்டும்.
 
அதை அடிக்கடி நாம் பற்றி நமது வாழ்க்கையில் கண்டறிந்த கோபமோ விரோதமோ வேதனையோ அவசரமோ ஆத்திரமோ போன்ற உணர்வுகள் தனக்குள் பற்றிடாது அருள் ஞானிகள் உணர்வைப் பற்றிக் கொண்டு… கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வு தனக்குள் பற்றிடாது செய்தல் வேண்டும்.
 
அதே சமயத்தில் யார் உடலில் பற்றியிருந்தாலும் மகரிஷிகள் உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்று அவர்களையும் அங்கே பற்ற வைத்தல் வேண்டும்…”
 
அந்தப் பற்றுடன் அவர்கள் வளர்ந்திடும் நிலைகள் நம் எண்ணத்தால் நாம் செயல்படும் பொழுது அந்த உணர்வின் வலுவாக நமது ஆன்மா வளர்கின்றது. நமது பிறவிக் கடனை நீக்கிட நாம் எண்ணிய நிலைகளை இந்த உயிரே தனக்குள் சமைக்கின்றது அதை வளர்க்கின்றது.
 
மனிதன் முழுமை பெற வேண்டிய மார்க்கங்கள் இவை…!