அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த நஞ்சினை
வென்றிட்ட வழிகளிலேயே நாமும் செயல்பட வேண்டும்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு
மனமும் ஒன்றிட வேண்டும் என்று உணர்வின் தன்மையை வளர்த்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து
இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக உருவாக்கி எத்தகைய நஞ்சினையும் வென்றிடும் ஒளியின்
தன்மை பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அவன் வழியிலேயே நாமும் சென்று
எந்த நேரம் இந்த உடலிலிருந்து நாம் பிரிந்தாலும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து
பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட நாம் ஒவ்வொரு நாளும் முயற்சிப்போம்.
இதை ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால்
இந்த மனித வாழ்க்கையில் நமது செல்வம் நிலைப்பதில்லை நம் உடலும் நிலைப்பதில்லை.
நிலையில்லாத இந்த உடலுக்கு நிலையாக
இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு தேடிய செல்வத்தைச் சீராக பயன்படுத்தத் தவறும் போது
அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகி விடுகின்றது.
ஏனென்றால் நாம் சேமித்த செல்வத்தை
நம் பிள்ளைகள் செலவழிக்கின்றார்கள் அல்லது கடன் கொடுத்தது திரும்ப வரவில்லை என்றால்
அதன் வழி கொண்டு வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.
1.அந்த வேதனைப்படும் நிலையே நமக்குள்
எதிரி என்ற உணர்வுகளை உருவாக்கி
2.செல்வத்தைக் காக்கும் செயலை
இழந்து
3.உடலின் தன்மை கொண்டு நாம் செல்வத்தைச்
சேமித்தாலும்
4.அதனால் வேதனை என்ற உணர்வுகள்
நுகர்ந்து இந்த உடலையே அழித்திடும் தன்மை வருகின்றது.
ஆகவே அந்தச் செல்வம் நம் உடலைக்
காப்பதில்லை. அந்தச் செல்வம் நல்ல குணங்களையும் காப்பதில்லை. இருப்பினும் மனிதன் என்ற
நிலையைச் சீர்குலையச் செய்து செல்வத்தால் பேரழிவு வருகின்றது.
செல்வம் தேவைதான்... செல்வத்தினைத்
தேடும் முறைகள் வேறு. செல்வத்தைத் தேடும் முறைகள இருப்பினும் “போதும்...” என்ற மனம்
இருந்தால் செல்வம் தன்னை நாடியே அது வரும்.
ஆனால் தனக்குச் செல்வம் வேண்டும்
என்ற நிலை வரப்படும்போது அந்த உணர்வின் இயக்கமாகக் குறைகளைச் செயல்படுத்தத் தான் செய்யும்.
மற்றவருடைய பொருளை (மனத்தை) அறியத் தெரியாது. உண்மையின் உணர்வை அறியத் தெரியாது.
செல்வத்தையே தேடும் நிலையோ அல்லது
அதை நமக்குள் பெறும் நிலையோ வரும்போது
1.ஈகை என்ற நிலை வராது... இரக்கம்
என்ற நிலைகளும் வராது...!
2.பண்பென்ற நிலைகளை அழிக்கப்படுகிறது
3.துன்புறுத்தும் உணர்வே அங்கே
விளைகின்றது... ஒதுக்கும் நிலையே இங்கு வருகின்றது.
இப்படிப்பட்ட உணர்வின் தன்மைகளத்
தனக்குள் எடுக்கும் பொழுது செல்வத்தால் நமக்குள் தீமையின் தன்மை தான் வருகின்றதே தவிர
நன்மை இல்லை.
செல்வத்தைப் பெற்றிருந்தாலும்...
கடைசியில் செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்...! என்று பின்னாட்களில் வேதனை என்ற
உணர்வே வருகின்றது.
ஆக... தேடிய செல்வத்தால் விஷத்தின்
தன்மை தனக்குள் உருவாக்கப்பட்டு உடலிலிருந்து நாம் அகன்ற பின் விஷத்தின் உணர்வு அதிகரித்தால்
மனிதன் சிந்தனையை இழக்கப்பட்டு மனிதனல்லாத உடலை உருவாக்கிடும் நிலையே வருகிறது.
இன்னொரு பற்று கொண்ட மனித உடலுக்குள் இந்த உயிரான்மா
சென்றாலும்... எடுத்துக் கொண்ட வேதனைப்படுத்தும் உணர்வு கொண்டு ஒருவர் நமக்குக் கொடுக்கவில்லை
என்றால் இவன் தான் என்னை வேதனைக்குள்ளாக்கினான் என்று எண்ணினால் அந்த உடலுக்குள் புகுந்து
இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கி அதையும் வீழ்த்தத் தான் செய்யும்.
வீழ்த்திய பின் அடுத்து பாம்பினமோ
தேளினமோ போன்ற நிலையை உயிர் உருவாக்கி விடுகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
ஏனென்றால் விஷத்தின் தன்மை அதிகரித்தால்
அந்த விஷத்தின் துணை கொண்டு மற்றதைக் கரைத்து தான் உணவாக உட்கொள்ளும் இதற்கே உதவும்.
தன் உணவுக்காக ஊர்ந்து சென்று
பிறிதொரு எதிரி என்ற நிலை தன்னை தாக்கிடாது அஞ்சி வாழும் நிலையில் நரக வேதனையே அது
அனுபவிக்கின்றது. அத்தகைய நரக லோகத்தின் நிலைக்கு நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.
1.ஆகவே பல கோடிச் சரீரங்களைக்
கடந்து
2.சொர்க்க பூமியாக சொர்க்க உடலாக
சொர்க்க லோகமாக உருவாக்கிடும் உயிரை நாம் மதித்திடல் வேண்டும்
3.தீமைகள் நமக்குள் உருவாகாதபடி
ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை உருவாக்க வேண்டும்.