ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2025

“ஈஸ்வர ஜோதி”

“ஈஸ்வர ஜோதி”


பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும் குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்... கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்... ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்... ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,
 
அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா...
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?
 
“உன் முயற்சி தான் ஏற்பு திரை விலக்கிடும் முயற்சியே தியானம்...!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்... உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்... அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)
 
வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”
 
பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்...! என்பது என்ன பேதைமை…?
 
சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்... நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது) அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?
 
உன் முயற்சி தான் ஏற்பு.
 
1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் - “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”
 
கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்... சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8..பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டுஎன்றுமே ஏகாந்தமாகபேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்.