ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2017

மரணமடையும் நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் காத்த நிகழ்ச்சி

ஒரு சமயம் ஒரு பெண்ணுக்குச் சோக நீர் போன்று உடலில் வந்ததும் வயிறு உப்புசமாகிவிட்டது. உடலில் எந்த நோயும் இல்லை.

ஒரு ஆன்மா அந்த உடலுக்குள் ஆனபின் அந்த உடலில் எப்படி வயிற்றுக்குள் பொறுமலானதோ அதே உணர்வுகள் இந்தப் பெண்ணுக்கு இங்கே வருகின்றது.

ஆனால், அவர்கள் எல்லா வைத்தியமும் பார்த்துவிட்டு “ஒன்றும் முடியவில்லை..,” என்று கைவிட்டார்கள்.

என்னிடம் வந்து கேட்டார்கள்.

இன்னொரு ஆன்மா இங்கே இருக்கின்றது. அந்த ஆன்மாவின் வலுவைக் குறைக்க வேண்டுமென்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் அனைவரும் எண்ணி அதன் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டும்படிச் செய்தேன்.

ஆக, குணமாகி நல்ல நிலைகள் வந்தது.

ஓரளவிற்கு வலிமை பெறும் பொழுது குடும்ப வாழ்க்கையில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே.., நான் என்ன பாவம் செய்தேன்..?” என்ற உணர்வை “மீண்டும்” அந்தப் பெண் நினைவாக்குகின்றது.

குணமாகி வந்த நிலைகளில் “எனக்கெல்லாம்.., இப்படிப்பட்ட அவஸ்தைகள் வந்துவிட்டதே…” என்ற உணர்வை எண்ணும்பொழுது மறுபடியும் பதிந்த உணர்வுகள் கிளர்ந்துவிட்டது.

மண்ணுக்கள் மறைந்த வித்து மழை நீரைக் கண்டபின் கிளர்ந்தெழுவது போல் இந்த உணர்வின் எண்ணங்கள் வரும்பொழுது உணர்வைக் குவித்தபின் தன் செயலே இல்லாதபடி அந்தப் பெண் மயங்கிவிட்டது.

டாக்டர்களிடம் சென்று பார்க்கப்படும் பொழுது “இது.., விசித்திர நோயாக இருக்கின்றது.., என்ன செய்வது…?” என்று தெரியவில்லை என்கிறார்கள்.

தன்னுடைய நிலைகளில் செயலிழந்து பேச்சு மூச்சோ எழுந்து நடக்கும் நிலைகளோ அங்கங்கள் அனைத்தும் விரிந்த நிலையில் கிடக்கின்றது. “என்ன செய்வது?” என்று மற்றவர்கள் துடிக்கின்றனர்.

டாக்டர்கள் கைவிட்டபின் அங்கிருந்து கொண்டே எனக்குப் ஃபோன் செய்தார்கள்.

ஃபோனை அந்தப் பெண்ணின் செவிகளில் வையுங்கள் என்று சொன்னேன். அருள் மகரிஷிகளின் உணர்வைச் சொல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் செவிகளில் விழுந்தபின் அந்த உணர்வு கொண்டு “ஓ…ம்…” என்று சொல்லத் தொடங்கியது.

அங்கே அந்த டாக்டரும் இருக்கின்றார்.

இதுவரையிலும் பேச வைக்க முடியவில்லை. ஆனால், (ஃபோன் மூலம்) இந்த ஒலியைக் கேட்டபின் பேசுகின்றது, “என்ன.., விசித்திரமாக இருக்கின்றது” என்கிறார்.

பிறகு சிறிது நேரம் பொறுத்திருங்கள். அதற்கு முழுச் சுய நினைவு வரட்டும். வந்தபின் அந்தப் பெண்ணையே ஃபோன் செய்யச் சொல்லுங்கள் என்று சொன்னேன்.

அதே மாதிரி அந்தப் பெண் எழுந்து வந்து பேசுகின்றது.

என் நினைவினை இழக்கும் நிலைகள் எது..,? என்றே எனக்குத் தெரியவில்லை என்னை இயக்கிவிட்டது. ஆக, “நான் மரணமடைவேன்..,” என்ற உணர்வு மட்டும் தோன்றுகின்றது.

ஏனென்றால், மடிந்த உணர்வின் தன்மை இது மடியச் செய்யும் உணர்ச்சிகளை அந்த பெண்ணுக்குள் தூண்டுகின்றது என்ற நிலையை அங்கே தெளிவுபடுத்தினேன்.

பின் இதிலிருந்தது விடுபடும் என்ற நிலையை எல்லோருக்கும் சொல்லி அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறும்படிச் செய்தபின் அந்தப் பெண் தப்பித்தது. இது நடந்த நிகழ்ச்சி.

இவ்வாறு, தவறு நாம் செய்யாமலேயே பண்பால் அன்பால் நாம் மனித வாழ்க்கையில் அன்பு கொண்டு வாழ்ந்தாலும் மற்றவர்கள் உடலில் சில நோய்கள் உருவாக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இங்கே நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

நாம் அவர்களுக்கு உதவி செய்தாலும் நல்லதானதும், அடுத்து “மகராசி.., எனக்கு நல்ல உதவி செய்தாள்” என்ற இந்த எண்ணம் வரும் பொழுது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அந்த உடலில் “எந்த நோய்” இருந்ததோ அந்த நோயின் தன்மை இந்த உடலிலும் உருவாகின்றது.

இதைப் போன்று மனிதன் தவறு செய்யாமலேயே நமக்குள் இன்னொரு ஆன்மாவின் உணர்ச்சிகள் வளர்ச்சி பெறும் பொழுது அந்த ஆன்மாவை அழைத்து நமக்குள் நல்ல அணுக்களின் தன்மையை இழந்து விடுகின்றது.

ஆகவே, இதைப் படித்துணர்ந்தோர் உங்கள் வாழ்க்கையில் எத்தகையை தீமைகளைப் பார்க்க நேர்ந்தாலோ அல்லது கேட்டறிந்தாலோ அடுத்த கணம் அதை உங்கள் உடலுக்குள் செல்லாது தூய்மை செய்து கொள்ளுங்கள்.

ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு நிமிடம் செய்தபின் யாரைப் பற்றிக் கேட்டுணர்ந்தீர்களோ அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் வேதனைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி பெறவேண்டும் என்று உங்கள் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

“மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணுங்கள்.., உங்கள் உடல் நலமாகும்” என்று சொல்லுங்கள். அதைப் போல அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் வேதனைகளும் அகலும். அவர்களும் உடல் நலம் பெறுவார்கள்.

அதே சமயத்தில் அவர்கள் வேதனை உணர்வுகள் உங்களுக்குள் வராது. “உங்களை இயக்காது”. உங்கள் ஆன்மாவும் உடலும் தூய்மை ஆகும். இதற்குப் பெயர் தான் பிரதோஷம் என்பது.