ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2017

விநாயகர் தத்துவம் -2

வினைக்கு நாயகன் - விநாயகன்
பலகோடி சரீரங்களில் வலுவான நிலைகளை நுகர்ந்து யானையாக உருவாக்குகின்றது உயிர்.

யானை உடல் வலு பெற்றது.
யானையானபின் ஞானங்கள் அதற்குள் தோன்றி
எண்ண வலு பெற வேண்டும் என்ற உணர்வுகள்
யானையின் உடலுக்குள் தோன்றி
உடல் சிறுத்துப் பன்றியாக,
நல் உணர்வுகளைப் பன்றியின் உடலில் நுகர்ந்து
பின், மனிதனாக உருவாக்குகின்றது உயிர்.

முன் ஜென்மங்களில் நாம் மிருக நிலைகளில் இருந்தோம் என்பதைக் காட்ட யானையின் தலையை, மனித உடலில் பொருத்திக் காட்டினார்கள்.

உயிர், தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைத் தந்தது என்பதை நாமெல்லாம் புரிந்து கொள்ள, கோவில்களில் விநாயகரைச் சிலையாக வைத்துக் காட்டினார்கள்.

விநாயகரை ஆதிமுதல்வன், சிவனின் பிள்ளை, முழுமுதற் கடவுள் என்று சொல்லுவார்கள்.

மனிதனான பின் எதையும் உருவாக்கி இருளை நீக்கி ஒளி என்ற உருவை உருவாக்குபவன் மனிதன்.  அதுதான் முழுமுதற் கடவுள். 

நாம் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தபின், நாம் எதைச் சேர்க்க வேண்டும்? என்பதற்குத்தான் விநாயகரை வைத்திருக்கின்றார்கள்.
பிள்ளையார் - இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்துப் பார்
அனைத்தையும் வேக வைத்தவன் துருவ நட்சத்திரம். நாம் புல்லைத் தின்றோம். தழைத்தாம்புகளைத் தின்றோம். சுவை மிக்க நிலைகளில் கொழுக்கட்டையைப் படைத்துச் சாப்பிடும் இந்த மனித உடலைப் பெற்றோம்.

இந்தப் பிள்ளை யார்? நீ சிந்தித்துப் பார். உயிரால் வளர்க்கப்பட்டது இந்த மனித உடல்நீ சிந்தித்துப் பார்.., என்று சொல்கின்றார்கள்.
வினையெல்லாம் தீர்ப்பவன் - விக்னேஸ்வரன்
வேதனை என்ற உணர்வை நுகரும்பொழுது, உடல் நலிவடைகின்றது. நம் உடலை உருவாக்கிய உயிரான ஈசனுக்குத் துரோகம் செய்கின்றோம். மனிதனாக உருவாக்கிய ஈசனை மதிக்கவில்லை என்று அர்த்தம்.

ஈஸ்வரன் கோவிலில் அபிஷேகம் செய்வதால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

உயிரான ஈசனிடம், வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் கையில் அழுக்குப் பட்டால் நல்ல தண்ணீரை விட்டுச் சுத்தப்படுத்துகின்ற மாதிரி, ஈஸ்வரா, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இதை விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும்.

நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் நம் உடலில் எல்லா அணுக்களிலும் படும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

இது தான், நம் ஞானிகள் காட்டிய அருள் வழி.