நமக்கு எதிரியாக இருப்பவர்களை எண்ணி “எனக்குத் துரோகம்
செய்தான் பாவி…!” என்ற எண்ணத்துடன் ரோட்டிலே நாம் நடந்து சென்றால் நிலை தடுமாறி மேடு
பள்ளம் தெரியாத படி கீழே விழுந்து விபத்தாகும்.
ஒரு பஸ் வந்தால் கூட நமக்குத் தெரியாதபடி அங்கு
புரை ஒடுவது போல் சிந்தனை இழந்து இனம் தெரியாதபடி விபத்தாகும். இவைகள் எல்லாம் இயற்கையில்
நடக்கும் சில சாதாரண நிலைகள்.
இதைத் தடுப்பதற்கு எந்தச் சக்தியை வைத்திருக்கின்றோம்…?
கணவன் மனைவியாக வாழ்பவர்கள்.. கணவன் தன் மனைவிக்கு
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும்... மனைவியின் அருள் எனக்கு உறுதுணையாக
இருந்து என்றுமே அந்த நல்லாசி கொடுக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு வெளியிலே செல்ல வேண்டும்.
(தொழிலுக்கோ ஒரு வேலைக்கோ அல்லது எதுவாக இருந்தாலும்)
அதே சமயத்தில் மனைவியும் வெளியிலே செல்லும் போதெல்லாம்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவர் பெறவேண்டும், அவர் அருள் என்றுமே
எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.வெளியிலே செல்லும் பொழுதெல்லாம்
2.இப்படி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் எண்ணிய
பின் தான் செல்ல வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவர் உடல் முழுவதும்
படரவேண்டும். அவர் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக
அமைய வேண்டும்.
2.அந்த அருள் மணம் என் கணவர் பெறவேண்டும். அவர்
தொழிலில் நல்ல செழிப்பு ஏற்பட வேண்டும்.
3.அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வரவேண்டும்
என்று மனைவி எப்போதுமே வாழ்த்துதல் வேண்டும்.
4.அந்த எண்ணத்துடன் “வழி அனுப்புதல் வேண்டும்...!”
இதை எதற்காகச் சொல்கிறோம்...? என்று தெளிவாகத் தெரிந்து
கொள்ளுங்கள்,
ஒருவர் நமக்குத் தீங்கு செய்கிறார். அவர் அமெரிக்காவிலே
இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்,
1.எனக்கு இப்படித் தீங்கு செய்தான்… அவன் உருப்படுவானா...?
என்று எண்ணும் போது
2.அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது எண்ணினால்
புரை ஓடுகின்றது.
3.வாகனம் ஓட்டும் போது இதைப் போல எண்ணினால் விபத்தாகின்றது.
4.தொழிலிலிருக்கும் பொழுது இதை மாதிரி எண்ணும் போது
சிந்தனை குறைகின்றது. ஓடும் எந்திரங்களில் சிக்குகின்றனர்.
5.ஒரு கணக்கையோ பொருளையோ நல்ல முறையில் பார்க்க
வேண்டும் என்று எண்ணினாலும் சிந்தனை குறைந்து அது முடியாத நிலை ஏற்படுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால்
வெளியிலே செல்லும் போதெல்லாம் கணவனும்/ மனைவியும் மேலே சொன்ன முறைப்படி செய்து மாற்றிப்
பழகுதல் வேண்டும்.
என் அன்னை தந்தை அருளும் என் மனைவினுடைய அருளும்
என்றும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும்
பெறவேண்டும் என்ற இந்த எண்ணத்துடன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.
கணவனும் மனைவியும் இதைப் போல எண்ணி வாழ்ந்து வந்தால்
“வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ்கிறோம்...!” என்று அர்த்தம். அதாவது இணைந்து வாழ்கிறோம்
என்று பொருள்.
ஒரு தாய் எப்போதுமே என் மகன் அவன் வாழ்க்கை உயர்ந்த
நிலை பெறவேண்டும் என்று ஆசி கொடுத்துக் கொண்டு இருக்கும். அதே சமயத்தில் மனைவினுடைய
எண்ணங்களும் அந்த அன்பான எண்ணங்கள் கொண்டு மகிழ்ச்சியான உணர்வு கூடவே (கணவனுடன்) இருக்கும்.
ஆகவே நாம் ரோட்டிலே போகும் பொழுது எதிர்பாராமல்
ஒரு பஸ் எப்படியோ தறி கெட்டு வருகிறது என்றலும் கூட
1.மனைவியின் உணர்வுகள் அந்த சமயம் அந்தப் பக்கம்
போகாது நம்மைத் தடுக்கும்.
2.அந்தப் பஸ்சிலேயே ஏறப் போகிறோம் என்றாலும் அந்த
பஸ்சில் ஏறவிடாத படி மனைவியின் உணர்வுகளும் தாயின் உணர்வுகளும் அங்கே தடுக்கும்.
3.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே
1.தீமைகள் என்று வரப்படும் போது அந்த எண்ணமே எமன்
ஆகின்றது.
2.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்...!
3.ஞானிகள் காட்டிய அருள் வழியில் இணைந்து வாழ்வதே
சாவித்திரி.
4.அருள் உணர்வு கொண்டு மனைவியை எண்ணப்படும் போது
நமக்குள் அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.
கணவன் மேல் பிரியமாக இருக்கிறோம். அப்பொழுது வீட்டிற்குச்
சொந்தமோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி சொல்கின்றனர்.
கணவர் வீட்டில் இல்லாத போது... “பாவிகள் இந்த மாதிரிச்
செய்கிறார்களே...!” என்று வேதனையான உணர்வுகளைச் சேர்த்துக் கணவனை எண்ணினால் இந்த உணர்வுகள்
கணவன் எந்தக் காரியத்துக்குப் போனாலும் அங்கே தடைப்படுத்தும்.
வாகனம் ஓட்டும் போது மனைவி இப்படி எண்ணினால் கணவனுக்குச்
சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.மனிதனுக்கு மனிதன் சாதாரணமாக எண்ணும் போது அந்த
உணர்வு எப்படி இயக்குகிறதோ இதைப் போலத் தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வை
எடுத்துத் தன் கணவனை எண்ணினால் இதே உணர்வு அங்கே தடைபடுத்தும்.
மற்ற உணர்வுகள் வந்து இப்படித் தடைபடுத்தும்படியாகப்
பேசினாலும் நீங்கள் “ஈஸ்வரா...!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும்.
2.அவர்கள் அறியாமை இருள் நீங்க வேண்டும் என்று எண்ணி
3,அந்தக் குறை கூறுபவர்களை இப்படி மாற்றிவிட வேண்டும்.
கணவர் தொழிலுக்குச் சென்றாலும் சரி... பொருள்களை
உற்பத்தி செய்தாலும் சரி.. அதைப் பயன்படுத்துவோர் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க
வேண்டும் என்று மனைவி எப்போதுமே தன் கணவனை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதே மாதிரி கணவனும் தன் மனைவி எங்கே சென்றாலும்
அந்த அருள் உணர்வுகளை எடுத்து மனைவியை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
கணவன் மனைவி இப்படிச் செயல்படுத்திக் கொண்டு வந்தால்
அன்று அகஸ்தியனும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்களோ அதே போல நாமும் வாழ்க்கையில்
வரக்கூடிய இருளை நீக்கிப் பேரொளியாக்க முடியும்.
ஒரு பையன் நல்லவனாக இருந்தான். ஆனால் திடீரென்று
கடுமையான நோயாகி விட்டது. என்ன.. ஏது...? என்று விசாரிப்பதற்காக அவனைப் பார்த்தாலும்
அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அந்த நோயின் தன்மை நமக்குள் வந்து விடுகின்றது.
ஆகவே மனைவி எப்போதுமே அதிகாலையில் விழித்தவுடன்
என் கணவருக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அது அவர்
இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். அவர் ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்தச் சக்தி பெறவேண்டும்.
அந்த அருள் மணங்களைக் கவரக்கூடிய அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
மனைவிக்கும் அதே நிலை பெற வேண்டும் என்று கணவரும்
எண்ணி இரண்டு பேரும் இப்படி எண்ணி வந்தால் பிறருடைய தீமைகளைபோ மற்றவையோ நமக்குள் வளராது
தூய்மையாக்கி விடுகின்றது. ஏனென்றால்
1.இருவருடைய சக்தியும் ஒன்றாகச் செயல்படும் பொழுது
2.அது சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
3.பிறர் சாபமிட்டிருந்தாலோ அல்லது முந்தைய முன்னோரின்
சாப நிலைகளோ இருந்தாலும் அதையெல்லாம் அடக்கும்
சக்தியாக இது அமைகிறது.
இதைப் போல நீங்கள் தொடர்ந்து நடந்து வந்தால் ஜோதிடமோ
ஜாதகமோ பார்க்க வேண்டாம். யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை.
1.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்
2.அருள் வழியில் என்றுமே மகிழ்ந்து வாழச் செய்யும்.
(இதை நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்...!)