ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2017

“குரு பிரம்மா.., குரு விஷ்ணு.., குரு சாட்சாத் மஹேஸ்வரா…”

பையனோ தாயோ அல்லது தந்தையோ குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பினும் குடும்பத்தில் ஏவரேனும் ஒருவர் பிறர் தவறு செய்யும் உணர்வினைத் தனக்குள் பதிவு செய்துவிட்டால் கோப உணர்வின் கார வித்து விளைந்து விடுகின்றது.

பையனாக இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

கோபமாகப் பேசிய உணர்வுகள் இவனுக்குள் அதிகமாகக் கலந்துவிட்டால் அவன் போகும் பொழுதெல்லாம் அடிக்கடி யாரைத் தவறு செய்தானோ அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோபத்தின் உணர்வுகள் தூண்டும்.

ஏனென்றால் நாம் பொது இடங்களில் பழகும்பொழுது அவனின் தவறை எண்ணும் பொழுதெல்லாம் அவன் செய்த தவறின் தன்மையே நமக்குள் விளைந்து கொண்டே இருக்கும்.

அப்பொழுது அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும்.

அந்த உணர்ச்சியுடன் பையன் வீட்டிற்குள் வந்தவுடனே ஒரு வேலையின் காரணமாக அவன் அப்பா கூப்பிட்டு “நீ சிறிது அதைப் பார்த்துக்கொள்..,” என்று சொல்வார்.

பையன் உடனே “சரி..ரிரி..,” என்று கார உணர்வுடன் சொல்வான்.

பையன் என்னடா.., நம்மிடம் மரியாதை இல்லாமல் பேசுகின்றான்? என்று அப்பா எண்னுவார். இந்தச் சந்தர்ப்பம் பையன் தவறு செய்யவில்லை.

ஒரு குழம்பு வைக்கும் பொழுது காரத்தைப் போட்டபின் அந்தக் காரத்தின் உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றதோ இதைப் போன்று தான் அங்கே இயக்கமாகின்றது.

பையன் நல்லவனாக இருந்தான். ஆனால், அவன் தொழில் செய்யும் இடத்தில் ஒருவன் தவறு செய்கின்றான்.

தவறு செய்பவனைப் பார்த்தபின் அவன் இப்படித் தவறு செய்து கொண்டிருக்கின்றான் என்று வேதனைப்படுகின்றான். வேதனை என்றால் நஞ்சு. நஞ்சு கலந்து விட்டால் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்.

பின், அவன் செய்யும் தவறைப் பார்க்கும் பொழுது இந்த விஷத்தின் தன்மை உச்சகட்டம் அடைகின்றது. கோபமாக மாறுகின்றது.

அந்த உணர்வின் வேகம் அந்தக் கோபத்தின் தணல் அடையப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் தன் ஆன்மாவில் பெருக்கி விடுகின்றது. இவ்வாறு தொழில் செய்யும் இடத்தில் “அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம்..,” அந்த எண்ணங்கள் இயக்கும்.

இவன் “அயோக்கியப் பயல்…, எப்பொழுது பார்த்தாலும் தவறு செய்து கொண்டிருப்பான்..,” என்ற நிலைகள் வரும்.

ஆனால், அவன் (முதலில்) கோபித்தவனோ இவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “பெரிய.., யோக்கியன் மாதிரிப் பேசுகின்றான் பார்..,” அடுத்து ஜாடையில் பேச ஆரம்பிப்பான்.

இவனை எண்ணும் பொழுது இரண்டு உணர்வுகளும் மாறி மாறி மாறி இந்த உணர்விற்கு அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வாக அது பையன் உடலுக்குள் வளர்ச்சி அடைந்துவிடுகின்றது.

அதனுடைய வளர்ச்சிகள் அதிகமாகும் பொழுது ஆன்மாவில் அது பெருகிவிடுகின்றது. அதன் வளர்ச்சியின் தன்மை அவனிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு பரமாத்மாவில் பெருகுகின்றது.

ஆனால், அவன் எண்ணிய உணர்வு அவனுக்குள் ஒரு வித்தாகின்றது.

இப்படி இவர்கள் உரையாடும் உணர்வின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது கண்கள் அந்தக் காரமான வேதனையான உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கவர்ந்து தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.

பின் உயிரின் நிலைகள் “இழுக்கும் பொழுது..,” இது உடலுக்குள் உள்ள ஜீவான்மாக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது.

ஏனென்றால், விஷ்ணு வரம் கொடுக்கின்றான். தனக்குள் வளர்க்கப்பட்ட தன் பிள்ளைக்கு “பிரம்மா” அவன் சிருஷ்டிக்கும் உணர்வுகளுக்கு விஷ்ணுவே அவனுக்கு ஆகாரம் கொடுத்து அதனின் உணர்வின் தன்மையை வளர்வதற்குத் தன் பிள்ளைக்கு உபகாரம் செய்கின்றான்.

அவனால் உருவான உணர்வின் தன்மை உடலான சிவனுக்குள் அந்த எரிச்சலூட்டும் உணர்வின் செயலாகவே இது மாறுகின்றது. ஆக, இந்த உயிரின் இயக்கம் விஷ்ணு.

“குரு பிரம்மா.., குரு விஷ்ணு.., குரு சாட்சாத் மஹேஸ்வரா…”

ஆகவே, எல்லாவற்றையும் நமக்குள் உருவாக்குவது “உயிர்..,” என்று குரு பிரம்மா குரு விஷ்ணு குரு.., “சாட்சாத் இந்த உயிரின் தன்மையே குருவாகின்றது..,” இது சாட்சாத் மஹேஸ்வரா.

சர்வத்தையும் எனக்குள் உருவாக்கும் தன்மை பெற்றது (உயிர்) என்று மிகவும் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று சொல்வார்கள். ஆனால், எதைக் குறிக்கின்றனர்..,? எதைச் சொல்கின்றனர்..,? எதற்காகச் சொல்கின்றனர்..,? என்ற நிலையை இதை நாம் உணர்வதில்லை.

சாதாரண வழக்கில் இன்று சாஸ்திர ரீதியாகப் பலர் இதைப் படித்திருந்தாலும் இதைப் போல குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா என்று யாரை எண்ணுகிறார்கள்..,?

“உயிரை” எண்ணுவதில்லை.

கடவுள் என்ற எண்ணத்தில் புறத்தால் காட்டிய அந்த உணர்வை விஷ்ணு என்று சிலை வைத்ததை எண்ணுகின்றார்கள். குரு பிரம்மா என்று நான்கு தலை வைத்த சிலையைப் பார்த்து அது தான் பிரம்மா என்று எண்ணுகின்றார்கள்.

“எண்ணும் பொழுது” - நான்கு நமக்குள் அந்த உணர்வின் தன்மை சக்தியாக விளைகின்றது என்பதை மறந்துவிடுகின்றார்கள்.

இப்பொழுது ஒரு கோபமான உணர்வை எண்ணும்பொழுது குரு பிரம்மமாகின்றது. குரு விஷ்ணு தனக்குள் அது குரு பிரம்மமாக மாற்றுகின்றது. கார உணர்ச்சி நமக்குள் உருவாகின்றது.

தனக்குள் உள் செல்லும் பொழுது குரு மஹேஸ்வரா. தனக்குள் அதை உருவாக்கும் செயலாக நமக்குள் அந்த உருவைப் பெருக்கும் தன்மை வருகின்றது.

ஆனால், நாம் எதை எண்ண வேண்டும்..,? குரு பிரம்மமாக எதை உருவாக்க வேண்டும்..,? குரு விஷ்ணுவாக அவனிடம் எதைக் கேட்க வேண்டும்..,? அந்த விஷ்ணுவிடம் வரம் கேட்பது எதுவாக இருக்க வேண்டும்..,?

இதை உணர்த்துவதற்குப் பல நிலைகள் காட்டினாலும் அதை நாம் இது வரையிலும் “மூலத்தை.., அறியாது” ஆக துவைதம் என்று உருவத்தைக் காட்டிய பின் சிலையை வடித்து வைத்து அந்தச் “சிலையைத்தான் நாம் கடவுளாக” மதிக்கின்றோம்.

அதற்கு நைவேத்தியம், சாங்கியம் செய்து அவனுக்குப் படைத்துவிட்டால் அவன் எல்லாமே பார்த்துக் கொள்வான் என்று சாங்கிய சாஸ்திரத்தில் நாம் நாட்டம் செலுத்திக் கொண்டுள்ளோம்.

உருவம் அது துவைதம். காவியமாகத் தீட்டிய அதனின் நிலைகளை “அதைப் பெறவேண்டிய எண்ணங்களை” எண்ணினால் அத்வைதம் (சூட்சமம்).

அந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் பொழுது குரு விஷ்ணு குரு பிரம்மமாக அந்த உணர்வின் நல்ல செயல்களை நமக்குள் மாற்றுகின்றது.

குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா.., சர்வத்தையும் நமக்குள் உருவாக்கும் உடலாக அமைத்து அதனின் நிலையாக நாம் உருவின் தன்மையை அடைகின்றோம். தெளிவாக எடுத்துரைத்த இந்த நிலையை நாம் தெளிந்திடல் வேண்டும்.

முதலில் சொன்ன நிலையில் தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் தீமைகள் வீட்டுக்குள்ளும் வந்துவிடுகின்றது.

தாய் தன் பையனிடம் சொல்லி “நீ இதைச் செய்யப்பா..,” என்று ஒரு வேலையைச் சொன்னால் அவன் என்ன சொல்வான்?

“நீ என்ன..,? சும்மா எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றாய்..,? என்று தாயிடம் வேகமாக எதிர்க்க ஆரம்பித்துவிடுவான்.

தாய் சாந்தமாகச் சொல்லும் பொழுது இந்தக் காரம் சாந்தத்திற்கு எதிர்ப்பு நிலை. அது ஏற்றுக் கொள்ளாது.

உடனே தாய்.., “ஏண்டாஆஆ.., இப்படிப் பேசுகின்றாய்..,? சாந்த உணர்வுடன் சொல்லும்.

“ஏண்டா இப்படிப் பேசுகின்றாய்” என்ற சொல் வரும் பொழுது நீ எப்பொழுது பார்த்தாலும் “நச்சரித்துக் கொண்டே இருக்கின்றாய்..,” என்று தாயை வெறுக்க ஆரம்பிப்பான் பையன்.

குரு பிரம்மா. அதாவது “நாம் எண்ணியதை” அது மீண்டும் அதிகமாக “குரு விஷ்ணு - குரு பிரம்மமாக மாற்றிவிடுகின்றது”.

அதனின் வளர்ச்சியின் தன்மை பெருக ஆரம்பிக்கும்.

குரு மகா.., அந்த உணர்வின் தன்மை “சாட்சாத் மஹேஸ்வரா”. அதை எல்லாம் (சர்வத்தையும்) மஹேஸ்வரனாக நமக்குள் இருந்து நாம் எண்ணியது ஒவ்வொன்றையும் அது உருவாக்குகின்றது.

குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாட்சாத் மஹேஸ்வரா, “வெறும் சொல்லால் அல்ல”,

எதை விஷ்ணுவிடம் வரம் கேட்க வேண்டும்? எதைப் பிரம்மமாக்க வேண்டும்? எதை நமக்குள் சாட்சாத் மஹேஸ்வரனாக நமக்குள் உருவாக்கும் சக்தியாக மாற்ற வேண்டும் என்ற நிலையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

தாய் சொன்னாலும் இதே மாதிரி அந்தக் கார உணர்வுகள் சொன்னவுடன் இந்த நாதம் என்ன செய்யும்?

நம் வாயினுள் ஒரு காரமான பொருளைப் போட்டவுடன் என்ன சொல்கின்றோம்..,?

“உஷ்ஷ்., ஆ..ஆ..,” என்று அலறுவது போல இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டவுடன் உணர்வுகள் உராய்ந்து “சாம..,”

அதனின் உணர்வின் நாத இயக்கமாக இயக்கும். நாதமாக இயக்கப்படும் பொழுது “ஏண்டா.., இப்படிச் செய்கின்றாய்.?” என்று சொல்லும் அந்தத் தாய்.

இதை அந்தப் பையனின் தந்தை பார்த்தார் என்றால் இந்த உணர்வின் தன்மை அவருக்குள் போய் “ஏண்டா., நீ இந்த மாதிரியெல்லாம் அம்மாவிடம் பேசுகின்றாய்..?” “அம்மா என்னடா உன்னைத் தவறாகச் சொன்னது?” என்பார்.

நீங்கள் எப்பொழுது பார்த்தாலும் என்னை “எதிரியாகத்தான்..,” கருதுகின்றீர்கள் என்பான் பையன்.

அப்பொழுது எதிரியாகப் பதிவு செய்து கொள்கின்றீர்கள். அவன் எதைச் சொல்ல வந்தாலும் நல்லதை ஏற்றுக் கொள்ளாது.

இங்கே எதிரியின் தன்மை பகைமையாகும் பொழுது தாயும் தந்தையும் கடவுள் என்ற நிலைகளை மாற்றிவிடுகின்றது. “தன்னைக் காக்கும் தெய்வம்..,” என்ற நிலைகளை இங்கே இழக்கச் செய்துவிடுகின்றது.

ஒரு சுவையான பதார்த்தத்தில் கார உணர்ச்சியின் தன்மை அதிமாகிவிட்டால் அதைத் தூக்கியெறியும் நிலையே வரும்.

அதைப் போன்று தாய் என்ற நிலையோ தந்தை என்ற நிலையோ இங்கே செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஏனென்றல் பொது வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமையான உணர்வின் தன்மை தனக்குள் வளர்க்கப்படும் பொழுது குரு விஷ்ணு குரு பிரம்மமாக மாறி குரு சாட்சாத் மஹேஸ்வரனாக அதனின் வளர்ச்சியின் தன்மை அடைகின்றது.

நாம் எண்ணிய உணர்வை கண் நமக்கு எப்படி வழி காட்டுகின்றது?

தாய் மீது வெறுப்பாகிவிட்டால் கண் அதைப் பார்த்தவுடன் அந்தத் தாய் சொன்ன நினைவின் அலைகளை இங்கே காற்றில் இருப்பதைக் கவர்கின்றது.

பார்ததபின் அந்த வெறுப்பின் உணர்வைச் சுவாசித்துத் தாய் நல்லதைச் சொன்னாலும் கேட்காதபடி “தலையைத் திருப்பிக் கொண்டு” போகும்.

“இதைச் செய்டா..,” என்று தாய் சொல்லும்.

“ஊ…ஹ்ம்..,” என்று தான் சொல்வான். அப்புறம் நான்தான் “சரி..,ரீ..,” என்று சொல்லிவிட்டேனே அப்புறம் ஏன் இன்னும் திரும்பச் சொல்கின்றாய் என்று தாயிடம் எதிர்த்தே பேசுவான் பையன்.

அவன் தவறு செய்யவில்லை. தனக்குள் வளரும் அந்த வித்தின் தன்மை “அது” அவனுக்குள் வளரத் தொடங்கிவிடுகின்றது.

அதே சமயம் தந்தையும் “தாய் என்னப்பா சொன்னது..,” என்று பையனிடம் கேட்டால் பையன் என்னை எதிரியாகவே நீங்கள் கருதுகின்றீர்கள் என்று சொல்லித் தந்தையையும் வெறுக்கத் தொடங்குவான்.

ஏனென்றால், திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். நம் உணர்வின் செயலாக்கங்கள் “உயிர் நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது..,” என்பதைத் தெளிவாக நீங்கள் அறிதல் வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

இந்தத் தத்துவத்தை நாம் புரிந்து கொண்டால் மகரிஷிகள் காட்டிய உண்மைகளை நாம் எளிதில் காணலாம்.