தாய் தந்தை
குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட...
தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி
ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில்
வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.
அன்பென்னும்
வசமாக... பரிவு என்ற இரக்க குணம் காட்டி... பாசம் கொண்ட செயல் மூலம்...!
1.உயிரை
நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய்
சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப் படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில்
செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்...!”
தாய் சக்தி
என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது
என்பது அன்பு கொண்டு தான்.
அன்பு பரிவு
பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால்
ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும்
பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.
அந்த அனுபவங்கள்
மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான
வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு
அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம்
கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.
ஆணின் தன்மையில்
பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப்
புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம்
கொண்டாலே செயல் வேறாகுமப்பா..! அதாவது
1.(POSITIVE
NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண்
என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம்
சூனியமாகிவிடும்...!)
பெண்மை குணங்களை
அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்...?
தன்னுள்
திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால் போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு
ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை...” மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.
அத்தகைய
செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான்
வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் தாய் சக்தியையும் இழந்து அவசரம் ஆத்திரம்
என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான். இந்த உண்மையை உணர்ந்து கொள்வது
மிகவும் நலம்.
ஆகவே உயர்
ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர
குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெறவேண்டும் என்ற
வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.
ஆனால் உயர்
நிலை பெறவேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே
தீருவேன்...! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த
குணம் கொண்டே சம நிலை பெறவேண்டும்.
3.அன்றைய
சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.
பெண்மையின்
குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை
இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப்
பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும்
அதுவும் ஒரு வகை தான்.
ஆகவே சிவ
சக்தி என்ற குணங்களால் தான்... நல்லெண்ணம் கொண்ட... நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு
வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.
ஆணவம் அகங்காரம்
என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம்
வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை
நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின்
முதிர்வு நிலையை எய்திடலாம்.