
பாதுகாப்புக் கவசம்
அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை…
1.இயற்கை எப்படி விளைந்தது…? என்றும்
2.இயற்கையில் இருந்து
ஞானிகள் எவ்வாறு மீண்டனர்…? என்பதையும்
3.இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கப்படும் பொழுது நீங்கள் செவி வழி அதைக்
கேட்டுக் கூர்ந்து கவனித்து
4.அந்த உணர்வினை நுகர்ந்தது அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம்
நமச்சிவாய என்று உங்கள் உடலாக உருவாக்கி விடுகின்றது உயிர்.
ஆக இவை அனைத்தும் உங்கள் எதிர்காலத்தில்
வரும் பகைமை உணர்வுகள் தாக்காது அதனின்று விடுபடும் அருள் ஒளியின் உணர்வினைச் சேர்த்தால் இது உங்களைப் பாதுகாக்கும்
சேனாதிபதி என்ற நிலை பெறுகின்றது.
அத்தகைய நிலைகள்
1.உங்களுக்கு ஒரு
பாதுகாப்புக் கவசமாக உணர்வின் அணுக்களைப் பெறச் செய்ய
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கலந்து அதனை உருவாக்கினால்
இந்த உணர்வின் எண்ணம் உங்களைக் காக்கும்.
அதுவே சேனாதிபதி.
எண்ணத்தின் தன்மை கொண்டு விண்ணின் நிலையை
நீங்கள் நுகர்ந்தறிந்தால் உங்கள்
உயிர் அதை உருவாக்கி விடுகின்றது. மனிதன் தான் இதைச் செய்ய முடியும்… பிரம்மாவைச்
சிறை பிடித்தான்.
அருள் ஒளி பெறும் உணர்வை நாம் நுகர்ந்தால்
உணர்வின் அறிவாக ஒளியின் சரீரமாக மாற்றும்… ஒளிச் சுடராக
உருவாக்கும்.
ஆகவே காலத்தால் விளைந்த விஷத் தன்மைகளை மாற்றிச் சுவை கொண்டதாக… இருளற்ற ஒளியான நிலைகளை
உருவாக்கும் உணர்வுகள் பெறுகின்றது. இதனை நாம் பெறும் மார்க்கம் இதுதான்.
ஆகவே பேரருள் பேரொளி பெற்ற
அருள் உணர்வினை நம் உடலுக்குள்
இருக்கக்கூடிய அணுக்களில் இணைத்தால் பேரொளி என்று உருவாக்கி
விடுகின்றது… உடலை ஒளியாக மாற்றி விடுகின்றது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்து அந்த அரும்பெரும்
சக்தியை ஏங்கிப் பெற்று
2.நம் உடலில் பரப்பி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெறச் செய்வோம்.
3.பேரருள் பெறும் தன்மையாக… ஏகாந்த நிலையை அடைவோம்.