சில ஜோதிடம் பார்ப்பவர்கள்
என்ன செய்வார்கள்…? வருவோரை உற்று நோக்கி நுகர்ந்து நுகர்ந்து பார்ப்பார்கள். ஏதாவது
உணர்வு ஒன்றைச் சொல்வார்கள்.
1.சொல்லும்போது நம் தலை
அசைவதைப் பார்ப்பார்கள்.
2.“ஓ… இப்படியெல்லாம்
இருக்கின்றது…!” என்று (அறிந்து கொண்டு) ஒரு கேள்வியைப் போடுவார்கள்.
3.உங்கள் வீட்டில் இப்படியெல்லாம்
கஷ்டம் இருக்கின்றது என்று தொடர்வார்கள்.
அதாவது வாஸ்து
சாஸ்திரக்காரர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள்.
சில மந்திரங்கள் சொல்லி முகத்தைப் பார்த்து வீட்டைப் பார்த்தவுடன் என்ன
செய்வார்கள்…?
வீட்டில் பையன் ஏதாவது தொல்லை
செய்கிறானா…? என்பார்கள்.
ஆமாம்…! என்று சொன்னால்
போதும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படியே வரிசையாக எடுத்துச் சொல்லிவிட்டு
கடைசியில் இரண்டு வார்த்தையைச் சொல்லி விட்டுக் காசைப் பிடுங்கிக் கொண்டு
போய்விடுவார்கள்.
அவர் சொன்னதைக் கேட்டு
உங்கள் வீட்டை மாற்றி அமைப்பீர்கள்…!
ஆனால் வீட்டில் பத்துப் பேர்
இருப்பார்கள். அதிலே ஒருவர் இனம் புரியாதபடி ஒரு ஆக்சிடண்ட்டைப் பார்க்கின்றான். அதிர்ச்சியால்
புத்தி பேதலித்துப் போகின்றது.
அப்போது அவனை ஆஸ்பத்திரிக்குக்
கொண்டு போகும்போது இந்த வேதனை எல்லோருக்கும் வந்தால் அவன் சொன்ன வாஸ்து என்ன செய்கின்றது…?
வாஸ்து என்றால் யார்…?
1.உயிர்…! வாசுதேவனுக்கும்
தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
2.நாம் நுகர்வதையெல்லாம்… சுவாசித்ததை
எல்லாம்… உருவாக்கக் கூடியது “நம் உயிர் தான்…” என்று இந்த இடத்தில் காட்டுகின்றார்கள்.
தான் பார்க்க வேண்டும் என்ற
உணர்வு உடலுக்குள் வரப்படும்போது வாசுதேவனுக்கும் தேவதிக்கும் சிறைச்சாலைக்குள்
கண்ணன் பிறந்தான். “பார்க்க வேண்டும்…” என்ற இந்த உணர்வுகள் கொண்டு கண்கள்
தோன்றுகின்றது என்று காட்டுகின்றான்.
ஜோதிடக்காரன் சொன்னதைக்
கேட்டால் வாசுதேவன் (உயிர்) என்ன செய்கின்றான்…? அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள்
உருவாக்கிவிடும்.
உங்கள் வீட்டில் கஷ்டமாக
இருக்கின்றதா…? என்றால் ஆமாம் என்று சொல்கின்றோம்.
அடுத்தாற்படி இந்த வீட்டின்
வாசலை உடைத்தால்தான் சரியாக இருக்கும் என்பான். வீட்டின் நிலையை இப்படி மாற்றி வை
என்பான் அல்லது இந்த ஓரத்தில் ஏதாவது ஒன்றை வை என்பான்.
அவன் சொன்னபடி வைத்துவிட
வேண்டும். வைக்கவில்லை என்றால் நான் அன்றைக்கே சொன்னேன் நீ வைக்கவில்லை என்ற
நிலையானால்… அந்த வேதனையால் என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ…? என்று இந்த
உணர்வின் தன்மை மீண்டும் அதையே வளர்த்துக் கொள்ளும்.
இன்னொன்றும் சொல்வார்கள்.
நியுமராலஜி…! அம்மா அப்பா வைத்த பெயரெல்லாம் ஒழுங்காக முழுதாக இருக்கும். உங்கள்
பெயரில் இந்த எழுத்தை இப்படிப் போட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் நியுமராலஜிப்படி
நன்றாக இருக்கும் என்பார்கள்.
இந்த எழுத்துக்களை அந்த
நம்பர்கள் பிரகாரம் இப்படிப் போட்டால் ராசியாக வரும் என்று அவன் சொன்னதைக்
கேட்டுப் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றோம்.
ஏனென்றால் நமக்குள்
இருக்கும் வேதனை உணர்வை நீக்க வேண்டும் என்றால் அதை எல்லாம் நீக்கிய அருள் ஞானியின்
உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.
தப்பாக நினைக்க வேண்டாம்…!
1.இன்றைக்கு இந்த உடலின்
இச்சைக்குத் தான் வாழுகின்றோமே தவிர
2.உடலுக்கு பின் என்ன…? என்ற
நிலைகளை நாம் சிந்திக்கவே இல்லை.
எப்படி இருந்தாலும் இந்த
உடல் மடிகின்றது. ஆனாலும் உடலிலே வாழ்வதற்குத்தான் இத்தனை செல்வங்களை கோடிக்
கோடியாக வைத்துள்ளார்கள்.
இராமயாணத்தில் என்ன
செய்கின்றார்கள்…? என்றால் தனுசுகோடி. தனுசு என்றால் இப்பொழுது நான் சொல்லும்
உணர்வுகள் உங்களைத் தாக்குகிறது… தனுசு. அதே நேரத்தில் இந்த உபதேசங்கள் உங்களை
மகிழச் செய்யும் தனுசு.
தனுசு என்றால் அம்பு
சமஸ்கிருதத்தில்...!
கோடிக்கரை என்ற கடைசி
எல்லையில் மனிதப் பிறவியில் இப்பொழுது நிற்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் வந்த
தீமைகளை எல்லாம் அகற்றினால் தனுசுகோடி.
ஒளி உடல் பெறவேண்டும் என்ற நிலையில் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று அடைய வேண்டும். அது தான் நம் சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள்.