இந்த உலகில் நஞ்சினை வென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை
உணர்த்துவதற்குத்தான் அதை நினைவாக்குவதற்காக விநாயகருக்கு அருகில் அரச மரத்தை வைத்தார்கள்.
நம் வாழ்க்கையில் எப்பொழுது தீமைகளைப் பார்க்கின்றோமோ உடனே
நாம் வானை நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் நினைவினைச் செலுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் உள் செலுத்தினால் அது அரசாக இருந்து அதன் கீழ
உள்ளதை அடக்கும் வல்லமையாக நம் தீமைகளை வென்றிடும் சக்தியாக நமக்குள் உருப்பெறும்.
அதைத்தான் “அங்குசபாசவா..,” என்று விநயகர் தத்துவத்தில்
தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
ஏனென்றால், குருநாதர் காட்டிய அருள் வழியில் ஆழமாகவும்
அழுத்தமாகவும் அந்த ஞானிகளின் அருள் வித்துக்களை உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப்
பதியச் செய்கின்றோம்.
இதை எவரொருவர் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொள்கின்றார்களோ
அவர் உடலில் இது பெருகும். அதன் நினைவு கொண்டு நீங்கள் தீமைகளை அகற்றும் வல்லமை பெறுகின்றீர்கள்.
யாம் சொல்வது “ஒன்றும் புரியவில்லை..,” என்று எண்ணினால்
இந்த உணர்வைக் கலக்கப்படும் பொழுது புரியாத நிலைதான் ஆகும்.
ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது “எலெக்ட்ரிக்கை வைத்து..,
எலலெக்ட்ரானிக்காக” மாற்றுகின்றார்கள்.
ஒரு தகட்டில் அல்லது நாடாவில் முலாமைப் பூசி உயர் அழுத்தத்தில்
இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகள் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
அதன் ஒலி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒலிப்பேழைகளில்
(MEMORY CONTROL) மாற்றியமைத்து உள்முகமாகக் கூட்டுகின்றது.
ஆகவே இதிலே இடைமறித்து ஏதாவது தவறுதலாக (TYPING –
COMMAND) ஒலி ஓசை மாறிவிட்டால் உடனே அதன் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.
ஏனென்றால், ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றால் அதைத்
தடைப்படுத்தவில்லை. இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது அது குறித்த நேரத்தில்
(ALARM CONTROL) தாக்கி நிறுத்திவிடும்.
இப்படித்தான் இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும்
இராக்கெட்டுகளை இயக்குவதும் இது எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று அங்கே பேழைகளில் வைத்து
அதன் செயலாக்கங்கள் மூலம் இயக்குகின்றார்கள்.
பின் அதனில் ஒலி அதிர்வின் கதிர்களை இயக்கப்படும் பொழுது
அந்த இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.
அதே சமயத்தில் இராக்கெட்டில் குறைகள் இருந்தாலும் இந்த
ஒலி அதிர்வுகளை ஏவி அது கட்டளையிடப்பட்டு அதைச் சீராக்குகின்றான் மனிதன். ஆக, விஞ்ஞான
அறிவு கொண்டு எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் முறையில் இதை இவ்வாறு இயக்கச் செய்கின்றார்கள்.
இதைப் போன்றுதான் நமக்குள் நுகர்ந்த தீமையின் விளைவுகளை
மாற்றியமைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் எண்ணத்தின் நிலையை அருள் மகரிஷிகள் உணர்வுடன் ஒன்றச்
செய்ய வேண்டும். அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
பதிவாக்கிய அந்த எண்ணத்தை இங்கே இயக்கினால் நம்முள் செயல்படும்
தீமைகளை எளிதில் மாற்றிட முடியும். மகரிஷிகளின் உணர்வின் அழுத்தம் தீமைகளை ரிமோட் செய்துவிடும்.
இன்று விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் இந்த விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஆனால், மெய்ஞானத்தை இழந்துவிட்டோம்.
மெய்ஞானத்தின் மூலக் கூறுகளை நாம் அறிந்து கொண்டால் மனிதன்
பிறவியில்லா நிலை அடையவும், அழியா ஒளிச் சரீரம் பெறவும் இது உதவும்.
ஆனால், அதற்கு மாறாக மனித ஆசையின் உணர்வுகளை ஒவ்வொரு நிலைகளிலும்
வளர்க்கப்படும் பொழுது இந்த உடலுக்கே அழிவாகிவிடுகின்றது. உடல் அழிந்துவிட்டால் இதிலே
சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அடுத்த உடலை மாற்றிவிடும் நம் உயிர்.
ஆகவே, அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை
வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்றபின் அந்த மெய்ஞானியின் உணர்வுடன் ஒன்றச்
செய்யும்.
ஆறாவது அறிவினை ஏழாவது நிலையாக ஒளியின் நிலை பெறச் செய்யும்.