ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2025

நாம் ஒவ்வொருவரும் தினசரி பழக்கப்படுத்த வேண்டியது

நாம் ஒவ்வொருவரும் தினசரி பழக்கப்படுத்த வேண்டியது


1.தினசரி காலை துருவ தியானத்தில் நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் சென்றது.
2.நீங்கள் நுகர்ந்தது அனைத்தும் ஓம் நமச்சிவாய என்று உங்கள் ரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.இதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினால் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.
 
துருவ நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய  கதிரியக்கங்களை ஒளியாக மாற்றிக் கொள்கின்றது. அந்த நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தால் மின்னலாக மாறி மற்றொன்றைக்ருக்கி விடுகின்றது.
 
ஆனால் துருவ நட்சத்திரமோ ஒளி அலைகளாக மாற்றுகின்றது
1.அதை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
2.அத்தகைய மின்னலையும் உணவாக உட்கொண்டு
3.ஒளியின் நிலையாக உருவாக்கும் உடலாக நம்மைத் துருவ நட்சத்திரம் மாற்றிவிடும்.
 
நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் செயலாக உருவாக்குகின்றது அதையே செயல் ஆக்குகின்றது நமது உயிர் அதையே உடலாக்குகின்றது அந்த உணர்வே நம்மை வாழ வைக்கிறது.
 
தெரிந்து கொள்ளுங்கள்… மனிதன் ஒருவன் தான் இதை உருவாக்க முடியும்…!
 
மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட உணர்வைச் சுவாசித்து அந்த வலுவான உணர்வு வரும் பொழுது இந்த உடலில் உள்ள எளிமையான அணுக்கள் மடிந்து வலுவான உணர்வுகள் விளைந்து உடலை விட்டுச் சென்ற பின் அதைப் போன்ற கொடூர மிருகங்களாக மாற்றி விடுகின்றது.
 
பல கோடிச் சரீரங்களிலிருந்து விடுபட்ட பின் இதை அறிந்து உணர்ந்து வென்றவன் அகஸ்தியன் துருவனாகி கணவனும் மனைவியும் இரு மனம் ஒன்றென இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து பேரருளைத் தனக்குள் உருவாக்கி (எல்லாவற்றையும் இயக்குவது தான் பேரருள் என்பது) பேரொளி என்ற உணர்வினை உருவாக்கினான். தன் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் ஒளியாக உருவாக்கினான் அகஸ்தியன்.
 
1.துருவ நட்சத்திரமோ 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக் கதிர்களை எடுத்து ஒளியாக மாற்றிக் கொள்கிறது
2.அதிலிருந்து வரக்கூடியதை நாமும் எடுத்தால் மின்னல்கள் பலவாறு பரவினாலும் அதனைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து
3.வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாதபடி உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுகின்றோம்.
 
ஒவ்வொருவரும் இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
 
நீங்கள் எதை எண்ணி ஏங்குகின்றீர்களோ அதை உருவாக்கும் பொறுப்பு உங்களுடைய உயிருடையதாகும். உருவாக்கி பின் மீண்டும் அதற்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிருடைய வேலை
 
ஆகவே நாம் பேரருள் பேரொளி என்ற அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்குவோம் பிறவியில்லா நிலையை அடைவோம்