இன்று சோமாலியா
நாட்டில் பார்த்தோம் என்றால் அங்கே வாழும் மக்களுக்குக் கிடைக்கும் உணவைக் கொள்ளையடித்துச்
சாப்பிடுவோர் திடமாக நன்றாக இருக்கின்றனர்.
அங்கே இருக்கும்
ஆணும் பெண்ணும் அனாதையாக நடந்து சென்று தங்களுக்குச் சொந்தமான உணவை எடுத்து உட்கொள்ளும்
நிலை கூட அல்லாதபடி மிருகத்திலும் மிருகமாகக் கேடான நிலைகளில் அங்கே செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
மனிதர்களாக
இருந்தும் பல விஞ்ஞான அறிவுகள் இருந்தாலும் அங்கே அப்படித்தான் இன்று உள்ளது. அங்கே
எவ்வளவு மோசமான நிலைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று டி.வி. யில் பார்த்தால்
தெரியும்.
அந்தச் சோமாலியா
நாட்டில் “அமெரிக்கா...” தான் கண்டுபிடித்தவற்றைப் பரீட்சாந்திரமாகச் செயல்படுத்தி
1.தாவர இனங்கள்
வளராத நிலைகளை உண்டாக்கியும்
2.அங்கிருக்கக்கூடிய
மனிதனுடைய சிந்தனைகளைச் சீர்கெடச் செய்தும்
3.விஷமான
உணர்வுகள் உட்புகுந்து அந்த நாட்டையே காக்க முடியாத நிலைகளாக ஆக்கி
4.அங்கே
உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு கடுமையான பஞ்சமாகத் தாண்டவமாடிக் கொண்டுள்ளது.
மற்ற உலக
நாடுகள் எத்தகைய உதவிகளைக் கொடுத்தாலும் அவர்கள் பஞ்சத்தை நிவர்த்திக்க முடியாத நிலைகள்
கொண்டு மிருகத்தை ஒத்த நிலைகளாக வாழ்ந்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.
இதை எல்லாம்
நான் (ஞானகுரு) கண்ணிலே பார்த்து இதைச் சொல்கிறேன். அமெரிக்கா சோமாலியாவில் செய்தது
போல் நம் நாட்டிலேயும் சில வேலைகளைச் செய்துள்ளார்கள்.
நெல்லைப்
பயிரிட்டு வளர்க்கும் பொழுது சிறு பூச்சி வகைகளை அதற்குள் உண்டாக்கி உள்ளார்கள். கடைசியில்
நெல்லை அறுப்போருக்கு உடலிலே அரிப்புகள் தோன்றி அதனால் பல தீமையான விளைவுகள் வருகின்றது.
வாழைத் தோட்டத்திலும்
சும்மா உள்ளே புகுந்து வந்தாலே போதும். உடலின் மேலே தோலில் கருப்பான நிலைகள் ஆகி அரிப்புகள்
அதிகமாகின்றது. மேலே போட்டிருக்கும் இந்தத் துணியை மற்றவர்கள் தொட்டாலும் அதே அரிப்பு
அவர்களுக்கும் வருகின்றது.
சோமாலியா
நாட்டில் உருவாக்கப்பட்ட அந்த விஷத் தன்மைகள் படர்ந்து அதனின் காற்று மண்டலமாக மாறுகிறது.
1.புயல்கள்
அங்கே திசை மாறும் நிலையில் அந்த விஷங்களைக் கவர்ந்து சுழன்று மழை நீருடன் கலந்து
2.அந்த விஷமே
இன்று உலகம் முழுவதும் படரும் நிலைக்கு வந்துவிட்டது.
புயல் வரப்படும்
பொழுது அதிலே கலந்த இந்தத் தீமையின் நிலைகள்
1.எந்த நாட்டில்
இந்த விஷத் தன்மைகளைச் செய்தனரோ அதிலே சிக்கப்பட்டு மேகங்களில் கலந்து
2.எங்கெங்கெல்லாம்
இந்த மேகங்கள் கலைந்து சென்று அது நீராக வடிகின்றதோ
3.அந்த நாட்டில்
எல்லாம் விஷத் தன்மையாக வளர்கின்றது.
4.இன்று
உலகெங்கிலும் புது விதமான பெயர்களுடன் வைரஸ் நோய் பரவுவதன் காரணமும் இது தான்.
அந்த விஷத்
தன்மைகள் மனித உடலுக்குள்ளும் ஊடுருவி மனிதன் இறந்தாலும் அவனுடன் பழகிய உணர்வுகள் கொண்ட
அடுத்த மனிதனுக்குள்ளும் இறந்த உயிராத்மா சென்று அந்த உடலுக்குள்ளும் விஷமான உணர்வுகளை
உந்தச் செய்கின்றது.
விஷ உணர்வுகள்
உந்தி அந்த உணர்வின் சக்தியாக இயக்கி விஷத்தைக் கவரும் நிலையாக உடலிலுள்ள அணுக்களை
எல்லாம் மாற்றி விடுகின்றது. உடலெல்லாம் அரிப்பாகித் தீமைகளை விளைவிக்கும் நிலைகளை
உருவாக்கி விடுகின்றது.
1.இவ்வாறு
இது மனிதனுக்குள் கலந்து கலந்து
2.தீய விளைவுகளாக வளர்ந்து கொண்டே வருகின்றது.
அன்றைய அரசனுடைய
ஆட்சி போல் இல்லாமல் இன்று மக்கள் ஆட்சி என்றாலும் மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும்
காலமாக மாறும் நிலை வந்து விட்டது.
ஒரு நல்ல
பொருளுக்குள் விஷத்தை ஊட்டினால் அந்த நல்ல பொருளின் சத்தின் தன்மை எப்படி இழக்கப்படுகின்றதோ
இதைப் போல
1.மனிதனுடைய
உணர்வுகள் அனைத்தும் முழுமையாக நஞ்சாகிக் கொண்டுள்ளது.
2.சிந்திக்கும்
தன்மையே அற்றுப் போய் விட்டது.
விஷத்தைப்
பாய்ச்சி மற்ற நாட்டினரை எளிதாக வீழ்த்தலாம் என்ற எண்ணத்தில் செயல்படுத்தப்பட்ட செயல்களின்
விளைவால் மனிதர்கள் இனி இங்கே வாழ முடியாத நிலைக்குச் சென்று கொண்டுள்ளது.
இதை எல்லாம்
நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.