
பச்சிலைகளின் மகிமை
டேய் இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்றார் குருநாதர்.
என்ன சாமி…? பச்சிலைக்கு வாய் இல்லையே…! அது எப்படிப் பேசும்…? என்றேன். ஒன்றல்ல… இரண்டல்ல… எத்தனையோ பச்சிலைகளைக் காண்பித்துப் பேசுமாடா…? என்று அவர் கேட்பார். எப்படி சாமி பேசும்…? என்று நான் கேட்பேன்.
முதலில் ஒரு நல்ல பச்சிலையைக் கொடுத்து என்னை நுகரும்படி செய்தார். எப்படி இருக்கிறது…? என்றார்.
1.சாமி…! “கம…கம…” என்று இருக்கிறது. உடல் “ஜம்” என்று
இருக்கின்றது என்று சொன்னேன்.
2.இப்போது யாருடா பேசியது…? என்கிறார்.
2.இந்த வாசனை உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை
உன்னைப் பேச வைக்கிறதா இல்லையா…? என்றார்.
இப்படியே சொல்லிக் காட்டுக்குள்
கூட்டிக் கொண்டு செல்கிறார்.
அடுத்து…
வேறு ஒரு பச்சிலையை நுகரச் சொன்னார். நுகர்ந்தேன்… தலை சுற்ற ஆரம்பித்தது. சாமி…! தலை சுற்றுகிறது… எங்கேயோ என்னைக் கொண்டு
செல்கின்றது என்றேன்.
1.இப்போது யாருடா அதைச் செய்வது…?
2.அந்தப் பச்சிலை தானே…!
என்று கேட்டார்.
உயிரினங்களில் பச்சிலைகளைச் சாப்பிடுகின்ற வெள்ளாட்டைப்
பாருங்கள். எருக்கலையைச்
சாப்பிட்டால் வயிறு வெந்துவிடும். அதே சமயத்தில் விஷ முள்
பச்சிலையை எடுத்து அரைத்து மேலே தேய்த்தால் கை கால் எல்லாம் சரியாக வராது செயலிழந்து
விடும். தலையில் தேய்த்தால் பித்துப் பிடித்தது போல்
ஆகிவிடும்.
என் தலையிலே அதைத் தேய்த்தார்…! பாருடா என்ன செய்கிறது…? என்றார். தலை சுற்றிக் கொண்டே இருக்கின்றது புத்தி பேதமாவாது
போன்று ஆனது.
1.மீண்டும் உனக்கு நல்ல நினைவு வருவதற்கு
நினைவூட்டச் செய்வது யார்…?
2.அந்தப் பச்சிலை தானே…! என்றார்
குருநாதர்.
பரிணாம வளர்ச்சியில் புழுவில் இருந்து மனிதனாக வரும் நிலையில்
ஒன்றை ஒன்று கொன்று தின்று கொன்று தின்று ஒன்றுக்கு இரையாகி இப்படித் தான் இன்று மனிதனாக வந்துள்ளோம்.
உதாரணமாக பல்லியினுடைய மூத்திரம் நம் மீது பட்டால் மேலெல்லாம் பொறிகளாகிக்
கொப்புளமாகிவிடும். உணவுப் பொருளில் பல்லி
விழுந்து விட்டால் அதை நாம் சாப்பிட்டால் நம்மைக் கொன்று விடும்.
ஆனால் அந்த விஷத்தன்மை உருவாகி அந்தப் பல்லிக்கு
அது பாதுகாப்பு ஆகிறது. இருந்தாலும் அந்தப் பல்லியைக் கோழி
உட்கொள்கின்றது… மற்ற சில பறவைகளும் சாப்பிடுகின்றது. அதனின் உறுப்புகள் இந்த விஷத்தை அடக்கக் கூடிய சக்தி இருப்பதால் அதை ஒன்றும்
செய்வதில்லை.
நீ சாப்பிடுடா பார்க்கலாம்…! என்று என்னைச் சாப்பிடச் சொல்கின்றார்.
சாமி…… என்றேன்.
நான் சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று சொன்னாய் அல்லவா கேளு…! என்கிறார்.
நான் பிள்ளை குட்டிக்காரன்…
என் உயிர் போய்விடும். என்று சொன்னேன். ஆனால் அவர் விடவில்லை. அதைச் சாப்பிடும் படிச் செய்து அந்த உணர்வு என்ன செய்கிறது…? என்று
காட்டுகின்றார்.
1.அதற்குப் பாதுகாப்புக்காகப் பச்சிலை ஒன்றை உனக்குக்
கொடுக்கிறேன்
2.கையில் கொடுத்து… இந்த
பச்சிலையைச் சாப்பிட்டால் உன்னை அந்த விஷம் எதுவும் செய்யாது என்றார்.
இப்படி அந்தப் பச்சிலைகளுக்கு உண்டான மகிமையைக் காட்டுகிறார். அந்தப் பச்சிலையை நுகர்ந்து பார்த்த பின்
விஷங்களை அது முறிக்கின்றது.
ஆக… அந்தப் பச்சிலைகளின்
சக்திகளை எல்லாம் நான் சுவாசிப்பதற்காக வேண்டி
1.ஒரு கட்டுக் கணேஷ் பீடியை வாங்கிக் கொடுத்துப்
பற்ற வைத்து ஊதுடா…! என்கிறார்.
2.கணேஷ் பீடி என்றால் கணேசன்…! கணங்களுக்கு எல்லாம் ஈசன் என்று அவன் உணர்வுகளை நீ நுகர்ந்தால்
3.கணங்களுக்கு ஈசனாக உற்பத்தி செய்வான்டா…! என்று சொல்லி… ஒரு கட்டுப் பீடியைக் குடிடா என்று
சொல்கின்றார்.
நீ அப்படிச் செய்தால் கணங்களுக்கு ஈசனாக மாறும் என்கிறார். ஏனென்றால் பைத்தியக்காரத்தனமாகத் தான்
சொல்வார்.
அந்த உணர்வுகளை எடுத்து நுகர்ந்தவுடன்…
1.யாரெல்லாம் உடல் நலமில்லாதபடி நோய்வாய்ப்பட்டுள்ளார்களோ
2.அவர்களுடைய நோயெல்லாம் போக வேண்டும்…! “ஊதுடா…” என்று சொல்கின்றார்.
அவர்களை நினைத்து இதைச் செய்த பின் அவர்கள் வீட்டிலே இந்த பீடி
வாசனை வருகிறது. அந்தச் சமயத்தில்
நான் சுற்றுப்பயணம் செல்லும் பொழுது சாமி வந்து விட்டார் என்று சிறிய குழந்தைகள் எல்லாம்
சொல்வார்கள்.
1.அங்குள்ளவர்களுக்கு நோய் இருந்தால் அது உடனே நீங்குகிறது.
2.இப்படித் தான் பச்சிலைகளின் ஆற்றலை எமக்கு அனுபவபூர்வமாகக்
கொடுக்கின்றார் குருநாதர்.