ஒரு விஷச்
செடியின் அருகிலே இருக்கும் ரோஜாப்பூ தன் மணத்தின் வலிமை கொண்டு அந்த விஷச் செடியின்
மணத்தைத் தனக்குள் அணுகாது தடுத்து நிறுத்தி விடுகிறது.
இதைப்போல
தான் அருள் ஞானிகள் தீமையைத் தனக்குள் அணுக விடாது நறுமணத்தின் மகிழ்ச்சியின் நிலைகள்
உணர்வாக ஒளிகளாக ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் விண்ணுலகில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள்.
அந்தச் சப்தரிஷி
மண்டலத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் நமக்கு முன் படர்ந்து கொண்டிருப்பதை
நீங்கள் அடிக்கடி கவர்ந்து உங்கள் உடலுக்குள் சக்தி வாய்ந்த மணங்களாக மாற்றிக் கொள்ள
வேண்டும்.
அப்பொழுது
அந்த மணத்தின் உணர்வின் செயலாக நல்ல எண்ணங்கள் நம்மை இயக்கி நம் சொல்லின் தன்மை கேட்போருக்கும்
மகிழ்ச்சியை உண்டாக்கும். நாம் எடுத்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள்ளும் மகிழ்ச்சியை
ஏற்படச் செய்யும்.
இத்தகைய
நிலைகளை நாம் உருவாக்க உருவாக்க தீமைகளைக் கண்ணுற்றுப் பார்த்தாலும் ரிமோட் கண்ட்ரோல்
(REMOTE CONTROL) போல
1.அந்தத்
தீமைகள் நம்மை அணுகாது
2.அது அறிந்திடும்
ஆற்றலாகத் தான் பயன்படும்
3.ஆக தீமைகள்
நமக்குள் சேராது தடுக்கும் ஆற்றலைப் பெருகச் செய்யும்... உங்களை நம்புங்கள்...!
அந்த நல்ல
சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.
இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் ஆழமாகப் பதிந்து அருள் ஞானியின் ஆற்றல் மிக்க சக்தியைப்
பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.
அதனின் வலுவின்
துணை கொண்டு உங்களுக்கு முன் படர்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் உணர்வின் ஆற்றலை
நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அதைப் பருக முடியும். ஆற்றல் மிக்க சக்தியாக வளர்த்துத்
தீமைகள் அகற்றும் நிலையைப் பெற முடியும்.
ஒரு வித்தினை
ஊன்றி விட்டால் அது தனது உணர்வின் வலுக் கொண்டு அந்தச் செடியின் சக்தி வளர்கின்றது.
அதைப் போல ஒருவர் உங்களை ஏசிவிட்டால் அவர்களைத் திரும்பத் திரும்ப எண்ணும் போது கொதிப்பும்
கோபமும் உங்களுக்குள் எழுகின்றது,
பின் உங்கள்
நல்ல காரியங்களைச் செயல்படுத்த முடியாது அந்தக் கொதிப்பின் தன்மை கொண்டு உங்களுக்குள்
நோயாகவும் விளைகின்றது. ஆகையினால் அந்த நோயை நீக்க அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள்
வித்தாகப் பதிவு செய்கின்றோம்.
உங்களுக்கு
எத்தகைய துன்பங்கள் ஏற்பட்டாலும்... நோய்கள் வந்தாலும்... உங்கள் எண்ணத்தால் “ஈஸ்வரா...!”
என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்த மகரிஷிகளின்
அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள்
உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்களை
அறியாது சேர்ந்த தீமைகள் நீங்க வேண்டும்
4.எங்கள்
குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்
5.மகரிஷிகளின்
அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
6.மகரிஷிகளின்
அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெற்று மன பலம் மன வளம் பெற வேண்டும்.
7.எங்கள்
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் வசிஷ்டரும் அருந்ததி போல ஒற்றுமையாக வாழ்ந்திடும் நிலைகள்
வேண்டும்.
8.எங்கள்
தொழில் வளம் பெருக வேண்டும்.
9.எங்கள்
வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்.
19.எங்கள்
விவசாய நிலங்களில் பயிர்கள் நல்ல நிலைகள் விளைந்திட வேண்டும்.
11.எங்கள்
விவசாய நிலங்களில் வேலை செய்வோர் அனைவரும் மன பலத்துடன் இருக்க வேண்டும்.
12.அவர்கள்
பயிரிடும் பயிர்கள் வலுவான நிலைகள் கொண்டு வளர வேண்டும்.
13.அதிலே
விளைந்ததை உணவாக உட்கொள்பவர்ளும் அதைப் பயன்படுத்தும் அனைவரும் மன பலத்துடன் உடல் நலத்துடன்
வாழ வேண்டும் என்ற
14.இந்த
உணர்வுகளை எல்லாம் எப்பொழுது நீங்கள் எடுக்கின்றீர்களோ
15.ஒவ்வொரு
நொடியிலேயும் அந்த அருள் ஆற்றல் மிக்க மகரிஷியின் அருள் சக்தியை உங்களுக்குள் பற்றுடன்
பற்றி வாழ்கின்றீர்கள்.
இந்தப் புவியில்
ஏற்படும் தீமைகளை எல்லாம் பற்றற்றதாக மாற்றி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட
இது உதவுகிறது.
ஆகவே தீமையையே
எண்ணாது எந்தத் தீமையும் நமக்குள் வராது
1.மீண்டும்
மீண்டும் உயர்ந்த நிலைகளை நாம் எண்ணி
2.இந்த உணர்வலையைப்
பரப்பப்படும் போது தான்
3.நமக்குள்
உயர்ந்த சக்தியைப் பெற முடியும்.