ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2020

நோய் வராது தடுக்கும் வழி

நாம் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து இன்னல் பட்டுத் தான் மனிதனாக வந்துள்ளோம். இந்தச் சரீரத்திலும்… வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களிலிருந்து விடுபடும் உணர்வைத் தான் நாம் எடுக்க வேண்டும்.
 
உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகப் பேசுகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம். 
 
அதிலே ஒருவன் மற்றவனைச் சாபமிட்டு “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்று சொல்கிறான். அதை நாம் கூர்ந்து பதிவாக்கினால் அவன் சொன்ன உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.
 
அந்த உணர்வுகள் உமிழ்நீராகும் போது நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாறுகின்றது. உடல் முழுவதற்கும் போகின்றது.
 
1.அந்தக் கரு முட்டை… (நாசமாக வேண்டும் என்ற வினை - வித்து) எங்கே போய்த் தேங்குகின்றதோ அந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு
2.ஒரு தட்டான் பூச்சி பூக்களில் முட்டையிட்ட பின் பல பல பட்டாம் பூச்சியாக வருவது போல்
3.நம் கல்லீரலிலோ நுரையீரலிலோ இதயத்திலோ அந்த அணுக் கரு போகப்படும் போது
4.இதயம் வடிகட்டினாலும் ஒரு முட்டை போனாலும் போதும்
5.அந்த இடத்தில் வீக்கமாகி இரத்தம் மாசுபடுகின்றது.
 
அப்பொழுது அந்த அணுவின் மலம் பட்டவுடன் இருதயத்தில் போய் உறைந்து விடுகின்றது. அப்புறம் படக்…படக்… நெஞ்சு வலி வரத் தொடங்குகிறது.
 
நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றால் எத்தனையோ இலட்சம் வேண்டும். அப்பொழுதுதான் சரி செய்ய முடியும். ஆனாலும் ஆபரேஷன் செய்து எத்தனை நாள் நன்றாக இருக்கின்றோம்…?
 
சம்பாதித்த காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொஞ்ச நாள் வாழச் செய்கின்றோம். அப்புறம் என்ன செய்கின்றோம்…?
 
நான் சம்பாரித்தேனே… இப்படியெல்லாம் செய்தேனே… கடைசியில் காசை எல்லாம் இப்படி டாக்டருக்குக் கொண்டு போயி கொடுத்தேனே…! என்று இப்படி ஒரு வேதனை.
 
அடுத்தாற்படி வீட்டில் இருக்கக்கூடிய சண்டையோ சச்சரவோ குறையுமா என்றால் இல்லை….! பணம் குறைந்தவுடன் இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகும்.
 
அப்பொழுது இந்த வேதனை அதிகமாகும்போது என்ன செய்கின்றது…? நம் உடலிலே பலவிதமான நோய்கள் வருகின்றது.
 
என்னடா இது…! ஒன்று போனது… பாக்கி எல்லாம் சேர்த்து நம் உடலிலே இப்படி ஆகிவிட்டதே என்று இந்த உடலில் வேதனையெல்லாம் எடுத்த பிற்பாடு இந்த உயிர் வெளியில் செல்லும் பொழுது என்ன செய்கின்றது…?
 
அந்த வேதனை என்ற நஞ்சுக்குத் தக்கவாறு உயிரினங்களின் உடலிலே கொண்டு விட்டு விடுகிறது.
 
ஆக… எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை நாம் மதிக்க வேண்டுமா இல்லையா…?
 
தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.
 
தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?
 
தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.
 
இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்த சக்தி எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்.
 
ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?
 
உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)
 
“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று  பல எண்ணங்கள் வருகிறது. நான் தியானத்தில் உட்கார்ந்தாலும் முடியவில்லை என்பார்கள்.
 
ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.
 
அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.
 
இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.
 
இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள். 
 

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.