ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2025

இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்

இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்


காடுகளுக்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று பல உண்மை நிலைகளை அறியும்படி செய்தார்.
 
புலி கொடூரமாக பல மான்களை அடித்து உட்கொள்கின்றது ஆனால் மானையே அதிகமாக அந்தப் புலி உட்கொண்டிருந்தால் அதனுடைய முதுமைப் பருவத்திலே உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த உயிரான்மா மானினுடைய ஈர்ப்புக்குள் செல்வதையும் காட்டுகின்றார்.
 
அதே சமயத்தில்… புலி இறந்த பின்
1.புலியின் உடலை வளர்த்த அணுக்கள் அந்த உடலையே உட்கொள்கின்றது.
2.எதை எதையெல்லாம் இந்தப் புலி கொன்று விழுங்கியதோ அதனதன் அணுக்களின் தன்மையாக
3.உடல் உறுப்புகளில் உள்ள நிலைகள் அந்தப் புழுக்கள் அந்த உடலைச் சாப்பிடுகின்றது.
 
பின் இதிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மை நாற்றம் ஆகின்றது. அது ஆவியாக மாறுகின்றது சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்கின்றது அலைகளாகச் செல்கின்றது.
 
பல தாவர இனங்களை புசித்த உயிரினங்களின் உடல்களை இது உட்கொண்டதால் அத்தகைய உணர்வின் தன்மை கொண்ட
1.அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிவரும் வாசனைகளைச் சூரியன் கவர்ந்து கொண்ட பின்
2.இதே போல இன்னொரு பாம்பு மடிந்திருந்து அதனுடைய உணர்வின் அலைகள் வெளி வருவதைக் (அந்த மத்தை) கண்டபின்
3.அது வலுவான நிலையாக இருப்பதால் புலியின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.
4.அது ஓடும் பாதையிலே ஒரு விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணத்துடன் இது மோதினால்
5.கிறு…கிறு… என்று சுழற்சியின் தன்மை அடைகின்றது.
 
சுழற்சியின் தன்மை அடைந்தபின் மூன்றும் இரண்டறக் கலந்து அது ஒரு ஒரு தாவர இன வித்தாக கொடியாக மாறுகின்றது. பூமியின் ஈர்ப்பிலே பட்டப்பின் கொடியின் தன்மை அடைகின்றது.
 
ந்தக் கொடி மூன்று உணர்வும் (புலி+பாம்பு+விஷச்செடி) கலந்து உருவானது. அந்தந்த உடலில் இருந்து வெளிப்படக்கூடிய அழுகிய மங்களைச் சூரியன் எடுத்துக் கொண்ட எந்த உணர்வின் தன்மை பெற்றதோ அந்த மத்தின் தன்மை கொண்டு கொடியின் தன்மை அடைகின்றது…”
 
உடல்கள் இறந்த பின் பெற்ற உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியன் எப்படிக் கவர்ந்து வைத்துள்ளது…? நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டுகின்றார்.
1.அதைப் பார்ப்பதற்குண்டான சக்தியை கொடுத்தார். அனுபவரீதியிலே தெரிந்து கொண்டது.
2.இதை எல்லாம் புத்தகங்களிலே பார்ப்பது மிகவும் கடினம்.
 
அப்படிக் கொடியாக வளர்ந்த நிலையில் ஜீவனுள்ள உயிரினங்கள் இதன் அருகில் வந்தால் அலுங்காமல் அது நகர்ந்து வரும்.
1.பாம்பு விழுங்குவது போன்று அந்தக் கொடி சுற்றிவிடும்
2.உடலில் இருக்கும் சத்தை எல்லாம் உறிஞ்சி விடும் பின் மரணம் தான்.
 
சந்தன மகாலிங்கம் என்ற குகைப் பகுதிகளில் அங்கே புலியினங்களும் பாம்பினங்களும் ஜாஸ்தி உண்டு. த்தகைய கொடிகள் உண்டு பெரிய விலங்குகள் இறந்த பின் பச்சிலை மூலிகைகளும் பல நிலைகள் உண்டு அஸ்ஸாம் காடுகளிலும் இதைப் போன்று ண்டு.
 
மிருகங்களும் மற்ற உயிரினங்களும் இதைப் போன்று மடிந்த நிலைகள் கொண்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் வெளியே செல்லும் பொழுது அதற்கு ஒத்த மற்ற உடலுக்குள் செல்கின்றது உடல் பெறுகின்றது.
 
ஆனால் இந்த உடலில் இருந்து கெட்ட மணம் வெளி வந்த பின் சூரியன் எடுத்துக் கொண்டால் அவைகள் கலந்து கொடியின் தன்மைகளாக செடியின் தன்மைகள் எப்படி மாறுகிறது…? அந்தச் செடி கொடிகள் ரத்தத்தை உறிஞ்சும் தன்மை எப்படிப் பெறுகின்றது…? என்பதை அங்கே காட்டுகின்றார்.