
வரும் வினைக்காக அஞ்சினால் அதிலே தான் சிக்குவோம்… மீளுவோம் என்ற நம்பிக்கை தான் வேண்டும்
வினைக்கு அஞ்சிடுவோர்
வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்
1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”
எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.
அரைத்த நெல் மாவை
வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து
உரைப்பது எது…?
மழை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?
வேதாள மகரிஷி அன்று
உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.
சூரசம்ஹார நிலை
என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே…!
உடலின் தாவு என்றிடும்
செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே
சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”
முள்முனை முள் எடுப்பதற்கே
காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான “வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை…”
“அகப்பேழையைத் திறந்து பார்…” என்று உரைத்த வேதாள மகரிஷி
கூற்று கூற்றுபவன் எனக் கால வெள்ளத்தைத் தேக்கிக் காட்டிய முறையே
சித்துக்களின் வளர்ப்பின் பலன்.