ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2019

நாளைய அரசு நல்ல அரசாக ஆட்சியில் அமர “மக்களாகிய நாம் செய்ய வேண்டிய தலையாயக் கடமை…!”


அரசாங்க நிர்வாகத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் பெறவேண்டும். அவர்கள் மன பலம் பெற வேண்டும்.
1.மக்களுக்கு நல் உணர்வு காட்டும் அந்தச் சக்தி
2.அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி இந்த அருள் உணர்வுகளை அவர்களுக்குப் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது நம்முடைய எண்ணம் அவர்களுக்கு நல் வழி காட்டவும் சகோதர உணர்வுடன் வளரவும் இது உதவும். இதைப்போல மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் “ஓர் குடும்பம்…!” என்று நாம் செயல்படுத்த வேண்டும்.

மனித உடலுக்குள் நல்ல குணங்களும் உண்டு கெட்ட குணங்களும் உண்டு. இருந்தாலும் உயர்ந்த உணர்வு கொண்டு தியானிக்கும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்த்திட இது உதவும்.

ஆகவே அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த ஒருக்கிணைந்த நிலைகளில் இணைந்திடும் போது
1.நமது அரசே உலகிற்கு எடுத்து காட்டும் அரசாகவும்
2.அதன் கீழ் வாழும் மக்கள் நாம் உயர்ந்தவர்களாகவும் இருக்க முடியும்.

ஏனென்றால் விஞ்ஞான முறையால் மத பேதத்தாலும் இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் இன்று உலகம் அழிந்திடும்… மனிதனுடைய எண்ணங்கள் அழிந்திடும் இத்தருணத்தில்
1.மாமகரிஷி ஈஸ்வர பட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி
2.நாம் எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் இந்த முறைப்படி நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலையும்
3.ஆட்சி புரிந்து கொண்டு இருக்கும் நமது அரசும் வளமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுங்கள்.
4.இப்படி ஒருக்கிணைந்தால் கட்சி பேதமும் வராது... இன பேதங்களும் வராது… மத பேதங்களும் வராது…!

ஏனென்றால் நாம் அனைவரும் ஆட்சி சீரானதாக அமைக்க வேண்டும் என்று எண்ணி அந்த ஆட்சி சீராக அமைந்தால் “யாருக்கும் தொல்லை இல்லை…!”

அப்படி எண்ணாது என்னுடைய வழியில்… “நான் உயர்ந்து இருக்க வேண்டும்…!” என்று எண்ணி விட்டால் அடுத்து தொல்லைகளே வருகிறது. ஆகவே இந்த எண்ணங்கள் நமக்குள் வளராதபடி ஞானிகள் காட்டிய அருள் உணர்வு கொண்டு அரசை ஒத்தே நாம் வாழ வேண்டும்.

நமது சக்தி எல்லாம் ஒருக்கிணைந்து ஒன்றாகச் சேர்ந்து நம்முடைய ஓட்டைப் பெற்றுத்தான் ஆட்சிக்குச் செல்கிறார்கள். ஓட்டு அதிகமாக வாங்கி வென்று அங்கே சென்றாலும் அவர்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நாம் அனைவரும் சொன்னால் “நம்மைக் காக்கும் உணர்வுகள் அவர்களுக்குள் வளர்கின்றது…!” பின் நாம் இந்த எண்ணங்கள் பகைமை இல்லாத நிலைகள் வளர்கின்றது.

இது போன்ற நிலைகளை நாம் பெறுவதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அடுத்தடுத்து…
1.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோரும் பெற வேண்டும்.
2.நமது நாட்டு மக்கள் அனைவரும் மத பேதம் இன்றி இன பேதம் இன்றி ஒருக்கிணைந்து மகரிஷிகளின் அருள் சக்தியால் வாழ வேண்டும்.
3.ஆட்சி புரியும் அந்த ஆட்சி நிர்வாகிகள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
4.தலையாயக் கடமையாக இது ஒவ்வொரு நாளும் நாம் எண்ண வேண்டும்.

மனித உடலுக்குள் எப்படி நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பது  போன்றே நம் நாட்டுக்குள்ளும் இருக்கும் அனைவரும் (நல்லவராக இருந்தாலும் சரி கெட்டவராக இருந்தாலும் சரி) ஒருக்கிணைந்தால் தான் இந்த நாடும் நலம் பெறும். மக்களும் ஒருக்கிணைந்து வாழ்வோம்.

ஆகவே தீமையை விளைவிக்கும் சக்திகளிலிருந்தும் மக்களைக் கலக்கமுறச் செய்யும் தவறான செயல் கொண்ட இந்த உணர்வுகளிலிருந்தும் அனைவரையும் காத்திடும் சக்தியாக
1.நாட்டில் பிறந்த அனைத்து மக்களும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்களை அறியாது தவறு செய்யும் நிலையில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
3.மக்கள் பேரானந்த பெருநிலைகள் பெற வேண்டும்
4.மனிதனாகப் பிறந்த முழுமையின் உணர்வுகள் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்துங்கள்.

கட்சி பேதம் இல்லாத மத பேதம் இல்லாத இன பேதமில்லாத மொழி பேதமில்லாத அரசியல் பேதமில்லாத உலகைச் சிருஷ்டிக்க “நாம் எண்ணும் எண்ணமே தான்…” அத்தகைய உலகைச் சிருஷ்டிக்கின்றது.

மத பேதத்தால் போர்கள் நடக்கின்றது. கட்சி பேதத்தால் உண்மையினுடைய நிலைகள் அறியாது சீராக செயல்படும் தன்மைகள் காலத்தால் உலக நிலைகளில் இருந்து இன்று மறைந்து கொண்டு வருகிறது.

இதைப் போன்ற நிலைகளை நாம் வாழும் நாட்டிலே விளையாது
1.கட்சி என்ற பேரை அகற்றி விட்டு
2.இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆட்சியின் நிலைகள் சீராக வர வேண்டும் என்று ஒருக்கிணைந்தால் “எல்லோரும் நல்லவரே…!”
4.எல்லோரும் நல்ல ஆட்சியை நிச்சயம் பெற முடியும்…!

ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தின் மேல் நாம் குறைகளை எண்ணி வளர்த்துக் கொண்டேயிருந்தால்
1.அவர்கள் எதைச் செய்தாலும் நாம் குறைகளைக் கூறி கொண்டே தான் இருப்போமே தவிர
2.குறையை நிவர்த்திக்கும் எண்ணமே நமக்குள் வராது.
3.நாம் குறையைச் சொல்லி விட்டு நாமும் குறையைச் செய்து கொண்டு இருப்போம்.

ஆகையால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற சொன்ன நிலைகளில் நமது நாட்டில் ஆட்சி புரியும் அந்த நிலைகளுக்கு
1.மகரிஷியின் அருள் சக்தி படர்ந்து
2.நாடு சீராக வளர்ச்சி பெற வேண்டும் என்று நாம் அனைவரும் ஒருக்கிணைவோம்.
3.யார் ஆட்சிக்கு வந்தாலும் அது நல்ல ஆட்சியாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்… தியானிப்போம்… தவமிருப்போம்…!