ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 13, 2019

இடும்பச் சித்தரைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.கரங்களைச் சேர்த்து
2.சரீர கதியில் உயிர் சக்தி தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை
3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்
4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன?

எந்தத் தொடருக்கு இது ஊக்கம் தருகிறது? இடும்பன் கூறிய குணத்தை எழுதுவாய். இடும்பன் என்றால் யார்?

1.நற்குணங்களின் எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே
2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்
3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.

இடும்பன் என்றாலே ஏன் வெறுக்கின்றாய்? இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள்
1.போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட
2.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா!

இன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித்தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டு இன்றைய வழித் தொடரில்
1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.
2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.

இடும்பனால் தீவினை குணங்களைப் பற்றிக் காட்டப்பட்ட அதைப் போகர் அறிந்திட்ட வழியிலெல்லாம் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் - சபல குணம்) நீக்கிட்ட முருகா என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.

போகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.