ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 29, 2017

நம்மை உருவாக்கியவனை மறந்து” வாழ்ந்தால் என்ன ஆவோம்...?

இன்று சகஜ வாழ்க்கையில் தனக்குள் ஒரு அச்சுறுத்தும் உணர்வையோ, அல்லது கடுமையான பகைமைகளாகி அதனால் ஆத்திரம் வேதனைகளை நுகர நுகர உடலிலே தீராத நோயாகிவிடுகின்றது.

நோயாகி விட்டால் இந்தப் பொருள் எதற்கு? இந்த உடை எதற்கு? இந்த நிலம் எதற்கு? என்று ஒதுக்கும் தன்மை வரும்.

“ஆண்டவன்..,” எப்பொழுது என்னை இந்த உடலை விட்டு அழைத்துக் கொள்வான்? என்று கேட்பார்கள். இதெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று பார்க்கலாம். பெரும் செல்வந்தர்களாகக்கூட இருப்பார்கள்.

ஆனால், கடும் வேதனையால் வாடிக் கொண்டிருப்பவர்கள் தன் இம்சை தாளாது தன் செல்வத்தைப் பார்க்கின்றனரா..,? உடலைப் பார்க்கின்றனரா..,?

இந்த உடலை விட்டு “எப்பொழுது.., இந்த உயிர் வெளியேறும்..,” என்று நினைக்கின்றார்கள்.

இருப்பினும் இவர்கள் தப்ப முடியாது.

“எந்த வேதனை.., இந்த உடலில் உருவாகியதோ..,” இந்த உடலை விட்டு உயிர் சென்ற பின் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கும். அதை உயிர் உணர்த்திக் கொண்டேயிருக்கும்.

“உடல் இல்லை.. என்றாலும்..,” வேதனையை உணர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.

வேதனைகள் தாளாது இந்த உடலை விட்டுச் சீக்கிரம் செல்வதற்காகத் “தற்கொலை செய்து கொள்வேன்” என்று செய்வார்கள். தன்னை எரித்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால், அப்படித் தற்கொலை செய்தாலும் எதன் உணர்வு கொண்டு தற்கொலை செய்தார்களோ இந்த உடலை விட்டு வெளியில் வந்தபின் யார் மேலாவது இவர் பற்று கொண்டிருந்தார் என்றால் என்ன ஆகும்?

“நல்ல மனிதர் இவர்.., இப்படித் தற்கொலை செய்து கொண்டாரே..,” என்று இந்த உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உடலுக்குள் சென்று இவர் பட்ட வேதனையை வெளிப்படுவதைக் காணலாம்.

இதைப் பேய் மணம் என்று உடலுக்குள் சென்றபின் “ஆவி பிடித்துவிட்டது..,” என்றெல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இது தனித்து ஒரு உடலுக்குள் புகவில்லை என்றாலும் “எரித்த உணர்வு” கொண்டு எரிந்து கொண்டேயிருக்கும். நரக வேதனையிலிருந்து தப்பவே முடியாது.

“ஈசனாக இருந்து உருவாக்கிய அவனை மறந்து” மனிதனான பின் தவறு செய்வோம் என்றால் நரக வேதனையும் நரகலோகத்தையும் தான் சந்திக்க முடியும்.

1.உள் நின்று உணரும் அந்த உணர்வின் தன்மையை உடலாக்குவதும் “கடவுளே”.
2.  அதை இயக்கிக் கொண்டிருக்கும் “உயிர் கடவுளே”.
3.  தான் நுகர்ந்த உணர்வை உள் நின்று இயக்கும் செயலாக மாற்றுவது உயிரே.
4. எண்ணத்தால் கவர்ந்த உணர்வினைத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்வதும் “உயிரே”.
5. ஆன்மாவின் நிலைகள் அது உறையும்போது கடவுளாக உள் நின்று அதை உறையச் செய்யும் செயலாகச் செயல்படும் நிலைகளும் “உயிரே”. 

மகரிஷிகள் காட்டிய இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்ந்து கொண்டால் போதும். நாம் வாழ்க்கையில் வரும் தீமைகளைக் குறைத்துப் பழக வேண்டும்; மனதைத் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்; மனத் தூய்மை நமக்கு அவசியம் தேவை

மனத் தூய்மை தேவை என்றால் அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவப் பிரகாரம் காலையில் நீங்கள் எழுந்தவுடன் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த அருள் சக்தி உலகில் உள்ள அனைவரும் பெறவேண்டும் என்று தவமிருங்கள். பிறருடைய தீமைகளோ பகைமைகளோ உங்களுக்குள் வராது. இதைத் தான் ஏகாதசி விரதம் என்பது.