ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2017

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா.., என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா

இன்று விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். பக்தி என்ற நிலையிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம். அரசியல் என்ற நிலைகளிலும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.

இந்த அஞ்ஞான வாழ்க்கையில் ஒருவன் தவறு செய்யும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அந்தத் தவறை நமக்குள் உருவாக்காமல் தடுக்க வேண்டுமென்றால் “மெய்ஞானத்தின் உணர்வை” நமக்குள் சேர்க்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நம்மை அறியாமல் அது இயக்கும் நிலைகளைத் தடைப்படுத்த வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்து அந்த வீரியத்தின் தன்மையை நமக்குள் புகுத்தி அஞ்ஞானத்தை மாற்றிடும் நிலை பெற முடியும்.

மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வுகளை நமக்குள் வளர்த்து அந்த அருள் ஞானிகள் காட்டிய வழியில் மெய்ஞானத்தின் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே நாம் வாழ முடியும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

அத்தகையை ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி இந்த உடலை விட்டு எந்த நேரம் பிரிந்தாலும் என்றுமே அழியா உடலாக “அகண்ட அண்டத்தில்.., எங்கும் செல்லலாம்”.

 நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும், பிறவியில்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்திலிருந்து வரும் எத்தகையை நஞ்சினையும் அடக்கி அழியாத நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தை நாம் சென்றடைய வேண்டும்.

எதுவுமே தனித்து இயக்குவதில்லை. “ஒருவனே கடவுள்..,” என்ற நிலை இல்லை.

மூன்று உணர்வுகள் சேர்த்து ஒன்றைக் கவர்ந்து ஒன்றுக்குள் சென்றால் தான் “நான்காவது நிலையாக.., பிரம்மம்..,” என்று அடைய முடியும்.

மூன்று நிலைகள் கொண்டு ஒன்றைக் கவர்ந்து, ஒன்றைக் கவர்ந்த பின் ஒன்றுக்குள் நுழைந்து “உள் நின்று.., அந்த உணர்வை இயக்கச் செய்வது தான் கடவுள்”.

ஒன்றென்ற நிலைகள் இங்கில்லை. “வெப்பம், காந்தம்., விஷம்..,” என்ற மூன்றும் ஒரு பொருளை நுகரப்படும் பொழுது மணம் என்ற நிலையில் ஞானம்.

இதனுடன் சேர்ந்து உருப்பெறும் சக்தியாக உருவாகின்றது. அது தான் “பரப்பிரம்மம்”.

ஆக, அந்த உணர்வின் தன்மை எதை நுகர்ந்து கொண்டதோ ஒரு பொருளுடன் இணைந்து அந்த “உணர்ச்சியை” ஊட்டும் பொழுது பிரம்மவின் மனைவி “சரஸ்வதி”.

அந்த ஞானத்தின் துணை கொண்டு அதனுடன் இயங்கி இதனின் வலிமையை உருவாக்கும். இதைப் போல வலுக் கொண்ட உணர்வுகளை எடுத்துக் கொண்டால் “அது எடுத்துக் கொண்டாலும்.., பரப்பிரம்மம் தான்”.

அந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் இணைந்து தன் வலிமை கொண்டால் இதை அடக்கி அந்த உணர்வின் தன்மை கொண்டு “அதனின் வளர்ச்சியைக் கூட்டும்”.

இதைப் போன்று உலகின் இயக்கம் இவ்வாறு இருக்கும் என்று காட்டிய அருள் ஞானிகளின் உணர்வலைகளை நாம் நுகர்ந்து நமக்குள் அறியாது புகுந்த தீமைகளை நீக்கவேண்டும்.

அருள் ஞானத்தை நமக்குள் வளர்ப்போம். அதை உருவாக்குவோம்.

இவ்வாறு நாம் உருவாக்கும் தன்மை பெற்றால் நம் உடலிலுள்ள அணுக்கள் அனைத்தும் “ஒளியின் கதிராக உருவாக்கும்..,” உணர்வை உயிருடன் ஒன்றி மற்றதை ஒளியின் உணர்வாக உருவாக்கும் அருள் சக்தி பெற்றுவிடும்.

பின் நாம் எந்தப் பிறவியுமே இல்லாத நிலைகளை அடையலாம். ஆகவே, நம் குரு காட்டிய அருள் வழியில் அந்த அருள் ஞானிகள் சென்ற பாதையில் நாம் இதைப் பெறுவோம்.