ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2025

நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்


இந்த வாழ்க்கையில் அடிக்கடி நம்மை அறியாமல் வேதனைப்பட்டோம் பயந்தோம்… என்றால் அத்தகைய உணர்வுகளினால் உடலில் இருக்கக்கூடிய பித்த சுரப்பிகள் சுரக்கும் சுரப்பும் அதிகரித்துவிடும்.
 
பாம்பு கடுமையான தன் விஷத்தின் தன்மை கொண்டு அதனுடைய தலை சிறிதாக இருப்பினும் பெரிய உயிரினங்களைக் கூட விழுங்க முயற்சிக்கும். அந்த உயிரினத்தைப் பிடித்து விட்டால் தன் உடலில் உருவான விஷத்தின் தன்மை கொண்டு அந்த உயிரினத்திலே பாய்ச்சி அதைப் பலவீனப்படுத்தி உடலுக்குள் செல்லச் செல்ல அந்த உயிரினம் கரையும் தன்மை அடைகின்றது.
 
அதைப்போல மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் நாம் உணவாக உட்கொண்டாலும் நமக்குள் இருக்கும் பித்த சுரபி அதுவும் நஞ்சு தான்.
1.பித்த சுரப்பி எந்த அளவிற்கு உமிழ்த்துகின்றதோ
2.து உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவைக் கரைத்து விடுகின்றது.
 
அடிக்கடி நாம் கடினமான உணவுப் பொருளை உட்கொள்கிறோம் என்றால் பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு அந்தக் கடினப் பொருளைச் சீக்கிரமே அது கரைத்து விடச் செய்யும்.
 
ஆனால் அடுத்த சமயங்களில் இந்த கடின பொருளை நாம் உட்கொள்ளவில்லை என்றால்
1.பித்த சுரப்பி உமிழ்த்திய வேகத்தில் நஞ்சு அதிகமாகி குடலுக்குள் அரிப்பும்
2.பசி கொடூரமாக இருந்தாலும் உணவு உட்கொள்ள முடியாதபடி தடைப்படுத்தும்.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது உடலின் உணர்வின் செல்கள் சீராக இயங்காது.
4.அப்போது உணவாக உட்கொள்வதில் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படுகின்றது.
5.சுவை அறியவில்லை என்றால் உணவை உள்ளே ஈர்க்கும் திறன் அது தடைப்படுகின்றது.
6.பித்தத்தில் கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உணவை உள்ளே செல்ல விடாதபடி வெளிப்படுத்தும் சக்தியாக மாற்றி விடுகின்றது.
 
உதாரணமாக… ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் தண்ணீரைத் தெளிப்பார்ண்ணெய் ந்த அளவுக்குக் காய்ந்திருக்கிறது…? என்று பரீட்சித்துப் பார்ப்பார். வடையைத் தட்டிப் போடும் பொழுது அதில் எழும் நாதத்தின் ஒலி கொண்டு வெப்பத்தின் தனலைக் கண்டு கொள்கிறார்.
 
வெப்பம் சரியாக இருந்தால் வடை நன்றாக வேகின்றது சுவையாகவும் இருக்கின்றது. ஆனால் வெப்பம் சரியாக இல்லை என்றால் வடையைத் தட்டிப் போட்டால் அது லேசாக இருக்கும் பொழுது எண்ணெய் ஊடுருவி விடும் டை சுவை அற்றுப் போய்விடும்.
 
ஆக
1.வெப்பத்திற்குத் தக்கவாறு வடையில் அந்த மாவின் சத்தைச் சுவை கொண்டதாக மாற்றுவது போன்று
2.நமது உணர்வின் இயக்கச் சக்தி எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதைப் போன்றே ஜீரணிக்கும் சக்தி பித் சுரபிகளுக்கு வருகின்றது.
3.பித்தம் அதிகரித்து விட்டால் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மையும் குறைந்து விடுகின்றது உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.
 
ஏனென்றால் சாதாரணமாகத் தான் நாம் எண்ணினோம் கோப்பட்டோம் வேதனைப்பட்டோம் எல்லாம் வேடிக்கை தானே பார்த்தோம் என்று நாம் இருக்கலாம்.
 
அந்தக் கோபித்த உணர்வின் செயல்கள் நம் உடலில் எவ்வாறு விளைந்து மாறுகிறது என்ற நிலையை தத்துவ ஞானிகள் இப்படித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
1.ஆகவே நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் இயக்கும் மனித உணர்வுகள் அனைத்தையும்
2.தெரிந்திடும் நிலையும் தெளிந்து செயல்படும் நிலையும் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
 
அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.