ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2017

"தனுசு கோடி..," என்றால் அதன் உட்பொருள் என்ன?

முந்தைய காலங்களில் வாழ்ந்த பெரியவர்களைப் பார்க்கலாம். ஒரு பெரியவர் அதாவது கணவர் இறந்துவிட்டார் என்றால் அவரின் மனைவியும் சேர்ந்து இறந்துவிடும்.

ஆக, மனைவி இறந்துவிட்டால் என்றால் அதே மூச்சில் இரண்டு பேரும் இறந்துவிடுவார். இப்பொழுது அந்த மாதிரி எங்கே இருக்கின்றார்கள்..?

ஒன்று இரண்டு பார்ப்பதே மிகவும் அபூர்வமாக இருக்கின்றது. ஏனென்றால், அவர்கள் ஒன்றிய உணர்வுகள் கொண்டு வாழ்ந்தவர்கள்.

அவர்கள் உணர்வுகள் ஒளியான பின் சொல்வார்கள்.

என்னுடைய அந்திமக் காலம்.., வந்துவிட்டது. நான் இத்தனை நாளில் உடலை விட்டுப் போகின்றேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லாம் நன்றாக இருங்கள்.

இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு இவ்வாறெல்லாம் சொல்வார்கள்.

காரணம் என்னவென்றால் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அவர்கள் உடலை விட்டுப் பிரியும் நேரம் எதன் உணர்வைப் பெற்றனரோ.., அதை அறியும் தன்மைஅவர்களுக்குள் வருகின்றது.

ஆக, தெரிந்தோ தெரியாமலோ அதிகாலையில் அந்தத் துருவ தியான நேரங்களில் (பிரம்ம முகூர்த்தம்) அவர்கள் தியானம் செய்து.., பழகியவர்கள். பண்டைய காலங்களில் இது இருந்தது.

காலத்தால் இன்று அது மறைந்துவிட்டது.
ஆகவே, இன்று வாழும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நாம் இந்த உடலில் வாழும் காலத்தில் நோயாளியைப் பற்றிக் கேட்கும் பொழுது சிவ தனுசு. உடலில் விளைந்த உணர்வு இன்னொரு மனிதனை வீழ்த்துகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தீமைகளை மாற்றி மாற்றி நம் உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றி மாற்றி இதைப் பெறச் செய்யப்படும் பொழுது நாம் உடலை விட்டுச் சென்றபின் தனுசு கோடி…,”

ஆக, இருளை நீக்கிய விஷ்ணு தனுசு என்ற அந்த உணர்வை நாம் எடுத்து இந்த உயிருடன் ஒன்றி உணர்ச்சிகளைப் பாய்ச்சுவோம் என்றால் தீமைகளை மாற்றிவிடும்.

ஆகவே, இதைப் போன்று நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் தீமை என்று கண்ட பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்து ஒளியின் தன்மையாக மாற்றிட வேண்டும்.

இந்த உடலில் எல்லாவிதமான உணர்வுகள் இருந்தாலும் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நாம் தனுசு கோடி..,” என்ற நிலையில் எல்லா உணர்வுகளும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறும் தன்மை பெறவேண்டும்.