ஒன்றுடன் ஒன்று இணைந்து எண்ணிலடங்கா தாவர இனங்கள் உருவாகி அதை உயிரினங்கள்
உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருப்பெறுகின்றது.
மனித உடல் மடிந்த பின் இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அழுகிய
நிலைகள் ஆகும்போது அதிலே புழுக்கள் உருவாகின்றது.
அந்த உடலை உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது உணவாக உட்கொண்டு அதுவும்
மடியும்போது அந்த மடிந்த நிலைகள் கொண்டு மற்றொரு ஆகாரத்தை எடுத்து அந்தப்
புழுக்கள் பூச்சிகளாக மாறுகின்றது.
அது போன்ற புழுக்களின் தன்மை மடிந்த நிலையில்… மழைக்காலம் வந்தால்
வெப்பமும் மற்றதும் இணைந்து கொண்டபின் பல பல பூச்சிகள் உற்பத்தியாவதைப்
பார்க்கலாம்.
இதிலே பெரும்பகுதி மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவு தானியங்களில் இது பட்டால்
அதை எல்லாம் அழித்துவிடும்.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்பதை குருநாதர் காட்டிற்குள் எம்மை
(ஞானகுரு) அழைத்துச் செல்லப்படும்போது அக்காலங்களில் எவ்வழியில் மனிதன் வளர்ந்தான்…?
மனித உடலில் விளைந்த நிலைகள் எவ்வாறு அலைகளாகச் செல்கின்றது…? என்று காட்டினார்.
1.மனிதனாக வளரும்போது உடலில் அணுக்களாக இருக்கின்றது.
2.மடிந்தால்… உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்ற பின்
3.தனித்து அதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அந்த உணர்வின் அணுக்களின் தன்மை
எதுவோ
4.அதற்குத்தக்க புழுவின் தன்மை அடைகின்றது.
அந்தப் புழுக்களும் மடிந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் மற்ற
தாவர இனங்களில் விழுந்து அதை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது..
தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் புழுத்தன்மையை அடைந்தபின் இந்த உடல்
மடிந்தால் இது நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப பூச்சிகளின் ரூபங்களாக வருகின்றது.
பார்க்கலாம்… பல விதமான புழுக்களையும் பூச்சிகளையும்…!
1.மழைக் காலத்திற்கு முன்னாடி இருக்காது
2.மழை பெய்த பின் புவியின் வெப்பத்தின் தன்மை கொண்டு… இந்த உணர்வின் வேகத் துடிப்பு
கொண்டு…
3.உருவாகும் சக்தியும் பெறுகின்றது என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.
இந்த உண்மைகளை குருநாதர் எவ்வாறு காட்டுகின்றார்…?
அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு அவன் அறிந்த
உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
குருநாதர் அதைப் பின்பற்றி எடுத்து அந்த உண்மையின் உணர்வை வெளிப்படுத்தும்
போது எமக்குள் பாய்ச்சினார்.
1.சூட்சுமத்தில் நடப்பதைக் காட்சிகளாகவும் அந்த உணர்வை நுகர்ந்தபின்
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்கிக்
கொண்டே வருகின்றார்.
ஏனென்றால் விஞ்ஞான அறிவு கொண்டு கற்றுணர்ந்த பின் ஆய்வுக்கூடத்தில்
(LABORATORY) வைத்து மனித உடலில் பல பல பரிசோதனைகளைச் செய்கிறார்கள்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது… பித்தப்பையில் கற்கள் உருவாகின்றது என்றால்
கற்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன…? என்று அன்று மெய்ஞானி கண்டான்
நம் உடலுக்குள் வரும் நோயை போக்க பல விதமான ஆங்கில மருந்துகளை இன்று உட்கொள்கிறோம். இரத்தநாளங்களில்
கலக்கப்படும்போது அந்த உணர்வின் சத்து இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் சென்ற
பின் பித்தசுரபி அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் வடிக்கின்றது.
அப்படி வடிக்கப்படும்போது உறைக்கும் உணர்வு கொண்ட மருந்து அங்கே
சேர்ந்தபின் அது உறையும் தன்மையாக வருகின்றது. பித்த சுரபிகளில் கற்களாக
உருவாகின்றது.
அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து வருவதைக் கிட்னி அது சுத்திகரிக்கக்கூடிய
நிலை வரும்போது உப்புத் தன்மை அடைந்திருந்தால் அங்கேயும் உறையும் தன்மை
அதிகரிக்கின்றது.
பின் சிறு மணலாக மாறினால் அதனின் வளர்ச்சியின் தன்மை கல்லாக மாறுகின்றது...
ஒரு சிலருக்குப் பெரும் கல்லாகக் கூட மாறுகின்றது.
இது எல்லாம்…
1.இந்த இயற்கையின் நிலைகள் ஒவ்வொன்றும் தான் சுவாசித்த நிலைகளும் உணவாக
உட்கொள்ளும் நிலைகளும்
2.தான் வாழ்க்கையில் மற்ற உணர்வின் தன்மைகளைக் கவர்ந்திருந்தாலும்
3.அந்த உணர்வுக்குள் ஏற்படும் இரத்தத்தின் கசிவுகளை (உப்பு நீராகக் கசிவது
போல்) இது எப்படி மாற்றுகின்றது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.
காரணம்… சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும் உணர்வுகளையோ சலிப்பு
கொண்டவர்களையோ நாம் காண நேர்கின்றது. உதாரணமாக ஒரு சிறுநீரகக் கோளாறு உள்ள மனிதனை
உற்றுப்பார்க்கின்றோம்… பழகுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
அதிகமாக அவரிடம் பழகி இருந்தால் அவனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகரப்படும்
போது அவன் உடலில் உணர்வான அந்த உறையும் தன்மை நமக்குள்ளும் வருகின்றது.
1.ஆனால் டாக்டர்கள் பார்க்கப்படும்போது
2.நோயை நீக்க வேண்டுமென்ற உணர்வு வரப்படும்போது இதைக் கவர்வதில்லை.
3.ஒரு இரக்கம் ஈகை கொண்ட டாக்டர் இதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையை
நுகர்ந்தால் அவருக்கும் இதே நோய் வரும்.
ஆகவே இதைப் போல் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் கலந்து நம்
இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது
1.ஒன்றில் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் அதே செயல்களாகச் செயல்படுகின்றது
என்று
2.இதையெல்லாம் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.
இது போன்ற விஷத் தன்மைகள் நம் உறுப்புகளில் சேராதபடி தடுக்க வேண்டும் என்பதற்குத்தான் தியானத்தில் அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடல் உறுப்புகளில் சேர்த்துக் கொண்டே வர வேண்டும் என்று சொல்கிறோம்.