ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2026

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்

சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்


ஒரு நண்பன் நம்மிடம் துன்பம் என்று சொல்லும் பொழுது அதைக் கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராத வண்ணம் தடுக்க வேண்டும்.
 
1.இரும்பைப் புடம் போட்டு எப்படிப் பஸ்பமாக்குகின்றோமோ
2.அதனின் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல் அதனின் ஆற்றலை ஆக்கச் சக்தியாக மாற்றுவது போல
3.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகளை உருவாக்காதபடி
4.இருளைப் போக்கி விஷத்தைப் புடமிட்டு உணர்வின் ஆற்றலைப் பெருக்கிமாமகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்த உடனே
5.புடம் போட்டு எடுத்தது போன்று உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்றது.
6.நீங்கள் எண்ணிய பொழுதெல்லாம் அந்தச் சக்தியை பெற முடியும்.
 
ஆண்டனாக்களைச் சரியான முறையில் பொருத்தி வைத்த பின் வெகு தொலைவில் இருந்து வரும் அலைகளை டிவி கவர்ந்து தெளிவாகக் காட்டுகிறது.
 
அதைப் போன்று உங்கள் நினைவால் மகரிஷிகளை எண்ணி ங்கும் பொழுது அந்த உணர்வின் சக்தியை நீங்கள் கவர்ந்து நீங்கள் செய்த நன்மையின் சக்தியை என்றுமே நிலைத்திருக்கச் செய்ய முடியும்…”
 
1.உங்களை அறியாது புகுந்த விஷத்தின் தன்மை அதனுடைய தீய விளைவுகளை இயக்காது உங்களுடன் ஒத்துழைத்து
2.மெய் உணர்வுகள் மெய் ஞானிகளின் அருள் உணர்வுடன் இயக்கச் செய்யும் நிலையே இந்த ஆத்ம சுத்தி.
 
ஆகவே ஒவ்வொருவரும் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசினாலும் அடுத்த கமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்துங்கள்.
 
1.ஒரு நிமிடம் கண்களிலே அவ்வாறு ஏங்கிப் பெறுவதும்
2.அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு நிமிடம் உங்கள் உடலுக்குள் செலுத்தித் தியானிக்கும் போது
3.இதற்கு ஆத்ம சுத்தி என்று பெயர்.
 
வீட்டை விட்டு வெளியே எங்கு சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்.
 
எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவர்களை எண்ணி என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என் சொல் இனிமை பெற வேண்டும் என்னைப் பார்க்கும் பொழுது நன்மை செய்யக்கூடிய எண்ணங்கள்அவர்களுக்கு வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
உங்கள் கடைக்குச் செல்கிறீர்கள் என்றால் ஆத்ம சுத்தி செய்து விட்டு என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருமே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
1.இதைப்போல் ஆத்ம சுத்தி செய்து அந்த உணர்வோடு கடையில் இருக்கும் பொருள்களைப் பார்த்து
2.இதைப் பயன்படுத்துவர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் மன வளமும் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணிக் கடை வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.
 
தொழில் செய்யும் இடத்திலும் அங்கே அமர்ந்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு நம்மிடம் வேலை செய்பவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் பார்வையால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் செய்யும் தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாகவும் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். என் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும் அவர்களைப் புனிதப்படுத்தும் செயலாக அமைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
மேல் அதிகாரிகளுக்கும் இதே போன்று எண்ணும் பொழுது என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் செயல் அவரைப் போற்றும் நிலையாக வர வேண்டும். என் சொல் அவருக்கு இனிமை பெற வேண்டும் அவர் என்னைப் பார்க்கும் பொழுது நல்ல செயல்கள் செய்து தர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
நாம் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாம் தொழிலைச் செயல் படுத்த வேண்டும்.
 
நோயாளிகளைப் பார்த்தால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய் நீங்கும் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினை அங்கே பதிவு செய்யுங்கள்.
 
குழந்தைகள் செயலைப் பார்த்து வெறுப்பு வரும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற்று அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்
2.கல்வியில் சிறந்த குழந்தைகளாக வளர்வார்கள்
3.என் பார்வை அவர்களை அந்த நிலைக்கு உயர்த்தும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.
4.ந்த உணர்வோடு குழந்தைகளிடம் பேச முற்படுங்கள்.
 
கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒருவருக்கொருவர் பாய்ச்சுங்கள்.
 
பெண்கள் சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவருக்கும் உடல் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் செயல்படுத்துங்கள்.
 
ஆகாரத்தைப் பரிமாறும் பொழுதும் நான் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவரும் மன பலம் உடல் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பரிமாறுங்கள்.
 
சாப்பிடுபவர்களும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நான் சாப்பிடும் ஆகாரம் என் உடலில் நலம் பெறும் சக்தியாக அந்த மகரிஷிகளின்ருள் சக்தியாக அது மலர வேண்டும் என்று எண்ணி உட்கொள்ளுங்கள்.
 
இரவிலே படுக்கச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்துவிட்டு தையெல்லாம் நல்லதாகப் பெற வேண்டுமா
1.உங்கள் உணர்வின் வட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும்.
2.சப்தரிஷிகளின் அருள் ஒளி என் ஈர்ப்பு வட்டத்திற்குள்ளேயே இருக்க வேண்டும்.
3.என்றுமே அந்த உணர்வின் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று எண்ணிவிட்டுப் படுங்கள்.
 
காலையில் எழுந்திருக்கும் பொழுது ஆத்ம சுத்தி செய்து என் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும் என் சொல் கேட்போர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். என் பேச்சைக் கேட்போர் மெய் ஒளியாகப்டர வேண்டும் நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் எண்ணி அந்த உணர்வோடு எழுந்து வேலைகளைச் செய்யுங்கள்.
 
நம்மிடம் பொருள் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பத் தரவில்லை என்றால் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் வியாபாரம் செழித்து வளர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும் நமக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் பால் செலுத்துங்கள்.
 
இது போன்று வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைச் சந்தித்தாலும் கோபமோ வெறுப்போ வந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்க ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
 
பின் யார் மேல் கோபமோ வெறுப்போ வருகின்றதோ என் பார்வை அவரை நல்லதாக வேண்டும் அவர் செயல்கள் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
1.த்ம சுத்தி என்ற நிலையில் அடிக்கடி நாம் விண்ணை நோக்கி ஏங்கி வரும் பொழுது
2.இந்த வாழ்க்கையில் சப்தரிஷி மண்டல உணர்வுடன் நாம் கலக்கின்றோம் அதை நம் உடலுக்குள் சேர்க்கின்றோம்.
 
நம் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் ந்த நோயை மறந்து விடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும் உடல் நோய் நீங்க வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்னைப் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும் அந்தச் சக்தி எனக்குள் ஓங்கி வளர வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே என்னுள் நிலைத்திருக்க வேண்டும் நோய்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
எந்த இடத்தில் உடலில் அந்தப் பாதிப்புகள் இருக்கின்றதோ அங்கே நினைவைச் செலுத்தி நோய் நீங்க வேண்டும் நீங்க வேண்டும்…” என்று எண்ணுங்கள்.
 
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் உடல் நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது
2.இப்பொழுது நான் நலம் பெற்று வருகிறேன்
3.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் எண்ணங்கள் சுழல்கின்றது
4.என் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறுவேன்
4.என் உடலில் மகிழ்ச்சி பெறுவேன் என்று இது போன்று எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.
 
இவ்வாறு நாம் எண்ணிக் கொடுப்பது அனைத்தையும் இந்த உயிர் படைக்கின்றது இயக்குகின்றது உடலாக்குகின்றது விளைய வைக்கின்றது இந்த உணர்வையே தன்னுள் இணைத்துக் கொள்கின்றது. அதனுடைய வளர்ச்சியில் நம்மை ஒளிச் சரீரமாக நிலைக்கச் செய்கின்றது.
 
ஒவ்வொரு நிமிடமும் நாம் வெளிப்படுத்தும் இத்தகைய மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. இந்தக் காற்று மண்டலத்தில் அது பெருகுகின்றது. அனைவருக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.
 
இதைத் தொடர்ந்து செய்து வர சப்தரிஷி மண்டல லைகள் நமக்குள் பெருகிக் கொண்டே வருகின்றது.
 
1.இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது வெளியில் செல்வோம் என்று தெரியாது.
2.ஆகவே உடலில் இருக்கும் பொழுதே நம் வாழ்க்கையைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டால்
3.இந்த நினைவுடனே நாம் அங்கே செல்ல முடியும்.