
மகரிஷிகள் மீது பற்று கொண்டு அவர்கள் வழியினைப் பின்பற்றுவோம்
1.நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ
உயிர் அதை இயக்குகின்றது
2.எதை எண்ணுகின்றீர்களோ அதை
உடலாக்குகின்றது உயிர்
3.எதனை எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்க்கின்றது.
4.வளர்ந்த உணர்வின் தன்மையை தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.
5.இந்த உடலை விட்டு நாம் அகன்றால் நாம் எதை எண்ணினோமோ அந்த உணர்வின் செயலாக அடுத்த உடலாக நம்மை
உருவாக்குகின்றது.
6.ஞானிகள் உணர்வை நமக்குள்
இணைப்போம் என்றால் அவர் ஒளியின் சரீரம் ஆனது போன்று நமது உயிர் நம் உடலில் இதை
உருவாக்கும்.
நமக்குள் இருக்கும் உயிரை ஈசனாக மதித்து… ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலைச் சிவம் என்று உணர்ந்து… நமக்குள் ஒவ்வொரு உறுப்புகளை
உருவாக்கிய நிலைகள் காந்தம் மகாலட்சுமி சர்வ நிலைகளை
வளர்த்து நமக்குள் உருவாக்கிய நிலைகள் மகாலட்சுமி உண்டு என்பதை
உணர்தல் வேண்டும்.
அது கவர்ந்த உணர்வின் மணங்கள் மகா
ஞானம் சரஸ்வதி அனைத்தையும் அறிந்திடும் ஞானமாக நம் உடலில் உண்டு. ஒவ்வொரு அணுவிற்குள்ளும்
இணைந்த உணர்வின் நிலைகள் ஒருக்கிணைந்து
அனைத்தையும் உருவாக்கும் வெப்பத்தின் நிலைகள் பராசக்தியாக நமக்குள் உண்டு… அனைத்தையும் உருவாக்கிடும் ஆற்றல் நமக்குள்
உண்டு.
அனைத்தையும் அறிந்திடும் உணர்ந்திடும்
நிலையும்… தீமையை நீக்கிடும் உணர்வின் சக்தியாக ஆறாவது அறிவு முருகா என்ற நிலையும் நமக்குள் உண்டு. அதனின் துணை கொண்டே நாம் செயல்படுத்த முடியும்.
எண்ணியதை வழிகாட்டும் கண்ணின் நிலைகள்
இருந்தாலும் எண்ணியதைத்தான் அது வழி காட்டுகின்றது. எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது.
ஆனால் இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும்
சக்தி மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது
அறிவின் தன்மை முருகன் என்று பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்றும் நமக்குள் ஆறாவது அறிவு உருப் பெறும் சக்தியாக நமக்குள் அடக்கி அதனின் நிலைகள் இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.அவர்கள் உணர்வை நாம்
பின்பற்றி
2.அவர்கள் மீது பற்று
கொண்டு
3.அதன் வழிகளில் நாம் பெற வேண்டும்.
இந்த உடலைச் சிவனாக மதித்து சர்வத்தையும்
அறிந்திடும் ஞானம் நமக்குள் உண்டு மகா சரஸ்வதியாக. சர்வத்தையும்
கவர்ந்திடும் சக்தி மகாலட்சுமி உண்டு சர்வத்தையும் உருவாக்கிடும் அந்த வேகத் துடிப்பான பராசக்தி நமக்குள் உண்டு.
நமது கண்கள் கண்ணனாக இருந்து வழிகாட்டிக்
கொண்டிருக்கின்றது. நமக்குள் விளைந்த உணர்வின்
எண்ணங்கள் அர்ஜுனனாக இருக்கின்றது. எதனின் வலிமையைக் கொண்டோமோ அதனின் வலிமையின் தன்மையாக நாம் எண்ணியது சாரதியாக நின்று கண்
வழிகாட்டுகின்றது.
1.ஞானிகள் உணர்வுகளை
வளர்த்துக் கொண்டால் அதுவே சாரதியாக அமைந்து
2.ஞானிகள் சென்ற பாதையில் நம்மை அழைத்துச் செல்லும்.
அது தான் கண்ணின் நிலைகள்
நமக்குள் இவ்வாறு இருக்கிறது…? என்று கீதையில் தத்துவங்களைக் கூறியுள்ளார்கள். அந்த அருள் ஞானிகள் சொன்ன நிலைகளை நாம்
பின்பற்றுவோம்.
நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் மனிதனை உருவாக்கியது விநாயகா. உயிரின் தன்மை நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த வினைக்கு நாயகனாக உணர்வின் செயலாக இயக்கப்பட்டு அந்த
உணர்வின் தசைகளாக அங்கங்கள் அமைக்கப்பட்டது.
ஆக நமக்குள் அனைத்துத் தத்துவங்களும் உண்டு..!
பேரண்டம் இந்த பிண்டத்திற்குள் எவ்வாறு
இயங்குகிறது…? என்றும்… பேரண்டத்தில் தனித்து இயக்கம் மற்ற கோள்கள் தன் தன் உணர்வின் சக்தி கொண்டு இயக்கினாலும்… அதனில் இணைந்த உணர்வு கொண்டு தாவர இனங்களாக மாற்றினாலும்
1.அதனின் தன்மை கொண்டு
உயிர் தனக்குள் இணைத்து
2.ஒருக்கிணைந்த நிலையாக உணர்வின் சக்தியாக ஒருக்கிணைந்து நமக்குள் எவ்வாறு இயக்குகிறது…? என்பதை
3.அண்டம் பிண்டத்திற்குள்
எவ்வாறு உணவின் செயலாக ஒன்றி வாழுகின்றது…?
4.ஒன்றிய வலுவின் துணை கொண்டு நம்மை எவ்வாறு இயக்குகின்றது என்ற தத்துவ ஞானிகள் கொடுத்த
5.அருள் மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பின்பற்றுவோம்
6.அவர்களின் வழியிலே நாம்
செல்வோம்
7.மனிதன் என்ற நிலைகள் புனிதம் பெறுவோம் முழுமையின் நிலைகள் பெறுவோம்.
8.நமது உணர்வுகள் உயிருடன்
ஒன்றிய ஒளியாக நிலைத்திருப்போம்.
9.நமது குருநாதர் காட்டிய
அருள் வழியில் நாம் அனைவரும் அதைப் பெறுவோம்
10.அருள் ஞானம் பெறுவோம்… ஒளியின்
உணர்வாக வளர்வோம்
11.இருளைப் போக்கும் நிலையை
நாம் பெறுவோம்… ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றியே நிலைத்திருப்போம்.