ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 7, 2020

குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களைப் பெற்றால் “நமது” என்று அதைச் சொந்தம் கொண்டாட முடியும்

குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வுகளை அறிவதற்கும் அந்த ஆற்றலைப் பெறுவதற்கும் 20 வருடம் பல கஷ்டங்களை (ஞானகுரு) அனுபவித்தேன்.
 
அதை எல்லாம் இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது 10 நிமிடம் கூட உட்கார முடியாமல் எழுந்து செல்பவர்களும் உண்டு. உட்கார்ந்து இருக்கின்றேன்… “கால் வலிக்கின்றது…” என்று சொல்பவர்களும் உண்டு.
 
சீக்கிரம் சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்று நினைத்தால் இப்படியே என்னத்தையோ அறுத்துக் கொண்டிருக்கின்றார்…! என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்குக் கால் வலி வரும்… இடுப்பு வலி வரும்… கொஞ்ச நேரத்தில் எழுந்து போகலாம் என்ற சொல்லும் வரும்.
 
ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வினை நீங்கள் ஈர்க்கவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை இயக்கத்தான் செய்யும். ஆனால் பெற வேண்டுமென்ற ஏக்கமிருந்தால் நிச்சயம் பெறலாம்.
 
சாதாரணமாக கதாகலாட்சேபம் செய்பவர்கள் சிரிக்கப் பேசுவார்கள்.  கிண்டல் செய்தால் ஆகா…! என்று சிரித்து எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். நான் அப்படிச் சொல்வதற்கில்லை…!
 
மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்றால் இருளை அகற்ற முடியும் என்று நிலைக்குத் தான் சொல்கிறேன். பொறுமையுடன் பொறுத்து இருந்து உணர்வின் தன்மை பதிவாகி இதை நுகரப்படும்போது உங்கள் இடுப்பு வலி கால் வலி நெஞ்சு வலி எல்லாம் குறையத் தொடங்கும்.
 
ஹார்ட் பட…பட.. என்று துடிப்பவர்களும்… உட்கார முடியவில்லை…! என்று சொல்பவர்களும் கூட அமர்ந்து கேட்பார்கள். இதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் உள்ளே போகப் போக உங்களை அது அமைதிப்படுத்திவிடும்.
 
ரொம்ப நேரம் உட்கார முடியாது என்று சிலர் இருப்பார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் உட்கார மாட்டேன் என்று சொல்லியிருப்பார்.
1.ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருப்பார்.
2.எப்படி உட்கார்ந்திருந்தோம்…! என்று தன்னை மறந்திருப்பார்.
3.ஏனென்றால் எதன் உணர்வைக் கவர்ந்து கொண்டோமோ அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளரப்படும்போது
4.மற்ற தீமைகள் நமக்குள் நுகர முடியாதபடி தடைப்படுகின்றது.
 
அருள் உணர்வுகள் வளர்கின்றது தீமையைக் குறைக்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்கில்…” சொல்லி ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.
 
1.உடலைப் பற்றியோ தொழில் நிலைகளைப் பற்றியோ மறந்துவிட்டு
2.சாமி சொல்லும் அந்த அருள் ஒளியை பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
3.எவர் உட்கார்ந்திருக்கின்றனரோ அவருக்கு அந்த அருளுணர்வு பதிவாகின்றது
4.உங்கள் நினைவு தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக மாறுகின்றது.
 
ஆனால் நம்முடைய பழக்க வழக்கத்தில் அடுத்தவர்கள் பேசினால் நாம் ஒட்டுக் கேட்போம். நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றான்…! என்ன சொல்கிறான்…? என்ற எண்ணத்தில் ஒட்டுக் கேட்போம்.
 
ஒட்டுக் கேட்டபின் அந்தத் தீமையின் நிலைகளையே பேச ஆரம்பிப்போம். அவன் செய்யும் தீமையின் உணர்வை ஒட்டுக் கேட்டபின் “அவனை எப்படிக் கெடுப்பது…” என்ற உணர்வுகள் தான் வரும். பதிவான பின் அந்த நினைவே அதிகரிக்கின்றது.
 
இதைப் போலத்தான் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
1.உடலுக்குள் நினைவைச் செலுத்தி “நீ இருப்பா… கொஞ்ச நேரம்…!”
2.சாமி சொல்லும் துருவ நட்சத்திரத்தின் அருளை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக் கொள்கிறேன் என்று
3.இந்த உணர்வின் தன்மையை இப்படி ஒட்டி வைத்தால் தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.
 
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
 
நமது குருநாதர் எம்மை இது போன்று தான் அனுபவத்தைப் பெறச் செய்தார். ஒவ்வொரு நொடியிலும் அதை அறிணந்துணர்ந்து கொள்வற்கு எனக்குள்ளும் தீமைகளைப் பாய்ச்சினார்.
 
அந்த உணர்வின் நினைவுகள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையை உணரச் செய்தார். அந்தத் தீமைகளிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…? என்று அத்தனை துன்பங்களையும் அனுபவித்து மீள்வதற்குக் காட்டினார்.
 
ஆய்வுக் கூடங்களில்…
1.இன்று எப்படி ஒரு பொருளின் தன்மை திரவத்தை ஊற்றிப் பரிசோதித்துப் பார்த்து
2.அதிலிருக்கும் உண்மைகள் ஒவ்வொன்றையும் பெறுகின்றோமோ அதைப் போல்
3.என் உடலிலேயே இந்த உணர்வுகளைப் பாய்ச்சி மெய் உணர்வின் தன்மை அறியும்படி செய்து
4.அத்தகைய நிலையை உருவாக்கினார் நமது குருநாதர்.
 
ஆகவே இதை (குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களை) என்றால் நமது என்ற நிலைகளில் சொந்தம் கொண்டாட முடிகின்றது.
 
எனது குருநாதர் என்று இருந்தாலும்…
1.அதை நீங்களும் உணர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் போது
2.அந்த குரு வழியில் நமக்குள் “நமது…” என்று ஒன்று சேர்த்து வாழும் தன்மை அங்கே வருகின்றது.
 
இந்நேர வரையிலும் வலு கொண்டு உபதேசித்த உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெறவே இதைச் செய்தது.
 
இப்பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் “இதுவே ஒரு பெரிய தியானம்...!
1.அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வு ஈர்க்கப்பட்டது
2.நீங்கள் நுகர்ந்தீர்கள்…. ஒவ்வொரு நிமிடமும் இதை வளர்த்துக் கொள்ளுங்கள்…!