மதங்கள்
குலங்கள் என்ற நிலையில் இருந்தாலும் அதற்குள் அனுஷ்டானம் ஆச்சாரம் என்ற நிலைகளில் தான்
நாம் இன்று வாழ்ந்து வளர்கின்றோம்.
இன்று உதாரணமாக
எடுத்துக் கொண்டால் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தாலும் கணவர் உடலை விட்டுப் பிரிந்து
சென்று விட்டால்
1.உன் கணவனே
போய்விட்டார்
2.உனக்கு
எதற்கு மாங்கல்யம்...? என்று அதைக் கழட்டிவிடும்படிச் சொல்கின்றனர்.
ஆனால் கணவனுடன்
வாழ்ந்த காலத்தில் அவருடைய உணர்வுகள் அனைத்தும் மனைவியின் உடலிலே உண்டு.
1.மாங்கல்யத்தைக்
கழட்டினால் பார்க்கும் பொழுதெல்லாம் “கணவரை இழந்தவர்...! என்று தான்
2.அடுத்தவர்கள்
எண்ணுகிறார்களே தவிர அங்கே பரிதாபப்படும் நிலை இல்லை...!
ஆகவே கணவர்
இறந்த பின் அவர் இட்ட அந்த மாங்கல்யத்தைக் கழட்டவே கூடாது.
1.அவர் என்னுடன்
வாழ்கின்றார்... என்னுடனே இருக்கின்றார்...
2.அவர் உணர்வுகள்
என்னுடனே வலு பெற்று உள்ளது...! என்று தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்
கணவன் உடலை
விட்டுச் சென்றால் உடனே மனைவி என்ன செய்ய வேண்டும்..?
அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... அது எங்கள் உடல் முழுவதும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த வலுவைக் கூட்டிக்
கொள்ள வேண்டும்.
கணவனின்
உணர்வு மனைவிக்குள் இருப்பதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்ற
வலுவின் துணை கொண்டு கணவனின் அந்தச் சூட்சம சரீரத்தைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து
அங்கே அனுப்பிடல் வேண்டும். ஆகவே அங்கே அனுப்பி விட்டால்
1.கணவன்
உடலில் பெற்ற நோயின் தன்மைகள் அனைத்தையும் அங்கே கரைத்து விடுகின்றது.
2.சப்தரிஷி
மண்டலங்களுடன் இணைந்த கணவரின் உயிரான்மா
3.ஒளி உடலாக
அங்கே வாழத் தொடங்கும்.
மனைவி இங்கே
இருக்கப்படும் போது எப்போதுமே கணவரின் ஆன்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து உடல்
பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாச் ஒளி சரீரம்
பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொரு நாளும் செலுத்திக்
கொண்டே இருக்க வேண்டும்.
கணவர் சப்தரிஷி
மண்டலத்துடன் இணைந்து பேரொளி என்ற நிலை அடைந்த நிலையில்
1.எங்கள்
குடும்பத்தில் அறியாது சேர்ந்த இருளை நீக்கி
2.மெய் வழியில்
அழைத்துச் செல்லும் அருள் உணர்வுகள் எங்களுக்குள் படர்ந்து
3.சாபவினைகளோ
தீயவினைகளோ வராது எங்களைக் காத்து அருள வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.
4.இவ்வாறு
எண்ணினோம் என்றால் அந்த அருள் என்றுமே நமக்கு உறுதுணையாக இருக்கும்.
ஆனால் இங்கே
சாதாரண வாழ்க்கையின் நிலையில் இருப்பது என்ன...? என்றால் கணவர் பட்ட துயரத்தை எல்லாம்
மனைவி தனக்குள் எடுத்து வைத்துள்ளது.
அதே சமயத்தில்
குடும்பத்தில் உள்ள குழந்தைகளும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நிலைகளிளும் இது பதிவாகி
உள்ளது. நுகர்ந்தது இவர்கள் உடலிலே அணுவாகவும் உள்ளது.
இறந்த கணவர்
அவர் வாழ்ந்த காலத்தில் உடலிலே விளைந்த உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
அப்பொழுது
மனைவியோ குடும்பத்திலுள்ளவர்களோ அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ அவருடைய நினைவுகளை
மீண்டும் மீண்டும் எண்ணி எடுத்துக் கொண்டால்
1.அவர் உடலிலே
விளைந்த நோய்க்கு காரணம் எதுவோ
2.அதெல்லாம்
நமக்குள் அதே நோயை உருவாக்கும் தன்மையாக இங்கே உருவாகி
3.நம்மை
அறியாது சஞ்சலப்படும் நிலையை உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும் நிலையே வரும்.
4.அவ்வாறு
வேதனைப்பட்டால் பிறிதொரு ஆன்மா நம் உடலுக்குள் வந்து சேரும். அது உடலில் வந்த தீமைகளே
இங்கே வளரும்.
அத்தகையை
தீமைகள் வராதபடி நாம் செயல்படுத்த வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்தவுடன் உடலை விட்டுப்
பிரிந்த அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவரைச் சப்தரிஷியாக ஆக்க
வேண்டும்.
அவர் அந்தப்
பேரருள் பேரொளி பெற்றுச் சப்தரிஷியாக ஆனது போல் நாங்களும் இருளை நீக்கிப் பேரொளியாக
மாறும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
எங்கள் குடும்பத்தில்
உள்ளோர் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும். எங்கள் வீடு முழுவதும் அந்தச் சக்தி படர
வேண்டும். இருளை நீக்கும் அந்த அருள் சக்தி எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குதல்
வேண்டும்.
இப்படி முறைபடுத்திக்
கொண்டால் நமக்குள் தீமைகள் வராது தடுக்கவும் முடிகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளை நமக்குள் வளர்க்கவும் முடிகின்றது.
நாம் சேர்த்துக்
கொண்ட இந்த வலுவுக்கொப்ப நம் உயிர் நம்மை அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு
நேரடியாக அழைத்துச் செல்லும்...!