ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 8, 2019

நம் நாட்டு ஞானிகள் காட்டிய ஆலயப் பண்புகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்


அக்காலங்களில் எல்லாம் அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவ புராணம் விநாயக புராணம் போன்றவைகளைக் கற்றுணர்ந்தவர்கள்.

அன்று ஒரு மனிதன் எப்படி ஒழுக்க நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைகள் கொண்டு செயல்படுத்தி வந்தார்கள்.

மார்கழி மாதம் வந்து விட்டதென்றால் அது குளிர் காலமாக இருந்தாலும் அந்தக் காலங்களில் தெய்வீகப் பண்புகளை அந்த மாதம் முழுவதும் எண்ணும் வண்ணம் கதைகளாகச் சொல்வார்கள்.

மற்றவர்கள் அதை அமர்ந்து கேட்டுணர்ந்து
1.தங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளவும்
2.தன்னுடைய எண்ணங்களைச் சரிபடுத்திக் கொள்ளவும்
3.இந்த மார்கழி மாதத்தைப் பயன்படுத்தினார்கள்.

தை மாதத்தை எடுத்துக் கொண்டால் அந்த அறுவடை காலத்திற்கு ஒப்ப அந்த நாம் விளைய வைத்த மணிகள் வெளி வருவதைக் கண்டு அதை எண்ணி மகிழ்ந்து அதைப் போல நமக்குள் உயர்ந்த எண்ணங்களை எவ்வாறு எடுக்க வேண்டும் என்ற அந்த மகிழ்ச்சியைப் பெருக்கினார்கள்.

இதே போல் ஒவ்வொரு மாதத்திலேயும் அதற்குத் தகுந்த காவியங்களைச் சொல்லி அமர்ந்து கேட்கும்படி செய்து ஓரளவுக்குச் சீராக மக்களுடைய மனதைப் பண்படுத்தும் நிலையாகச் செயல்படுத்தினார்கள்.

அக்காலங்களில் ஒவ்வொரு கிராமங்களும் தோறும் சரி இந்தக் காவியங்களை கதைகளாகச் சொல்லி ஒவ்வொரு மாதத்தையும் தேர்ந்தெடுத்து அந்த ஒவ்வொரு மாதத்திலும் அருள் ஞான உணர்வுகளை முழுமையாக அந்த மக்களுக்குப் பெறும் நிலைகளாகச் செய்தார்கள்.

இன்று அது எல்லாம் அறவே இல்லை.

ஒரு கல்யாணம் நடந்தது என்றால் டி.வி. பெட்டியை வாங்கி விட்டு தையா…தக்கா…! என்று ஆட்டம் போடுவதும்… சண்டை போடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே போல் மக்கள் வாழும் ஊர்களில் இருக்கும் தெய்வங்களை வணங்க வேண்டும் என்ற நிலையில்  திருவிழா காலங்கள் வநநால் நான்கு மூலைக்குப் டி.வி.யைப் போட்டு எந்தெந்த அதர்மங்கள் இருக்கிறதோ அதை எல்லாம் பார்த்து ரசித்து வெறுப்புணர்வுகளைத் தோற்றுவிக்கும் நிலையாக எல்லாமே மாறி விட்டது.

1.ஒவ்வொரு மாதங்களிலேயும் தெய்வீகப் பண்புகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று
2.தெளிவாக எடுத்துக் காட்டிய காலங்கள் அனைத்தும்
3.இன்று நம் இந்தியா முழுவதற்கும் மறைந்து விட்டது.

அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் மறைந்து கொண்டே போய் மனிதனுக்குள் உயர்ந்த ஞானத்தைப் பெறும் தகுதிகள் இழந்து விட்டு இன்று நாம் “எங்கேயோ தேடிக் கொண்டிருக்கின்றோம்…!”

ஆக யாரோ செய்வார்..! என்ற நிலைகளில் ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தூண்டிக் கொண்டு
1.ஆலயங்களுக்கு ஒரு சுற்றுலா (PICNIC) செல்வது போல
2.வெறி உணர்வைத் தூண்டிக் கொண்டு தான் ஆலயங்களுக்கு செல்கின்றோம்.

ஆலயங்களில் காட்டிய நெறிகளின் அடிப்படையில் நமக்குள் அந்தTH தெய்வம் எந்த நல்லதைச் செய்கின்றதோ
1.அந்தத் தெய்வ நிலைகள் நாங்கள் பெற வேண்டும்…
2.எங்களுக்குள் சகோதர உணர்வுகள வளர வேண்டும் என்ற
3.அந்த ஞானிகள் காட்டிய உணர்வை அங்கே வழிபடுவதில்லை.

ஆலயத்திற்குச் சென்றாலும் நான் என்னுடைய புகழைத் தேடினாலும் என் அருகிலே இருப்போரை நான் நிந்திக்கும் நிலையும் தொல்லை கொடுக்கும் நிலைகளாகத் தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாவற்றையும் விடுத்துப் பழக வேண்டும். நம் அருகிலே உள்ளவரை நாம் சாந்தப்படுத்தி நமக்குள் உயர்ந்த நிலைகளாக மாற்றும் நிலையாக வர வேண்டும். அந்த நிலைகள் ஏற்படுத்துவதற்குத் தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்தனர்.

கார்த்திகை மாதத்தை எடுத்துக் கொண்டால் கந்த புராணம் என்ற நிலையில்
1.ஆறாவது அறிவு கொண்டு உணர்வின் எண்ண ஒலிகள் எப்படி உருவானதென்ற நிலையும்
2.அந்த முருகன் எப்படிப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்பதையும்
3.மற்ற தீயதை வளராது (பிரம்மாவைச் சிறைப் பிடித்து) நல்லது விளைய வைக்கும் நிலையை முருகன் எப்படிச் செய்தான்..? என்று காட்டினார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு நாம் ஒவ்வொன்றையும் இந்த எண்ணங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் கார்த்திகை மாதங்களில் முருகனைப் பற்றித் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள்.

சிவனைப் பற்றிச் சொல்லும் பொழுது ஜோதியை (திரு அண்ணாமலை) ஏற்றும் நிலைகளைக் காட்டினார்கள்.

நம் உடல் சிவம்.
1,உடலான சிவத்திற்குள் நம்முடைய எண்ணங்கள் ஒவ்வொன்றையும்
2.பளிச்சிடும் எண்ணங்களாக எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று தான்
3.பண்டைய கால காவியங்கள் அனைத்தும் உண்டு.

ஆனால் அதைப் பூராமே திசை திருப்பி அந்த உண்மையினுடைய நிலை அறியாது நமது உடலில் இயக்கும் தன்மையை உணர்த்துவதற்காகக் காட்டப்பட்ட “உண்மைத் தத்துவங்கள்…” காலத்தால் மறைந்து விட்டது.

மறைந்த அந்த உண்மைகளைத் தான் சிறுகச் சிறுக உங்களுக்குள் உணர்த்தி அந்த மெய் ஞானிகள் சென்ற அருள் வழியில் பேரின்பப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வேண்டி யாம் (ஞானகுரு) விரும்புகின்றோம்.