நம் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று
ஆர்வப்படுகின்றோம். ஆனால் குழந்தை விளையாடப் போகும்போது ஏதோ ஞாபக சக்திக் குறைவால்
படிப்பு குறைவாகி விடுகின்றது.
படிக்க முடியவில்லை என்றால் அவனுக்கு எவ்வாறு
ஊக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மாறாக நாம் என்ன செய்கின்றோம்…?
அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட
நிலையில் அவன் படிக்கவில்லை என்றால் உடனே அந்த இடத்தில் வேதனைப்படுகின்றோம்.
வேதனைப்படுத்துகின்றான் என்றால் “அவனுக்கு நல்லதை
எடுத்து எப்படிச் சொல்வது…?” என்று புரியவில்லை. உனக்கு எவ்வளவு காசு செலவு
செய்கின்றேன்…! நீ இப்படிச் செய்கின்றேயே…! என்று திட்ட ஆரம்பிக்கின்றோம்.
வேதனையாகச் சொல்லப்படும்போது அவனுக்குள் இது
பதிவாகிறது. இந்த உணர்வு அங்கு என்ன செய்கின்றது…? அது ஓ…ம் நமச்சிவாய அவன் உடலாகின்றது.
அப்புறம் திட்ட ஆரம்பித்தால் அம்மாவைப்
பார்க்கும் போதெல்லாம் “எப்பொழுது பார்த்தாலும் என்னை இப்படியே திட்டுகின்றார்கள்..”
என்று இந்த உணர்வு படிக்கப்போகும் போதெல்லாம் அவனுக்கு இந்த நினைவு வரும்.
அடுத்தாற்படி புத்தகத்தை எடுத்தாலே அம்மா
திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நிலை வராது. இல்லையென்றால் அப்பா
திட்டிய ஞாபகம் தான் வருமே தவிர பாடத்தின் நினைவு வராது.
அப்போது அது வாலியாகின்றது. வேதனை என்ற உணர்வை
நுகர்ந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்….?
குகையிலிருக்கும் வாலியை இராமன் கல்லைப் போட்டு
மூடி அவன் வெளி வராது செய்கிறான் என்று காவியத்தில் காட்டியுள்ளார் வான்மீகி. வேதனை
என்ற உணர்வு வந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்…?
சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டுமென்றால் அந்த
குழந்தையின் மேல் இருக்கும் வேதனையை எடுத்த உடனே உள்ளுக்குள் போகாதபடி அதை மூடி விட
வேண்டும்.
“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச்
சக்தி வாய்ந்த நிலைகளைத் தனக்குள் எடுக்க வேண்டும்.
குழந்தை எண்ணி வேதனைப்படுவதை நேர்முகமாகத் தள்ளிவிட்டுப்
போக முடியாது. அதற்குத் தான் புருவ மத்தியில் அடைக்க வேண்டும் என்று சொல்வது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள்
வளர்த்த பின் என்ன செய்கின்றது…? இதோடு (வெளியிலே) நின்று விடுகின்றது.
அதாவது ரிஷியின் மகன் நாரதன்…! அங்கே உருவான
உணர்வு உயிரிலே பட்டபின் சக்திவாய்ந்த நிலைகள் கொண்டு அந்தத் தீமைகளை நீக்கும்.
அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருளும்
பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற
வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே கொண்டு வரவேண்டும்.
கண்ணன் என்ன செய்கின்றான்…? எல்லாரிடமும் போய்ச்
சொல்வான்.
1.இந்திரலோகத்தைக் காட்டி இங்கிருக்கின்ற
செய்தியை அங்கே சொல்கின்றான்
2.அங்கிருக்கின்ற செய்தியை இங்கே சொல்கின்றான்…
எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கின்றான்
3.இந்தக் கண்களின் இயக்கங்கள் தான் அது…!
அதாவது நம் உடலுக்குள் அந்த கண்ணின் நினைவைச்
செலுத்தி என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இந்த உணர்வைக் கொண்டு வந்து இங்கே
அடைத்துவிட வேண்டும்.
ஆனால் வேதனையான உணர்வுகளை உள்ளே விட்டால் உடலிலுள்ள அணுக்கள் என்ன செய்யும்…? சாப்பாடு
கிடைக்கின்றது என்றால் சும்மாவா இருக்கும்..? முந்திக் கொண்டு வரும்.
அப்பொழுது இந்த உணர்வு அதிகமாக இருந்தால் நம்
உணர்ச்சிகள் அனைத்தும் நம் செயல்கள் அனைத்தும் வேதனையும் ஆத்திரமும் கோபமுமாக மாற்றிவிடுகின்றது.
அப்படி ஆகாமல் தடுக்க வேண்டும் என்று தான்
ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற
வேண்டும் என்று எண்ணி இங்கே நிறுத்திவிட வேண்டும் என்று சொல்கிறோம்.
அது உடலுக்குள் வலுப்பெற்றபின் என்ன செய்கின்றது…?
1.கெட்ட அணுக்கள் இருக்கிறது அல்லவா…!
2.அதற்கு சாப்பாடு கிடைக்காது செய்கிறது
3.இழுக்கக்கூடிய சக்தி இல்லாது ஆக்குகிறது.
அது தான் கண்ணன் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு
உபதேசித்தான் என்பது. அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்துக் கொண்ட
பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் படைக்கும் சக்தியாக
மாற்றுகின்றது.
மற்ற அணுக்களுக்கு அதனதன் சத்தை இழுக்கக்கூடிய
சக்தி இல்லை. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்கே வலுவாக
எண்ணும்போது நம் ஆன்மாவில் இருக்கும் தீமை செய்யும் உணர்வுகளை படிப்படியாக சூரியன்
எடுத்துக் கொள்கின்றது. தீமைகளைத் தள்ளி விடுகின்றது.
துணியில் அழுக்குப் பட்டால் சோப்பைப் போட்டு நுரையை
ஏற்றி அந்த அழுக்கைத் தள்ளி விடுவதைப்போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலுக்குள்
செலுத்தப்படும்போது இந்த உணர்வு வலிமை பெற… வலிமை பெற… குழந்தை மேல் வரக்கூடிய
வேதனையான உணர்வை இங்கே தள்ளிவிடுகின்றது.
தள்ளிவிட்ட பின் என்ன செய்கின்றோம்…? இந்த
இடத்தில் சிந்திக்க ஆரம்பிக்கின்றோம். அவனுக்கு நல்ல சொல்லையும் சொல்கிறோம்.
நீ படித்துக் கொண்டால் நல்லதப்பா… நீ
படிக்கவில்லை என்றால் உன்னை நீ எப்படிப் பாதுகாத்துக் கொள்வாய்…? நீ படித்துத்
தெரிந்து கொண்டால் உனக்கு நல்லது. நீ தான் உன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
எதிலே குறைவாக இருந்தாயோ அதை நீ இப்படிப்
படித்தாய் என்றால் நன்றாக இருக்கும். நீ இப்படிப் படித்து பார்…! இந்த நிலையை இந்த
உணர்வைச் சொல்லாகச் சொன்னால் இந்த உணர்வை குழந்தை
நுகரும்போது ஓ…ம் நமச்சிவாய.
ஆக… தீமைகளை நீக்கி அந்த அருள் ஒளியை எடுக்கப்படும்போது
அங்கே நாரதனாக வந்து சேர்ந்து நம் குழந்தைக்கு ஞானத்தைப் போதிக்கும் தன்மையாக
வருகின்றது.
1.அவனைக் கல்வியில் சிறந்தவனாக்குகின்றோம்
2.நம் சொல் அவனை நல்வழிப்படுத்தும் செயலாக வரும்.