ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2017

விண் சென்ற முதல் மனிதன் - அகஸ்தியனின் ஆற்றலை துருவத்தை எண்ணி எளிதில் பெறமுடியும்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் தன் ஐந்தாவது வயதில் இந்தப் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற்று துருவன் ஆனான்.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் தனக்குள் மோதும் நிலைகளை அதில் உள்ள விஷத்தை நீக்கிவிட்டு ஒளியாக மாற்றுகின்றது.

 இதைப் போன்று துருவன் வான் வீதியில் அவன் உற்றுப் பார்க்கும் உணர்வுகள் அனைத்தையும் விஷத்தை நீக்கும் சக்தியாக அவன் உடலில் விளைகின்றது.

 ஆக, எல்லாவற்றையும் அறியும் சக்தி பெறுகின்றான்.

அவ்வாறு தன் வளர்ச்சியில் பதினாறாவது வயதில் திருமணமாகும் பொழுது தன் மனைவிக்கும் தான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்களை எடுத்துச் சொல்கின்றான்.

தான் பெற்ற சக்தியை அகஸ்தியன் தன் மனைவிக்குப் பாய்ச்சினான். அதன் வழி நஞ்சினை வென்றிடும் ஆற்றலை இருவரும் பெற்று உணர்வின் தன்மை ஒளியின் சுடராக ஒளிச் சரீரம் பெற்றார்கள்.

அவர்கள் இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக்கி இருவரும் எதை உற்றுப் பார்த்தார்களோ அதே எல்லையாக நிலை கொண்டு நம் பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பூமிக்குள் வரும் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். ஒளியின் சிகரமாக வளர்க்கும் தன்மை பெற்றார்கள்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாகி நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றென இணைந்து வாழ்கின்றனர்.

இதைத்தான் “துருவ நட்சத்திரம்” என்பது.

அதில் விளைந்த உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து பிரபஞ்சத்தில் அலைகளாகப் படரச் செய்து கொண்டுள்ளது. ஆனால், பரவும் பகுதியில் அதன் எல்லைப் பகுதியிலிருந்து நுகர்ந்து ஈர்க்கும் சக்தி பெற்ற நமது பூமி சுழலும் பொழுது துருவப் பகுதியில் கவர்கின்றது.

ஏனென்றால், துருவப்பகுதியின் நேராக துருவ நட்சத்திரம் இருப்பதால் பூமி கவர்ந்து அதிகமாகச் செலுத்துகின்றது. துருவ நட்சத்திரம் அந்தத் துருவத்திலேயே தான் இருக்கும்.

நாம் அதிகாலையில் அந்தத் துருவத்தை எண்ணி துருவ நட்சத்திரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் பேரொளியை எளிதில் பெறமுடியும்.

உயிரைப் போன்றே உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானது.

அதைப் பின்பற்றியவர்கள் அனைவரும் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

நாமும் அவர்கள் வழியில் செயல்படுத்தினோம் என்றால் இந்த வாழ்க்கையில் வந்த இருளை மாற்றி உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றி இனி நாம் இந்த உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

மனிதனால் தான் இது சாத்தியமாகும்.