ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 28, 2019

பிரதோஷத்தை நீக்கும் வழி முறைகள்


நமது வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்கள்… சாபமிடுதல்… வேதனைப்படுதல்.. இதை எல்லாம் பரிவுடன் கேட்டால் அது எல்லாம் நமக்குள் வலிமையாகி விடுகின்றது.

அப்போது அதையேல்லாம் நாம் நுகரப்படும் போது அவர்கள் உடலிலே விளைந்த தோஷங்கள் எல்லாம் நமக்குள்ளும் வந்து விளைந்து விடுகின்றது. இதைத்தான் “பிரதோஷம்…!” என்று சொல்வார்கள்.

அந்தப் பிரதோஷத்தை நீக்க நாம் என்ன செய்கின்றோம்…?

சிவனுக்கு முன்னாடி இருக்கிற நந்தீஸ்வரனுக்கு மாலையைப் போட்டு அபிஷேகமும் செய்து அதற்கு வேண்டிய பதார்த்தத்தை எல்லாம் கொடுத்து அந்த நந்தீஸ்வரன் செவியில் போய்ச் சொல்கிறோம்.
1.என் குடும்பத்தில் இப்படிக் கஷ்டமாக இருக்கிறது.
2.என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
3.நான் கொடுத்த கடனைத் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
4.என் வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் நோய் வந்து விட்டது.
5.எங்கள் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் சொல்லு. அவன் பார்த்து  ஏதாவது செய்வான்…!
6.இப்படி ஒரு நிலையில் தான் நாம் அபிஷேகம் ஆராதனை செய்து கொண்டு கோவில்களுக்குப் போகிறோம்.

ஆனால் இவைகள் எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டும்…?

நாம் நல்ல பண்புடன் தான் எல்லோரையும் பார்த்தோம்… கேட்டோம்…! ஆனால் அந்தத் தோஷங்கள் நமக்குள் விளைந்து விட்டது. அதை நாம் நீக்க வேண்டும் அல்லவா…!

எல்லா வகையான பிரதோஷங்களையும் நீக்கிய அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகிக் கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகப் பேரொளியாக இன்றும் நம் பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே வாழ்கிறார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. அதிகாலை நான்கு மணியில் இருந்து துருவப் பகுதியின் வழியாக இழுத்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அப்படிக் கொண்டு வரப்போகும் போது நாம் அந்த நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று பல முறை சொல்லி நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

நான் எனது வாழ்க்கையில் யார் யாரையெல்லாம் பார்த்து அவருடைய கஷ்டங்களையும் துன்பங்களையும், துயரங்களையும் கேட்டுணர்ந்தேனோ… அவர்கள் குடும்பங்களில் எல்லாம் அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து அவர்கள் குடும்பத்தில் அவர்கள் அறியாது சேர்ந்த சகல தோஷங்களும் நீங்க வேண்டும்.

நாங்கள் பார்த்தவர்கள் அனைவரும் தோஷங்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் குடும்பங்கள் அனைத்திலும் படர்ந்து அவர்கள் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நாம் சொன்னோம் என்றால் அப்போது என்ன ஆகின்றது…? (இதை எதற்காக நினைக்க வேண்டும்…?)

மற்றவர்களின் கஷ்டங்களையும் துன்பங்களையும் குறைகளையும் நாம் கேட்டோம் அல்லவா…! அப்பொழுது அவருடைய தோஷ உணர்வுகள் நமக்குள் வந்து பதிவாகின்றது.

அந்த உணர்வுகள் நமக்குள் வராதபடி நாம் (மேலே சொன்ன மாதிரி) எண்ணும் போது
1.“அவர்கள் எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணும் போது”
2.நமக்குள் வந்த அந்தத் தோஷங்களை நீக்கி விடுகின்றோம்
3.அந்தப் பேரொளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்கின்றது.
4.நமக்குள் பிறருடைய தோஷங்களைத் துடைக்கும் சந்தர்ப்பத்தை அப்பொழுது உருவாக்குகின்றோம்.
5.காரணம் அன்று நாம் பகைமை உணர்வை எல்லாம் மறக்கின்றோம்
6.அதே சமயத்தில் மகிழ்ச்சியான உணர்வை உணவாக்குகின்றோம்
7.பிரதோஷத்தை முடித்த பின் சுவை மிக்க உணவை உணவாக்கி மகிழ்ச்சி என்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றோம்.

இப்படி எல்லோரும் இதைப் போல மகிழ்ந்து வாழ வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் சுவையும் மகிழ்ச்சியும் பெறவேண்டும் என்று பிரதோஷம் அன்றைக்கு இப்படி எண்ண வேண்டும்.

இப்படி யாராவது எண்ணுகிறார்களா என்றால் இல்லை…! சாயங்காலம் 4 ல் இருந்து 6 க்குள் காசைக் கொண்டு செலவு செய்து சாங்கியப்படி அதைச் செய்கிறார்கள்.

ஆனால் ஞானிகள் காட்டியது அதிகாலை 4 ல் இருந்து 6 க்குள் நாம் இதை எண்ணச் சொன்னார்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியன் உதயம் ஆகின்றது. அப்பொழுது  பூமியிலிருப்பதை இழுக்கும் சக்தி வருகிறது.

பிரதோஷம் என்ற நிலையில் மேலே சொன்ன மாதிரி நாம் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று எண்ணினால் நாம் அதை (தீமைகளை) இழுக்கும் சக்தி குறைகிறது.
1.நமது ஆன்மா முன்னால் இருக்கும் அந்தத் தீமைகளை நாம் இழுக்க மறுக்கும் பொழுது
2.அந்தச் சூரியன் அது இழுத்துக் கொண்டு போய்விடும்,
3.சூரியன் தனது அருகிலே கொண்டு போனால் அதற்குள் அருகிலே போகும் போது நெருப்பாக மாறுகின்றது. விஷத்தைக் கருக்கி நீக்கி விடுகின்றது.
4.இப்படித் தான் தோஷங்களை அன்று நீக்கும்படிச் சொன்னார்கள்.

ஆனால் நந்தீஸ்வரன் காதில் ஓதி… “இந்தப்பா…! நான் லட்டு ஜிலேபி வாழைப் பழம் ஆப்பிள் பழம் எல்லாம் கொடுத்திருக்கிறேன். என் கஷ்டத்தை எல்லாம் நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா…!” என்று ஞானிகள் சொல்லச் சொல்லவில்லை.

ஏனென்றால் நந்தீஸ்வரன் என்றால் “நாம் எதைச் சுவாசிக்கிறோமோ… அது தான் நமக்குள் உருவாகிறது. அப்பொழுது நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்..?

அந்தப் பேரருள் பெற்ற அந்த ஞானிகள் உணர்வின் தன்மையை நுகர்ந்தால் நமக்குள் அது உருவாகி நமக்குள் பிறருடைய தீமைகளை நீக்கிவிடும். தோஷங்கள் வராது தடுக்க இது உதவும். இப்படித் தான் நாம் பழக்கப்படுத்த வேண்டும்.

காசைக் கொடுத்து விட்டுப் பிரதோஷம் அன்றும் சிவன்ராத்திரி அன்றும் விடிய விடிய முழித்துக் கொண்டு நாம் வரம்பு மீறித் தவறுகளைத் தான் செய்கின்றோமே தவிர
1.தவறை நீக்கும் மார்கங்களை ஞானிகள் காட்டி இருந்தாலும்
2.யாரும் இதைச் செயல்படுத்தவில்லை…! (இது தான் இன்றைய நிலை)