ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2019

“நம் தமிழ் நாடு உலகிற்கே எடுத்துக் காட்டாக வரவேண்டும்...!” என்ற நிலையில் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வரும் மெய் வழி


உலக மக்கள் அனைவரும் அகஸ்தியமாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா...! என்று நாம் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் தவமிருப்போம்.

1.எந்தத் தென்னாட்டிலிருந்து உலகம் முழுவதற்கும் மெய் ஞானத்தின் தத்துவங்கள் பரவியதோ
2.அதே தென்னாட்டிலிருந்து மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருளால் உலக மக்களை எல்லாம் ஒன்று சேர்த்திடும்...
3.மனித இனத்தைக் காத்திடும் சக்தியாக வெளிப்பட வேண்டும் என்று
4.குருநாதரின் அருளாற்றலை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம் (ஞானகுரு).

உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து உலகைக் காப்பீர்... உங்களையும் காப்பீர்... உங்கள் ஊரைக் காப்பீர்... உலக மக்களைக் காப்பீர்கள்..! என்று வேண்டுகின்றேன்.

நிறைந்த மனதுடன் வாழ்வோம். எல்லோரையும் நிறைவான நிலைகள் பெறச் செய்வோம். அந்த நிறைவின் நிலைகள் கண்டு மகிழ்வோம்.

அந்த மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு எல்லோரும் பேரானந்தப் பெரு நிலையை இந்த வாழ்க்கையிலே அடைவோம். பேரின்பப் பெரு மகிழ்ச்சியை இந்த உடலிலிருந்தே வளர்ப்போம்.

பிறவி இல்லா நிலைகள் என்ற பெரு வாழ்வு வாழ்வோம். என்றும் அழியாத நிலையான ஒளிச் சரீரம் பெறச் செய்யும் வாழ்க்கை வாழ்வோம்.

உலக மக்கள் அனைவரும் மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி அரசியல் பேதமின்றி வாழ்வோம். சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்வோம்.

1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நாட்டு அரசுடன் இணைந்து நாம் எடுத்துக் காட்டினோம் என்றால்
2.அந்த நிலையே நம் அரசும் ஆகின்றது.
3.நாமே அரசாகின்றோம். அரசே நாம் ஆகின்றோம்.

இந்த உயர்ந்த நிலைகள் கொண்டு நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் இந்த அரசும் நலமானதே. அரசே நாம் – ஆக நலமாகின்றோம்.

1.நாம் தான் அரசு
2.அரசு தான் நாம் என்ற நிலைகளில்
3.தீமைகளை வென்று ஞானத்தின் நிலையை வளர்த்த நம் பாரத  நாட்டில் அரசியல் பேதமின்றி வளர்ப்போம்.
4.பேதமற்ற வாழ்க்கை நாம் வாழ்வோம்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்து நம் தமிழ்நாடு உலகிற்கே எடுத்துக் காட்டாக வரவேண்டும் என்ற நிலையில் அதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவோம்.

உலக மக்கள் அனைவரும் பேதமற்ற நிலைகளில் வாழ வேண்டும் என்று “தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...!” என்று போற்றப்படும் இங்கே தெற்கிலே வளர்ந்த அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகளை இந்த உலகிலே பரப்புவோம்.

அந்த மெய் ஞானியின் உணர்வை நாம் ஒருக்கிணைந்து நமக்குள் வளர்ப்போம். உலகம் அனைத்தும் நலம் பெறவேண்டும் என்ற நமது மூச்சலைகளைப் பரப்புவோம்.

நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம். பகைமையற்ற உணர்வுகளுடன் வாழ்வோம்... வளர்வோம்.  எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று அந்த அகஸ்தியமாமகரிஷிகளை வேண்டிப் பிரார்த்திப்போம்... தியானிப்போம்... தவமிருப்போம்...!