கேள்வி:-
ஞானகுருவின் உபதேசத்தில் அடிக்கடி உபயோகிக்கும் Electric, Electronic
என்பதன் முழுமையான விளக்கம் தர வேண்டுகிறோம்.
பதில்:-
விண்ணிலிருந்து பூமிக்குள் வந்த உயிரணு எப்படி இயங்குகிறது..? உயிரணுவிற்குள்
1.நட்சத்திரங்களின் எதிர்மறையான இயக்கங்களாலும்
2.அதை இணைக்கும் பாலமாக இருக்கும் வியாழன் கோளின் சக்தியும்
3.சூரியனின் வெப்ப காந்தமும் சேர்ந்து
4.ஒரே சீரான துடிப்பாக (வெடுக்... வெடுக்...) இயங்கிக் கொண்டே உள்ளது.
5.அந்தத் துடிப்பால் உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகின்றது.
6.உயிரணுவிற்குள் தோன்றும் வெப்பமே உயிர் ஆகும். அதுவே கடவுளாகின்றது
ஈசனாகின்றது.
தொடர்ந்து உயிரணுவிற்குள் வெப்பம் உருவாகிக் கொண்டே இருப்பதால் அந்த
வெப்பத்தால் ஈர்க்கும் காந்தமாகின்றது.
அதாவது அனல் மின் நிலையங்களில் வெப்பத்தை வைத்து மின்சாரத்தை உற்பத்தி
செய்வது போல் உயிரின் வெப்பத்தால் காந்தம் உருவாகிக் கொண்டே உள்ளது (EMF –
ELECTROMOTIVE FORCE).
உயிரின் துடிப்பினால் “தொடர்ந்து ஏற்படும் அந்த காந்தப் புலனின்
ஆற்றலைத் தான்” ஞானகுரு அவர்கள் ELECTRIC என்று உணர்த்துகின்றார்கள்.
வெப்பத்தினால் உருவான காந்தப் புலனின் ஆற்றலால் உயிர் என்ன செய்கின்றது...?
தன் அருகிலே இருக்கும் மற்ற (காற்று மண்டலத்தில் உள்ள) உணர்வலைகளைக் கவர நேர்கின்றது.
ஒரு அடுப்பிலே பாத்திரத்தை வைத்து அதிலே மற்ற பொருளைப் போட்டுக்
கொதிக்க வைத்தால் கொதித்து ஆவியாகின்றது.
ஆவியாக மாறியது போக மீதம் உள்ளது பாத்திரத்திலே உறைவது போல் உயிரணுவைச்
சுற்றி அது கவர்ந்த உணர்வலைகளின் மணம் உறைகின்றது.
1.அதற்குப் பெயர் தான் சிவம். சிவம் என்றால் உடல்.
2.அதாவது கண்ணுக்குத் தெரியாத சக்திகளை உயிர் நுகர்ந்து கண்ணுக்குத்
தெரியும் உடலாக மாற்றுகின்றது.
கொதித்து ஆவியாகும் பொழுது அதிலே சப்தங்கள் வருவது போல தான் உடல்
பெற்ற பின் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் நாதங்கள் (ஒலிகள்) தோன்றுகிறது.
அந்தச் சப்தமே உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளாகவும் எண்ணங்களாகவும் தோன்றுகிறது.
இவ்வாறு உயிர்... தான் நுகரும் உணர்வுகளை எல்லாம் உணர்ச்சிகளாக மாற்றி
இயக்குவதைத்தான் அந்த உணர்ச்சிகளை ELECTRONIC என்று ஞானகுரு சொல்கிறார்.
நம் உயிரான ஈசனின் (ELECTRIC) துணை கொண்டு ஞானிகள் மகரிஷிகளை நுகர்ந்தால்
அதை உயிர் (ELECTRONIC) ஞானத்தின் உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் ஒளியான அணுக்களாக
உருவாக்கும். நம் உயிர் நம்மையும் மெய் ஞானியாக
மாற்றும்...!