
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்
பிறருடன்
பற்று கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஆனால்
அவருடைய சந்தர்ப்பம் நோயாகி விட்டால் அதை நாம் நுகர்ந்து நமக்குள் ஜீவன் கொடுக்காதபடி
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அருள் வழியைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால்
யாருடன் அவ்வாறு பழகினோமோ வாழ்க்கையில்
அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் சும்மா இருக்க முடியுமா…? மாமனாரோ மாமியாரோ உடல் சரியில்லை என்றால் சும்மா இருக்க முடியுமா…?
1.அந்த
உணர்வை நுகர்ந்தே அறிய வேண்டியதிருக்கும்.
2.உயிர்
ஓ என்று ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது.
இதைப்
போன்ற நிலைகளைத் துடைப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
எண்ணிப் பழகுதல் வேண்டும்.
துயரமான
நிலைகளைக் கேட்க நேர்ந்தால்
1.அந்தக் கணத்திலேயே துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.அப்போதே அந்த உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று தீமை புகாதபடி செயல்படுத்த வேண்டும்.
இதைத்தான்
வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் மடி மீது இரண்யனை
வைத்துப் பிளந்தான் என்று சொல்வது.
ஆகவே ஞானிகள் கூறியபடி நினைவை விண்ணிலே செலுத்தி
மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்தத் துருவ
நட்சத்திரத்தின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல்
வேண்டும்.
ஏனென்றால்
அவன் மனிதனில் தீமைகளை எல்லாம் வென்ற அகஸ்தியன்
இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைத் தான் பின் வந்தோர்
கவர்ந்து
2.நாமெல்லாம் இந்த நிலைகளை அறியும்படி செய்கின்றார்கள் சப்தரிஷிகள்
3.சப்தரிஷி மண்டலங்களாக அவர்கள் வாழ்கின்றார்கள்.
அதையெல்லாம்
உணர்த்தும் நிலை தான் விநாயகர் தத்துவம்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மனதில்
பதிவாக்கி நினைவை உயிருடன் ஒன்றிப் புருவ மத்தியிலே வைத்து நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
நாம்
எதை எண்ணுகின்றோமோ அதை உயிரான ஈசன் அவன் உருவாக்குகின்றான். கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஏங்கித்
தியானத்தில் வேண்டும்.
வட
மேற்காகத்தான் விநாயகரை வைத்திருப்பார்கள் வடகிழக்காக நாம்
அங்கே பார்க்கின்றோம்.
1.வட கிழக்காக நாம் நினைவைச் செலுத்தினால்…
2.துருவ நட்சத்திரத்தின் எல்லை அந்தத் திசையில்
இருப்பதால்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியினை அந்த
பாதையில் பூமி கவர்ந்து வரும் நிலையில் நாம் நுகர்ந்து
4.நமக்குள் இந்த உணர்வினை பதிந்து உடல் உள்ள தீமைகளை
அகற்றும் அந்த நிலையை நமக்குள் உருவாக்குகின்றார்கள் ஞானிகள்.
துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா
ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பதிவாக்கி… உடலுக்குள் செலுத்தும் படி செய்கின்றார்கள்.
கண்ணிலே
உற்று நோக்கி துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது
1.அதே உணர்வின் தன்மையைப் புருவ மத்தியில்
எண்ணி கண்ணின் நினைவை மீண்டும் உடலுக்குள் செலுத்தி
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதைப் பெற வேண்டும்
என்ற உணர்வினை நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஊட்டுதல்
வேண்டும்.
கண்ணன்
கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று இதைத் தெளிவாக்குகின்றார்கள்.
இதையெல்லாம்
ஒரு பழக்கமாக நாம் வைத்து அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம்
எப்பொழுதும் இணைந்திருக்கும்படி
2.நாம் ஒரு பயிற்சியாக செயல்படுத்திக் கொள்தல் வேண்டும்.