நாம் பெறவேண்டியது எது?
பெறக் கூடியது எது? பெறப்படாதது எது என்ற நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
ஒருவன் தீமை
செய்கிறான் என்று பதிய வைத்துக் கொண்டால் “அவன் தீமை செய்தான்.., ஆகவே அவனை விடுவேனா பார்..,?”
என்று எண்ணினால் என்ன ஆகும்?
இந்தக் கணக்கின்
பிரகாரம் நாம் சிந்தனை இழந்த நிலையாகச் செயல்படுவோம்.
எந்த எண்ணத்தால்
“அவனை அழித்திட வேண்டும்..,"
என்ற எண்ணம் ஓங்கி வளர்கின்றதோ அதன் மேல் நாம் கொள்ளும் பாசம் அவனுக்குள் விளைந்த தீயவினைகள்
நமக்குள் விளையத் தொடங்குகின்றது.
அதே சமயத்தில்
ஒரு நோயாளியை நாம் உற்றுப் பார்த்துப் பதிவாக்கி விட்டால் பாசத்தால் “இப்படி
வேதனைப்படுகின்றாரே..,” என்று எண்ணினால் அவர் நோயின் உணர்வுகள் நமக்குள்
வருகிறது.
அப்படி நோயாளியை
உற்றுப் பார்த்த அந்தக் கணக்கின் பிரகாரம் அவரையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அந்த நோயின் தன்மை
நமக்குள் வளர்ந்துவிடுகிறது. அடுத்து நாமும் வேதனைப்படுவோம்.
ஆகவே, இந்த
மனித வாழ்க்கையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும்போது அவர்களைப் படமெடுத்து அவர்களில்
உருவான உணர்வுகள் அவருடைய நிலைகளை “எவ்வளவு
நேரம் எண்ணுகின்றோமோ.., எவ்வளவு நேரம் அறிகின்றோமோ..,?"
அந்தக் கணக்குகள் கூடிவிடும்.
ஆகவே, “இந்த மனித வாழ்க்கையில்
பெறப்படாதது.., பெறக் கூடாதது.., மனிதனின்
ஆசை”.
ஆலயங்களில் இது
தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரா”
என்று காட்டுகின்றார்கள்.
நந்தீஸ்வரன் என்றால், நாம் ஒவ்வோரு நொடியிலும்
சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.
நாம் சுவாசிக்கும் உணர்வின்
கணக்குகள் நம் உடலுக்குள் கூடும்பொழுது அதில் எது அதிகமோ அடுத்த நிலை அடைவாய் என்று
தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
ஆகவே நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டும்?
நம்மைப் போன்று இந்தப்
பூமியில் வாழ்ந்தவர்கள் தன் மனித வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை வென்று நஞ்சினை ஒளியாக
மாற்றினார்கள்.
உயிருடன் ஒன்றிய உணர்வின்
தன்மை ஒளியின் சரீரமாகப் பெற்று கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து அந்த உணர்வின் தன்மை
கொண்டு அவர்கள் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப்
பெறவேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று, அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப்
போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.
அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்?
காலை 4 மணிக்கு இதை எடுத்து, துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து,
எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று நம்
உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.
நமது குருநாதர் காட்டிய
அருள் வழியில் அவரின் துணை கொண்டு அதனை நாம் பெறுதல் வேண்டும். ஆகவே, நாம் பெறவேண்டியது
இதை.