ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 12, 2019

இருபத்தியேழு நட்சத்திரங்களின் மாறுபட்ட இயக்கங்களால் மனிதனுக்குள் வரும் எதிர் நிலைகள்


உதாரணமாக யாரும் தவறு செய்யவில்லை என்றாலும் சந்தர்ப்பத்தால் ஒவ்வொரு மனிதனும் எதிர்நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கின்றது. ஏன்...? 

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நிலைகள் பெற்றது. இரண்டு நட்சத்திரத்தின் சக்திகள் எதிர் நிலையாகி அதனால் துடிக்கும் இயக்கமாக ஒரு உயிராக உண்டாகின்றது.

அந்தத் துடிப்பின் இயக்கத்திற்குள் அது கவர்ந்து கொண்ட உணர்வினை உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றும் நிலைகள் பெற்றது தான் ஒவ்வொரு உயிரும். 

கார்த்திகை நட்சத்திரம் அறிந்திடும் அறிவாற்றல் மிக்க நிலைகளில் ஒளி கண்டு உணர்ந்திடும் உணர்வின் அறிவாகப் பெற்றது.
1.ஆக 27 நட்சத்திரங்களிலும் 27 விதமான வைரக் கற்கள் உண்டு.
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான வலுவின் தன்மை பெற்றது.
3.ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலைகள் கொண்டது

27 நட்சத்திரத்தின் உணர்வின் இயக்கங்கள் இவவாறாக இருக்கும் இந்த நிலையில் ஒவ்வொரு உயிரின் இயக்கமும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஆற்றல் கொண்டது.

இருப்பினும் ஒரு கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டவர்கள் அவர்கள் உடலிலே எடுத்துக் கொண்ட எண்ணத்தின் நிலைகள் கொண்டு அவருக்கு ஒத்ததாக விளைந்த எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அவர்கள் நல்லவராகத் தோன்றினாலும் அதே சமயத்தில் எதிர் மறையான நட்சத்திரத்தின் சக்தி கொண்ட நாம் அவருடன் நட்புடன் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

27 நட்சத்திரத்திங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதிர் நிலை மறைகள் உருவாகி அதனின் இயக்கத்தால் தான் தாவர இனங்களே விளைகின்றது.

அந்தத் தாவர இனத்தில் விளைந்ததை உணவாக உட்கொள்ளும் போது ஒரு சிலது கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒத்து வரும். அவருக்கு அதனால் அங்கே மகிழ்ச்சியின் தன்மை வரும். வலுக் கொண்ட நிலைகளும் அவருக்குள் வரும். (ஆனால் மற்ற நட்சத்திரத்தின் சக்தி கொண்டவருக்கு எதிர் நிலைகளாக வரும்)

அப்பொழுது அவர் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் சொல்லால் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாமலேயே தீமை விளைவிக்கும் நிலையாக இங்கே வரும்.

இருப்பினும்
1.நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாது அதனின் உணர்வு எதிர்மறையாகி
2.ஒன்றுடன் ஒன்று எதிர்நிலை ஆகும்போது தான்
3.விண் உலகிலே ஆற்றல் மிக்க இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதே போல ஒன்றுடன் ஒன்று ஒன்றும் நிலைகள் வரப்படும் போது எதிர் மறையான உணர்வுகள் வரும்போது தான் அதனுடைய இயக்கமும் வருகின்றது.

ஒரு “எலக்ட்ரானிக்” என்ற நிலை வரப்படும் போது அதை இயக்க வேண்டும் என்றால் அதற்கு எதிர்மறையான நிலைகள் இருந்தால் தான் அது இயக்கமாகும்.

அந்த எலெக்ட்ரானிக் போல் தான் நம்முடைய உணர்வுகளும் எண்ணங்களும்...!

ஒரு உணர்வின் சக்தி நம் உடலுக்குள் அது ஒத்துக் கொண்ட உணர்வாக இருந்தாலும் எதிர் மறையான நிலைகள் இருக்கும் போதுதான் நமக்குள் உந்தி இயக்கும் நிலைகளாக நாம் செயல்படுகின்றோம்.

மின்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் POSITIVE NEGATIVE என்ற எதிர் மறையான நிலைகள் வரும்போதுதான் மின் அணுவின் நிலைகளும் இயங்கி மின் அணுவின் அழுத்தத்தைக் கொண்டு மோட்டார்களையும் மற்ற எல்லா மின் சாதனங்களையும் அது இயக்கச் செய்கின்றது.

இதைப் போல்தான் மனிதனின் உணர்வுக்குள்ளும் நாம் நண்பராகப் பழகினாலும் அந்த நட்சத்திரத்தின் இயக்கத்தால் எதிர்மறையான இயக்கங்கள் உண்டு,

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் கலந்து உறவாடப்படும் பொழுது இரண்டு குழந்தைகள் ஒத்து வரலாம், ஒரு குழந்தை ஒத்து வராத நிலைகள் வரும். இப்படி எதிர்மறையான நிலைகள் வரும்போது எதிர்ப்பின் நிலைகளே வருகின்றது.

நாம் பலருடன் பழகினாலும் எண்ணத்தால் கவர்ந்து நட்பு கொண்டு மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுணர்ந்தாலும் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் எதிர்மறையை உண்டாக்கி நோயாக உருவாக்கும்.

சந்தேகம் இருந்தால் பார்க்கலாம்...!
1.நண்பர்கள் பலருடன் சந்தித்துப் பேசும் போது
2.இன்னொரு நண்பருடன் நாம் பேசினாலே தன்னை அறியாமலேயே ஒரு கலக்கம் ஏற்படும்
3.வியாபார ரீதியாக நீங்கள் சென்றாலும் அத்தகையவர்கள் உறவாடிவிட்டுச் சென்றாலே நமக்குள் இனம் புரியாத கலக்கங்கள் ஏற்படுவதைக் காணலாம்.
4.இவை எல்லாம் நம்மை அறியாது இயக்கக்கூடிய நட்சத்திரங்களில் எதிர்மறையான இயக்கங்களே.

நமது உயிர் கார்த்திகை நட்சத்திரமாக இருப்பினும் மற்றவருடைய நட்சத்திரம் எதிர்மறையாக இருந்தால் அதனால் எதிர் நிலையான உணர்வுகளாக இயக்குகின்றது.

இதை எப்படி மாற்றிச் சமப்படுத்துவது...? அதற்கு வழி வேண்டுமல்லவா...!

அன்று வாழ்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோளின் சக்தியையும் தனக்குள் அடக்கி அதை எல்லாம் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத நிலைகள் கொண்டு ஏகாந்தமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் அந்த உணர்வின் சத்தைக் கவரும் திறனாகத்தான் வசிஷ்டாத்வதைம்...! என்ற நிலைகளில் தியானத்தை அமைத்துக் கொடுக்கின்றோம். (வசிஷ்டர் - அருந்ததி)
1.எதனையுமே தனக்குள் கவரச் செய்து அருந்ததியாக
2.இணைந்தே வாழும் நிலைகளும்
3.இணைத்து அறிந்திடும் நிலைகளும்,
4.இணைந்தே தெரிந்திடும் நிலைகளும்,
5.இந்த வலுவினில் இணைந்திடும் நிலைகள் நாம் என்று கொள்கின்றோமோ
6.இதனை இணைத்திடும் நிலைகள் ஆக்கிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அது பருக வேண்டும்.
7.அதைப் பருகினால் எதிர்நிலைகளைச் சீராக்கிச் சமப்படுத்தி நன்மை பயக்கும் சக்தியாக உருவாக்க முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பருகும் நிலையைக் உருவாக்குவதற்குத் தான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த உபதேசத்தின் நோக்கம்.