ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2026

தோல்வியிலிருந்து மீளச் செயும் அருள் ஞானம்

தோல்வியிலிருந்து மீளச் செயும் அருள் ஞானம்


விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. செவ்வாய்க் கோளுக்கு இராக்கெட்டை அனுப்புகின்றனர். அங்கே இருக்கும் உண்மைகளை அறிய விரும்புகின்றனர்.
 
செவ்வாய் நாதகாரகன். இவர்கள் அனுப்பும் இராக்கெட்டின் ஒலியைக் காட்டிலும் செவ்வாயின் ஒலி அதிகமாக இருப்பதனால் செவ்வாய்க் கோளில் இறங்கிய இராக்கெட்டின் ஒலி அதிர்வுகள் மாறி இராக்கெட்டின் இயந்திர இயக்கங்களும் மாறுகின்றது. அப்படி ஆனாலும் விஞ்ஞானிகள் விடுவதில்லை. 
 
ஏன்? எதனால்? எப்படி…? என்ற நிலைகளில் சிந்திக்கின்றனர். குறையினை மாற்றியமைத்து மறுபடியும் செவ்வாயில் இராக்கெட்டை இறக்குவதற்கு விஞ்ஞானிகள் முயற்சி எடுக்கின்றனர்…. வெற்றி பெறுகின்றனர்.
 
இதைப் போன்று நமது வாழ்க்கையில்
1.தியான வழியில் சில சந்தர்ப்பங்களில் நமது செயல்பாட்டில் தோல்வி அடைந்தாலும்
2.எப்படியும் இதிலிருந்து மீள வேண்டும்எது நம்மை மாற்றியமைத்தது…? என்று சிந்தித்து
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கி இருளை அகற்றும் நிலைகளை நமக்குள் பெறுதல் வேண்டும்.
 
சாமியிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கினேன்தொழில் நன்றாக நடந்தது. சாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினேன்என் வேதனைகள் நீங்கியது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாமல் உயர்ந்த உணர்வின் தன்மையை அருள் உணர்வை உங்களுக்குள் பெருக்கினால் உங்கள் உடலில் உள்ள குறைகள் நீங்குகின்றது. 
 
தன்னிச்சையாக வியாபாரமும் பெருகிவரும். நீங்கள் தேடி அலைய வேண்டியதில்லை.
 
அருள் உணர்வைப் பெருக்கினாலே அதற்குண்டான அமைப்பும் தேடி வருகின்றது என்று அதிக ஆசைப்பட்டால் எதனையும் நிர்வகிக்கும் குறைந்துவிடும். பின் கிடைத்த செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மையினை நாம் இழந்து விடுவோம்.
1.இது போன்ற நிலைகள் இல்லாதபடி
2.நமது வாழ்க்கையில் குரு அருள்…” ஒன்றையே பிரதானமாக வைத்து நாம் வாழ்வோம்.
 
குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறுவோம். நம்மில் அறியாது சேர்ந்த, இருளை விலக்குவோம் என்று அருளுணர்வைத் தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று மலரைப் போன்ற மம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாகப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.